போன் ரெக்கார்ட் வேறு மாதிரி சொல்லுதே.. அந்த 1 மணி நேரம் எங்கே இருந்தீங்க? விஜய்க்கு சிபிஐ செக்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கரூர் வழக்கில் விஜயின் இருப்பிடம் குறித்து சிபிஐ முக்கியமான சில கேள்விகளை கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் விஜய் இதற்கு சரியான பதில்களை கூறவில்லை என்று கூறப்படுகிறது.

விஜய் அளித்த பதில்களே இதற்கு காரணம். முக்கியமாக திருச்சியில் இருந்து விஜய் கரூர் வர தாமதம் ஆனது ஏன் என்று கேள்வி கேட்கப்பட்டது என்று கூறப்படுகிறது.. இதற்கு விஜய் ரோடு வளைவு நெளிவாக் இருந்தது என்று கூறி உள்ளார். அந்த சாலையில் தேசிய ஹைவே இருந்தும் கூட விஜய் இதை கூறி உள்ளார் என்று கூறப்படுகிறது.

TVK Vijay

அதற்கு சிபிஐ.. உங்கள் வாகனம் 1 மணி நேரம் இடையில் நின்று இருக்கிறது. உங்கள் போன் சாட்டிலைட் தகவல்கள், அதை உறுதி செய்கின்றன. உங்கள் வாகனம் 1 மணி நேரம் நகராத நேரத்தில் நீங்கள் போனில் பேசி உள்ளீர்கள். அதற்கான ரெக்கார்ட் உள்ளது. அந்த 1 மணி நேரம் ஏன் வாகனத்தை நிறுத்தி இருந்தீர்கள்? எங்கே இருந்தீர்கள்? என்று சிபிஐ கேட்டதாக கூறப்படுகிறது.

விஜய் - சிபிஐ விசாரணை

இதன் காரணமாகவே witness என்று அழைக்கப்பட்ட விஜய் அவரின் பதில்கள் காரணமாக suspect என்று மாறியதாக கூறப்படுகிறது. கரூர் துயரம் தொடர்பான சிபிஐ வழக்கு விசாரணையில்.. போலீசார் சொன்னபடியே நடந்தேன், விதிகளை மீறவில்லை என்று விஜய் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதை சிபிஐ ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

கரூர் துயரம் தொடர்பான வழக்கின் குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. FIRல் விஜய் பெயர் இல்லாத நிலையில் சிபிஐ விசாரணை அடிப்படையில் பெயர் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்று நடந்த சிபிஐ விசாரணையில், சம்பவம் நடத்த இடத்திற்கு நீங்கள் தாமதமாக சென்றது ஏன்? கீழே பிரச்சனை நடப்பது உங்களுக்கு தெரியாதா? அபாயத்தை தடுக்க என்ன முயற்சி எடுத்தீர்கள்? அவ்வளவு கூட்டம் இருந்த போது அதற்குள் ஏன் வாகனத்தை கொண்டு சென்றீர்கள்?

நெரிசல் அபாயம் இருப்பதாக எப்போது உணர்ந்தீர்கள்? கீழே பிரச்சனை இருப்பது உங்களுக்கு தெரியுமா தெரியாதா? போலீஸ் வேண்டாம் என்று சொன்ன போதும்.. அதை மீறி உள்ளே ஏன் சென்றீர்கள்? என்று சிபிஐ இன்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பி உள்ளது. இந்த கேள்விகளுக்கு விஜய் அளித்த பதிலின் அடிப்படையில்தான் இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

போலீசார் உங்களிடம் எப்போது போக சொன்னார்கள்? போலீசார் சொன்னபடி செய்தீர்களா? கீழே ஆம்புலன்ஸ் வரும் சூழல் இருந்த போது நீங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்? ஆம்புலன்ஸ் வரும் போதே ஏன் நீங்கள் பேச்சை நிறுத்தவில்லை? நீங்கள் சொல்வதற்கான ஆதாரங்கள் இருக்கிறதா ? என்றெல்லாம் சிபிஐ கேள்விகளை எழுப்பி உள்ளது.

விஜய் அளித்த பதில்

கரூர் துயரம் தொடர்பான சிபிஐ வழக்கு விசாரணையில்.. போலீசார் சொன்னபடியே நடந்தேன், விதிகளை மீறவில்லை என்று விஜய் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதை சிபிஐ ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

விஜய் அளித்த பதிலில்.. நான் போலீஸ் அளித்த விதிப்படியே நடந்து கொண்டேன். இதில் விதிகளை எங்கும் மீறவில்லை. போலீஸ் கூட்டத்தை சரியாக கையாளவில்லை என்று போலீஸ் மீது திருப்பும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. ஆனால் இதை சிபிஐ ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்தே போலீசார் உங்களிடம் எப்போது போக சொன்னார்கள்? போலீசார் சொன்னபடி செய்தீர்களா? என்று சிபிஐ கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+