"அதிக நீர்நிலைகள்.." தமிழகத்திற்கு எந்த இடம் தெரியுமா.. நீர்நிலை ஆக்கிரமிப்புகளில் நாம் தான் மோசம்
டெல்லி: நாடு முழுக்க இருக்கும் நீர்நிலைகள் குறித்த கணக்கெடுப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் டாப் இடத்தில் மேற்கு வங்கம் உள்ளது. தமிழ்நாட்டில் எத்தனை நீர்நிலைகள் உள்ளன என்பது குறித்தும் அதில் விளக்கப்பட்டுள்ளது.
கோடைக் காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டை காட்டிலும் வெப்பம் அதிகரித்தே வருகிறது. காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனால் நம்மைச் சுற்றி இருக்கும் நீர்நிலைகளைப் பாதுகாப்பது என்பது அவசியமாகிறது. நீர்நிலைகள் பாதுகாக்கப்படாமல் தொடர்ந்து அழிந்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் இருந்து கொண்டே தான் இருக்கிறது.
நீர்நிலைகள்: அதிலும் தமிழ்நாட்டில் நீர்நிலைகள் முறையாகப் பாதுகாக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இதனிடையே இந்தியா முழுக்க இருக்கும் நீர்நிலைகள் குறித்து மத்திய மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகம் நடத்திய கணக்கெடுப்பு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. "நீர்ப்பாசனக் கணக்கெடுப்பு" என்ற இந்த கணக்கெடுப்பில் நாடு முழுக்க இருக்கும் நீர்நிலைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.
நாடு முழுக்க இருக்கும் அனைத்து நீர்நிலைகளின் பயன்பாடு, அளவு, நிலை, ஆக்கிரமிப்பு நிலை மற்றும் சேமிப்பு திறன் போன்ற அனைத்து தரவுகளையும் சேகரிப்பதன் மூலம் அனைத்து நீர்நிலைகளின் விரிவான டேட்டா பேஸை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். இந்த கணக்கெடுப்பில் முதல் முறையாக நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு பற்றிய தரவுகளும் சேகரிக்கப்பட்டன.
எங்கே அதிகம்: ஒட்டுமொத்தமாக நாடு முழுக்க 24.24 லட்சம் நீர்நிலைகள் உள்ளன. அதில் 97.1% ஊரக பகுதிகளிலும் வெறும் 2.9% மட்டும் நகர்ப்புறங்களில் உள்ளது. அதில் அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 7.47 லட்சம் நீர்நிலைகள் உள்ளன. இது ஒட்டுமொத்த நீர்நிலைகளில் 30.8%ஆகும். அடுத்து உத்தரப் பிரதேசத்தில் 2.45 லட்சம் நீர்நிலைகளும் ஆந்திராவில் 1.90 லட்சம் நீர்நிலைகளும் உள்ளன.
தமிழ்நாட்டிற்கு எந்த இடம்: அடுத்து ஒடிசா (1.8 லட்சம் நீர்நிலைகள்) அசாம் (1.72 லட்சம் நீர்நிலைகள்) உடன் 4,5 இடங்களில் உள்ளன. ஜார்கண்ட் 1.07 லட்சம் நீர்நிலைகளுடன் 6ஆவது இடத்தில் உள்ள நிலையில், தமிழ்நாடு 1.06 நீர்நிலைகளுடன் 7ஆவது இடத்தில் உள்ளன. குறைந்தபட்ச நீர்நிலைகள் என்று பார்க்கும் போது, சிக்கிமில் வெறும் 134 நீர்நிலைகள் மட்டுமே உள்ளன. அதேபோல சண்டிகரில் 188 நீர்நிலைகள், டெல்லியில் 893 நீர்நிலைகள் மட்டுமே உள்ளன. அருணாச்சல பிரதேசத்தில் 993 நீர்நிலைகள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள நீர்நிலைகளில் சுமார் 59.5% (14,42,993) குளங்கள் ஆகும். அதைத் தொடர்ந்து ரிசர்வாயர் 3,81,80, நீர்த்தேக்கங்கள் 2,92,280, செக் டேம்கள் 2,26,217, ஏரிகள்- 22,361 உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. மொத்தம் இருக்கும் நீர்நிலைகளில் 83.7% (20,30,040) பயன்பாட்டில் உள்ளன. மேலும், 55.2% (13.38,735) நீர்நிலைகள் தனியார் அமைப்புகளிடமும் 44.0 (10,85,605) பொதுச் சொத்தாகவும் உள்ளன.
ஆக்கிரமிப்புகள்: மேலும் மொத்தமுள்ள 1.6% நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு நீர்நிலைகள் 95.4% கிராமப்புறங்களிலும், 4.6% நகர்ப்புறங்களிலும் உள்ளன. கேரளாவில் அதிகபட்சமாக 111 நீர்நிலைகளை ஆக்கிரமிப்பில் உள்ளது. மேலும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு என்பது பெரும்பாலும் குளங்களில் தான் நடந்துள்ளன. சுமார் 87 சதவீதம் குளங்கள் ஆகும்.
ஆக்கிரமிப்புகள் என்று பார்த்தால், உபி-இல் அதிகபட்சமாக 15301 நீர்நிலைகள் ஆக்கிரமிப்பில் உள்ளது. அதேபோல தமிழ்நாட்டில் 8366 நீர்நிலைகளும் ஆந்திராவில் 3920 நீர்நிலைகளும் ஆக்கிரமிப்பில் உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
வல்லுநர்கள்: அதேபோல நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான குளங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. என்ன தான் குளங்கள் அதிகம் இருந்தாலும் கூட ஆக்கிரமிப்புகளிலும் நாம் தான் டாப் இரண்டாம் இடத்தில் இருக்கிறோம். இதனால் ஆக்கிரமிப்புகளைத் தடுக்கும் நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications