பாகிஸ்தானில் அலறவிடும் இந்தியாவின் "ரா" அமைப்பு? உள்ளே வரும் அமெரிக்கா- பரபர கருத்து! என்ன நடக்கிறது
டெல்லி: பாகிஸ்தான் நாட்டில் குறிவைத்து இந்தியா மிஷன்களை நடத்துவதாகவும் இதன் மூலம் பலர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் ரிப்போர்ட் வெளியான நிலையில், இது தொடர்பாக அமெரிக்கா சில பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பல ஆண்டுகளாகவே நல்லுறவு இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். இந்தியாவில் அத்துமீறி வந்து பாகிஸ்தான் பயங்கரவாத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

இதற்கிடையே பாகிஸ்தானில் இந்திய உளவு அமைப்பான ரா சில மிஷன்களை மேற்கொள்வதாகத் தகவல் வெளியானது. இது தொடர்பாக அமெரிக்கா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது
அமெரிக்கா: அதாவது பாகிஸ்தானில் சில கொலை சம்பவங்களை இந்தியா திட்டமிட்டு நடத்துவதாகத் தகவல் வெளியாவதாகவும் இந்த விவகாரத்தை இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
முன்னதாக பிரிட்டனை சேர்ந்த ஊடகமான தி கார்டியன் செய்தி வெளியிட்டு இருந்தது. இந்தியா தங்கள் நாட்டில் அத்துமீறி இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவதாகப் பாகிஸ்தான் குற்றஞ்சாட்டிய நிலையில், அதற்கான ஆதாரங்கள் எனக் கூறி சில விஷயங்களையும் தி கார்டியன் இதழுக்குப் பாகிஸ்தான் வழங்கி இருந்தது.
இந்தியா மறுப்பு: இருப்பினும், இந்த ரிப்போர்ட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தவறான ஒரு ரிப்போர்ட் என்றும் இந்தியா பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலேயே இந்த ரிப்போர்ட் வெளியிடப்பட்டுள்ளதாக இந்தியா விளக்கமளித்துள்ளது.
அமெரிக்கா கருத்து: இந்தச் சூழலில் தான் அமெரிக்காவும் இது தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்று கூறிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், இருப்பினும் இந்த விவகாரத்தில் இரு தரப்பும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்புவதாகத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "இந்த விவகாரம் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளைத் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.. இந்த விவகாரத்தில் கருத்து கூற விரும்பவில்லை. நிச்சயமாக, இந்த மேட்டரில் இரு நாடுகளுக்கு நடுவே நாங்கள் வரப் போவதில்லை. இருப்பினும், இரு தரப்பினருக்கு இடையே மோதலை தவிர்க்கப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்" என்றார்.
என்ன மேட்டர்: 2019ம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்திய உளவு அமைப்பான ரா பாகிஸ்தான் நாட்டில் புகுந்து இதுபோல சுமார் 20 மிஷன்களை நடத்தியதாக கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் வழங்கிய ஆதாரங்களையும், இரு தரப்பு உளவு அதிகாரிகளின் நேர்காணல்களையும் கார்டியன் வெளியிட்டு இருந்தது. குறிப்பாக இந்தியா தனது தேச பாதுகாப்பிற்கு எதிராக இருப்பவர்கள் எனக் கருதுபவர்களைக் குறிவைத்து மிஷன்களை நடத்தும் பாலிசியை பின்பற்றி வருவதாகத் தெரிவித்து இருந்தது.
இதில் பேசிய பாகிஸ்தான் உளவு அதிகாரி ஒருவர் ஐக்கிய அமீரகத்தில் உள்ள இந்திய உளவுத்துறையின் ஸ்லீப்பர் செல்கள் மூலம் இந்த கொலை சம்பவங்கள் அரங்கேறுவதாகக் கூறியுள்ளார். மற்றொரு பெயர் வெளியிடப்படாத இந்திய அதிகாரி ஒருவர் தேசத்திற்கு எதிரானவர்களை காலி செய்ய இஸ்ரேலின் மொசாட் மற்றும் ரஷ்யாவின் கேஜிபி பாணியில் இந்தியா செயல்படும் என்று கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகளை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. மற்ற நாடுகளில் நடத்தப்படும் கொலைகள் இந்திய அரசின் கொள்கை இல்லை என்று வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் விளக்கமளித்துள்ளார்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications