செந்தில் பாலாஜி வழக்கில் இதுதான் கிளைமேக்ஸ்.. இனி நோ வாதம்.. அடுத்து நடக்க போகும் முக்கிய சம்பவம்
டெல்லி: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதானவழக்கில் இதுவரை வைக்கப்பட்ட வாதங்கள் கவனம் பெறுகின்றன. இந்த வழக்கில் வாதங்கள் மொத்தமாக நிறைவு பெற்றுள்ளன. கடந்த வாரம் இந்த வழக்கில் உத்தரவு ஒத்திவைக்கப்பட்ட நிலையில்.. நேற்று உச்ச நீதிமன்றம் வழக்கை ஒத்திவைக்க முடியாது.. கண்டிப்பாக உத்தரவு பிறப்பிப்போம் என்று கூறியது. இதையடுத்து எழுத்து பூர்வமாக அமலாக்கத்துறை வாதங்களை வைத்தது.
உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் செந்தில் பாலாஜி மனு விசாரணை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. இனி வாதங்கள் இல்லாத நிலையில் விரைவில் செந்தில் பாலாஜி வழக்கில் முக்கிய உத்தரவு வரும்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். 3000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி அவர் சுப்ரீம் கோர்ட்டிற்கு சென்று முறையிட்டார். அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்ட நிலையில், அவருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அவரது ஜாமீன் மனு சில நாட்களுக்கு முன் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் செந்தில் பாலாஜி மனு விசாரணை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுகிறது.
வழக்கில் வைக்கப்பட்ட வாதங்கள்: இதுவரை இந்த வழக்கில் வைக்கப்பட்ட வாதங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
1. முதலில் அமலாக்கத்துறை இதில் மிகவும் தாமதமாக ஆவணங்களை கொடுத்தது. உதாரணமாக கடந்த மே 6ம் தேதி விசாரணையின் போது அமலாக்கத்துறை வேண்டும் என்றே வழக்கை தாமதப்படுதுகிறது என்று செந்தில் பாலாஜி தரப்பு வாதிட்டது. அன்று வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் அன்றுதான் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்தது.
2. அமலாக்கக்துறை தாக்கல் செய்த பதில் மனுவில், செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை பதில் மனுவில் கூறியிருப்பதாவது: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகும், எம்எல்ஏ பொறுப்பில் உள்ளதால் influential person-ஆக உள்ளார்; வழக்கு தொடர்புடைய சாட்சியங்களை அழிக்க வாய்ப்புள்ளதால் செந்தில்பாலாஜிக்கு ஜாமின் வழங்கக்கூடாது., விசாரணையின்போது செந்தில்பாலாஜி உரிய ஒத்துழைப்பை வழங்கவில்லை, என்று கூறியது.
3. இதற்கு செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த பதிலில், 320 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறேன் ஆனால் வேண்டுமென்றே இந்த வழக்கில் தாமதம் செய்ய வேண்டும் என்பதற்காக கடைசி நேரத்தில் பதில் மனுவை அமலாக்கத்துறை தாக்கல் செய்திருக்கிறது, என்று செந்தில் பாலாஜி இதற்கு பதில் அளித்தார்.
4. இதையடுத்து அமலாக்கத்துறை அளித்த பதிலில்.. நாங்கள் இந்த வழக்கில் தாமதமாக பதில் அளித்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். வேண்டும் என்றே நாங்கள் தாமதம் செய்யவில்லை, என்று அமலாக்கத்துறை கூறியது . தொடர்ந்து மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் விசாரணையை மே 15ம் தேதிக்கு ஒத்திவைத்தது.. இதனால் நீதிபதிகள் பதில் மனுவை படிக்க கூட முடியவில்லை. இதனால் அப்போது வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
5. செந்தில் பாலாஜி: செந்தில் பாலாஜி உடல்நிலை சரியில்லை. அதனால் அவருக்கு இடைக்கலஜா ஜாமீன் வழங்க வேண்டும். மருத்துவ காரணங்களால் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும்.
6. அமலாக்கத்துறை; மருத்துவ காரணங்களால் இடைக்கால ஜாமீன் கூடாது. ஏற்கனவே அதை கோர்ட் நிராகரித்து உள்ளது. அதோடு மருத்துவ காரணங்களால் இடைக்கால ஜாமீன் வழங்குவது ஆதாரத்தை கலைக்க காரணமாக அமையும்.
7. உச்ச நீதிமன்றம்: ஏற்கனவே 2-3 வருடங்கள் பிணை இல்லாமல் கைதிகளாக இருப்பவர்கள் உள்ளனர். வழக்கு விசாரணைக்கு வராமல் சிறையில் இருக்கும் பலர் உள்ளனர். எனவே இடைக்கால ஜாமீன் பற்றி உடனே முடிவு எடுக்க முடியாது. நாளை வழக்கு விசாரிக்கப்படும் என்று கூறினர்.
8. செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தீர்ப்பு இந்த வழக்கில் பொருந்துமா என்பது பற்றிய விவாதங்கள் நேற்று நடந்தன. டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைக்க காரணமே.. நீண்ட காலம் அவர் சிறையில் இருந்ததுதான். அது செந்தில் பாலாஜிக்கு பொருந்தாது என்று அமலாக்கத்துறை கூறி உள்ளது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை புதிய ரூட் ஒன்றை எடுத்துள்ளதாக சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். மணீஷ் சிசோடியா தொடர்பான வாதம் வழக்கில் திருப்பங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
9. அதன்படி செந்தில் பாலாஜி வழக்கில் விசாரணை முடியவடைய இன்னும் எத்தனை நாட்கள் ஆகும் என்று உச்சநீதிமன்றம் நேற்று கேட்டது . இதற்கு நடுநிலையான அரசு வழக்கறிஞர், உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டால், 6 மாதங்கள் ஆகும் என்று கூறி உள்ளது அமலாக்கத்துறை. அதாவது இதில் அமலாக்கத்துறை பிளான்.. வழக்கறிஞரை மாற்றுவதுதான்.
10 அதாவது தமிழக அரசு சார்பாக ஆஜராகும் அரசு வழக்கறிஞரை மாற்றி.. வடஇந்தியாவில் இருந்து ஒருவரை டெல்லியே நியமிக்க வேண்டும் என்று அமலாத்துறை திட்டமிடுவதாக தெரிகிறது. இதன் காரணமாகவே மத்திய அரசு வழக்கறிஞர் ஜாமின் கோரிக்கை உள்ள நிலையில், அரசு வழக்கறிஞர் நியமனம் குறித்து பேசி வருகிறீர்கள்; முதலில் ஜாமின் வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பு தெரிவித்துள்ளது.
11. தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் இருந்தால் வலுவான வாதங்களை வைக்க முடியாது என்பதால் செந்தில் பாலாஜிக்கு எதிராக புதிய அரசு வழக்கறிஞரை கோர்ட்டே நியமிக்க வேண்டும் என்று புதிய கோரிக்கையை அமலாக்கத்துறை வைத்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.எஸ் ஓஹா பென்ச். ஜாமீன் மனுவை தீர்ப்புக்காக ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications