ஆதித்யா எல் 1 சூரியனுக்கு எவ்வளவு அருகில் செல்லும்? என்னென்ன ஆய்வுகளை செய்யும்?
டெல்லி: ஆதித்யா எல் 1 எனும் விண்கலம் பூமியிலிருந்து சூரியனுக்கு எவ்வளவு அருகில் நிலை நிறுத்தப்படுகிறது தெரியுமா, பூமிக்கும் சூரியனுக்கும் இடையே எவ்வளவு தூரம் வரை இது செல்கிறது, என்னென்ன ஆய்வுகளை செய்யும்?
சூரியனை ஆய்வு செய்ய இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா எல் 1 இன்று காலை 11.50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்படுகிறது. இதற்கான 24 மணி நேர கவுன்ட்டவுன் தொடங்கப்படுகிறது.

சந்திரயான் 3 வெற்றி பெற்ற நிலையில் சூரியன் குறித்த ஆய்வை இஸ்ரோ தொடங்குகிறது. அதன்படி இன்று காலை வீறு நடை போட்டு ஆதித்யா புறப்படுகிறது. இது முற்றிலும் நெருப்பு கோளம் என்பதால் இதில் எப்படி தரையிறங்க முடியும் என பலர் குழப்பத்தில் ஆழ்ந்து வருகிறார்கள்.
சந்திரயான் 3 போல் இந்த ஆதித்யாவும் தரையிறங்காது. இது பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள லக்ராஞ்சியன் எனும் புள்ளியில் நிலைநிறுத்தப்படுகிறது. இந்த விண்கலம் இந்த புள்ளியை அடைய 120 நாட்களுக்கு மேல் ஆகும். சூரியன் குறித்த ஆய்வுக்காக விண்கலம் அனுப்பும் 4-வது நாடு இந்தியா ஆகும்.
சூரியனைப் பற்றிய ஆய்வில் லாக்ரேஞ்சியன் புள்ளிகள் மிக முக்கியமானவை. ஆதித்யா எல்-1 ஒன்றரை கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஆதித்யா எல்-1 சூரியனை பற்றிய தகவல்களைத் திரட்டி, சூரியனை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கும். சூரியனின் மேற்பரப்பில் வெப்பநிலையானது சுமார் 5,500 டிகிரி செல்சியஸ் கொளுத்தி எடுக்கும்.
இந்த பகுதியை சுற்றியுள்ள பகுதிக்கு பெயர் கரோனா ஆகும். சூரிய கிரகணம் நடக்கும் போது இந்த கரோனா பகுதியை வெறும் கண்களால் பார்க்கலாம். நேரடியாக பூமிக்கு வரக் கூடிய சூரிய புயல்களை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 உதவும். சூரிய புயல் தாக்கினால் விண்வெளியில் வலம் வந்து கொண்டிருக்கும் செயற்கைகோள்களுக்கு பாதிப்பு ஏற்படும். அதனால் இந்த ஆய்வு மிக முக்கியத்துவமானது.
ஆதித்யா எல்-1 ல் மொத்தம் 7 செயற்கைக்கோள்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் 4 செயற்கைகோள்கள் சூரியனை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கும். நமது செயற்கைக்கோள்களைப் பராமரிக்கவும், கண்காணிக்கவும், சூரிய வளி மண்டலத்தில் ஏற்படும் நிகழ்வுகள் எவ்வாறு விண்வெளி வானிலையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை அறிந்து கொள்வது அவசியம்.
சூரியன் குறித்து ஆழமாக ஆய்வு செய்வதற்காகவே இந்த விண்கலம் ஏவப்படுகிறது. ஆதித்யா மட்டும் இல்லாது நிறைய திட்டங்கள் இஸ்ரோவிடம் உள்ளது. ஒவ்வொன்றாக இவை செயல்படுத்தப்படும். இந்த ஆதித்யா இஸ்ரோவின் 59ஆவது திட்டமாகும். பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள மொத்த தூரத்தில் 1 சதவீதம் மட்டுமே ஆதித்யா எல் 1 பயணிக்க உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications