"நோட்டா" ரொம்பவே முக்கியம்! டெல்லி உள்ளாட்சியில் 57,000 வாக்குகள்! குஜராத், இமாச்சலில் என்ன செய்யும்
டெல்லி: இன்று குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், இன்று நோட்டாவுக்கு விழும் வாக்குகளும் முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டசபைத் தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளன. இந்த இரு மாநிலங்களிலும் பாஜகவே ஆட்சியில் இருக்கும் நிலையில், அதைத் தக்க வைக்க அக்கட்சி முயல்கிறது.
இந்த இரு மாநிலங்களிலும் இதுவரை பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தான் போட்டி இருந்துள்ளது. அதேநேரம் இந்த முறை ஆம் ஆத்மி கட்சியும் இரு மாநிலங்களிலும் காலூன்ற முயல்கிறது.
ஜாக்கிரதையா இருங்க! குஜராத் முடிவிற்கு முன்பே பாஜக மேலிடம் மீட்டிங்.. தமிழ்நாட்டிற்கு பறந்த மெசேஜ்!

டெல்லி மாநகராட்சி
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநில தேர்தல் முடிவுகள் எந்தளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு டெல்லி மாநகராட்சி உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளும் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. ஏனென்றால் டெல்லியில் உள்ள அதிகார பகிர்வு முறையில், மாநகராட்சிகளுக்குக் கூடுதல் பொறுப்புகள் உள்ளன. எனவே, மாநகராட்சி எந்தக் கட்சி கட்டுப்பாட்டில் வைத்துள்ளதோ அந்தக் கட்சிக்குச் சற்று கூடுதல் அதிகாரங்கள் கிடைக்கும். கடந்த 15 ஆண்டுகளாக இதை பாஜகவே கையில் வைத்திருந்தது.

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசம்
இதற்கிடையே இதன் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. மொத்தம் 250 வார்டுகள் உள்ள டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி பெரும்பான்மைக்குத் தேவையான 150 இடங்களைக் காட்டிலும் கூடுதலாக, 134 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. 15 ஆண்டுகளாக டெல்லி மாநகராட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பாஜக 104 இடங்களில் மட்டுமே வென்றது. அதேநேரம் காங்கிரஸ் கட்சியால் இந்தத் தேர்தலில் இரட்டை இலக்கில் கூட வெல்ல முடியவில்லை. வெறும் 9 வார்டுகளில் மட்டுமே வென்றது.

நோட்டாவுக்கு 57 ஆயிரம் வாக்குகள்
இதில் மற்றுமொரு சுவாரசிய நிகழ்வு நடந்துள்ளது. அதாவது இந்த டெல்லி மாநகராட்சி தேர்தலில் சுமார் 57 ஆயிரம் பேர் எந்தக் கட்சிக்கும் வாக்களிக்கவில்லை என்ற நோட்டா வாக்கைப் பதிவு செய்துள்ளனர். டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த வாக்குப்பதிவில் 50.48 % வாக்குகள் பதிவாகி இருந்தது. வாக்குப்பதிவு குறைவாக இருந்த நிலையில், பல வார்டுகளில் நோட்டாவுக்கு பதிவான வாக்குகள் வெற்றி, தோல்வியைத் தீர்மானம் செய்தன.

முக்கியம்
அதாவது டெல்லி மாநகராட்சியில் பதிவான வாக்குகளில் சுமார் 0.78% பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர். இது மற்ற இடங்களைக் காட்டிலும் குறைவு என்றாலும் கூட சில வார்டுகளில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்க இது போதுமானதாக இருந்தது. இன்று குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச தேர்தல்கள் நடைபெறும் நிலையில், இங்கு நோட்டாவுக்கு எத்தனை வாக்குகள் பதிவாகும் என்பது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. இரு மாநிலங்களிலும் நோட்டாவின் வாக்குகள் கூட சில தொகுதி வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கலாம்.

என்ன காரணம்
ஏனென்றால், இமாச்சல பிரதேசத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் ஆம் ஆத்மியும் கூட முதல் முறைாக கால்தடம் பதிக்க முயல்கிறது. இதனால் அங்கு மும்முனை போட்டி உருவாகியுள்ள நிலையில், நோட்டாவுக்கு பதிவாகும் வாக்குகள் முக்கியமானதாக இருக்க வாய்ப்புகள் அதிகம். குஜராத்தில் பாஜக வெல்ல வாய்ப்புகள் அதிகம் எனச் சொல்லப்படும் நிலையில், அங்கும் கூட நோட்டா வாக்குகள் சின்ன தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளன.