"அது" வேற பின்சீட்டில்.. விஐபியை சாய்த்த பெண்.. அசையாமல் நின்ற கார்.. கிட்ட போய் பார்த்த போலீஸ்.. ஆஆ

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நடுவானில் மேலே பறந்துகொண்டிருந்தபோதே காதல் மலர்ந்துவிட்டது அந்த தொழிலதிபருக்கு.. கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?

டெல்லியை சேர்ந்தவர் குர்பிரீத் சிங்... இவர் ஒரு பிசினஸ் மேன்.. அதனால், அடிக்கடி சுவிட்சர்லாந்துக்கு சென்றுவிடுவாராம்.. அப்படித்தான் ஒருமுறை ஸ்விட்சர்லாந்து போவதற்காக ஃபைட்டில் சென்று கொண்டிருந்தார்.

Where did Swiss woman go and why did Delhi Police arrest the Famous Businessman

காதல்: அப்போதுதான் அந்த பெண்ணை முதன்முதலாக பார்த்தார்.. அவரது பெயர் லீனா பெர்கர்.. இவர் சுவிட்சர்லாந்தை பூர்வகமாக கொண்டவர்.. அந்தரத்தில் பறந்துகொண்டிருந்தபோதே, 2 பேருக்கும் காதலில் விழுந்தார்கள்.. அதற்கு பிறகு, நாடு திரும்பியபோதும் இந்த காதல் நீடித்தது.. எப்போதெல்லாம் குர்பிரீத் ஸ்விட்சர்லாந்து போகிறாரோ, அப்போதெல்லாம் லீனாவை சந்தித்துவிடுவார்.. இப்படி இருவருமே நெருங்கி பழகி வந்தனர்.

இப்படிப்பட்ட சூழலில், திடீரென லீனாவின் நடவடிக்கையில், ஒருவித மாற்றத்தை கவனித்துள்ளார் குர்பிரீத்.. வெளிநாடு என்பதால், அடிக்கடி அங்கு செல்லவும் முடியாது.. இதை வெளிப்படையாக லீனாவிடம் கேட்கவும் முடியாது என்பதால், லீனாவின் மாற்றத்துக்கான காரணத்தை, ரகசியமாக கண்டறிய முயன்றார்.. இதற்காக பலவழிகளில் உதவியை நாடியிருக்கிறார்.

அதிர்ச்சி: இறுதியில், ஸ்விட்சர்லாந்திலேயே உள்ள ஒரு நபருடன் லீனா பெர்கர் நெருங்கி பழகி வருவதாக குர்பிரீத் காதில் விழுந்துள்ளது.. இதைக்கேட்டதுமே அதிர்ச்சியடைந்தார் குர்பிரீத்.. அளவுக்கு அதிகமாக காதலித்தும், இப்படி மோசம் மோசம் செய்துவிட்டாரே என்று குர்பிரீத் ஆத்திரம் அடைந்தார். அதனால், லீனாவை தீர்த்து கட்ட முடிவெடுத்தார்..

ஆனால், வெளிநாட்டுக்கு சென்று, ஒரு கொலையை செய்துவிட்டு, லேசில் தப்ப முடியாதே? அதனால், இந்த கொலையை கச்சிதமாக முடிக்க வேண்டும் என்று பிளான் போட்டார்.. ஒருநாள், லீனாவிடம் போனில் பேசிக் கொண்டிருந்தபோது, இந்தியாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார்.

ஜாலி: இந்தியாவில் நிறைய சுற்றுலாத்தலங்கள் உள்ளன, அவைகள் எல்லாம் அற்புதமாக இருக்கும்.. இப்படி சுற்றிப்பார்த்துக்கொண்டே ஜாலியாக இருக்கலாம் என்று நைஸாக அழைத்துள்ளார்..

உடனே லீனாவும், அங்கிருந்து கிளம்பி டெல்லிக்கு வந்தார்.. சில நாட்களுக்கு இருவருமே ஒவ்வொரு ஊராக சுற்றிப்பார்த்தனர்.. இருவருமே ஜாலியாக இருந்தனர். ஒருபக்கம் ஜாலியாக இருந்துக்கொண்டே, அவரை தீர்த்துக்கட்டவும் பிளான் போட்டுவந்தார் குர்பிரீத். ஆனால், எந்த பிளானும் சிக்கவில்லை..

இப்படியே யோசித்து கொண்டிருப்பதற்குள், லீனா நாடு திரும்பும் நாளும் வந்துவிட்டது.. இதற்கு மேல் வேறு வழியில்லாமல், அன்றைய தினம் எப்படியாவது கொன்றுவிட வேண்டும் என்று முடிவெடுத்தார்.. தனக்கு சொந்தமான இடத்தை சொல்லி, அங்கு சென்று ஜாலியாக இருக்கலாம் என்று லீனாவை அழைத்து சென்றுள்ளார். உல்லாசமாக இருக்க வேண்டும் என்று சொல்லி, லீனாவின் கை, கால்களை கட்டிப்போட்டு, இறுதியில் கொன்று தீர்த்து விட்டார்.

சடலம் எங்கே: இப்போது, சடலத்தை எப்படி மறைப்பது என்று அடுத்த சிக்கல் எழுந்தது. டெல்லியில் எங்கே திரும்பினாலும், சிசிடிவி கேமராக்கள் இருப்பதால், காரின் பின்சீட்டிலேயே, லீனாவின் சடலத்தை வைத்துக்கொண்டு, பல நாட்கள் காரிலேயே ரவுண்டடித்தார். இறுதியில் சடலமே நாற்றமெடுக்க துவங்கிவிட்டது. அதற்கு மேல் என்ன செய்வதென்று தெரியாமல், ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு தப்பித்து சென்றுவிட்டார்.

சாலையில், கார் நிற்பதை பார்த்த டெல்லி போலீஸார், உள்ளே சடலம் இருப்பதை கண்டு அதிர்ந்தனர்.. அதற்கு பிறகு, சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்தால், எந்த க்ளுவும் உடனடியாக கிடைக்கவில்லை.. பிறகு, மாநகரிலுள்ள ஒவ்வொரு சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்ததில், ஒரே கார், டெல்லியில் பல தெருக்களில் சுற்றி சுற்றி வந்ததை பார்த்தனர்.

சபாஷ் போலீஸ்: பிறகுதான், காரின் ஓனர் யார் என்று பார்த்தபோது, குர்பிருத் சிங் என்பதும், கொலை செய்யப்பட்டது வெளிநாட்டு பெண் என்பதும் தெரியவந்தது. இறுதியில் பதுங்கி கொண்டிருந்த குர்பிரீத் சிங்கையும் போலீசார் கைது செய்துவிட்டனர்.. இவ்வளவையும் ஒரே நாளில் போலீசார் கண்டுபிடித்துவிட்டார்களாம்.

நாடு விட்டு நாடு சென்று காதலில் விழுந்தாலும், "பச்சை துரோகத்தை" மட்டும் எந்த ரூபத்திலும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லைதான்.. அதுக்காக இப்படியா? தொழிலதிபர் இப்ப ஜெயிலில் உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+