அடுத்த பயங்கரம்.. பரவி வரும் உயிர்க்கொல்லி Mpox குரங்கு அம்மை.. சுகாதார அவசரநிலையாக அறிவித்தது WHO!
டெல்லி: குரங்கு அம்மை வைரஸ் பரவல் தீவிரம் அடைந்து வருவதையொட்டி, சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இதுவரை Mpox குரங்கு அம்மை வைரஸ் 116 நாடுகளில் பரவியதையடுத்து உலக சுகாதார அமைப்பின் (WHO) அவசரக் குழுக் கூட்டம், சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது.
மத்திய மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் புதிய வகை குரங்கு அம்மை வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. காங்கோவில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கிளேடு 1 வகை குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாகவும், அதில் 537 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 116 நாடுகளில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 160 சதவீதம் அளவுக்கு குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும் ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குரங்கு அம்மை தொற்று குறித்த சுகாதார அவசர நிலையை உலக சுகாதார நிறுவனம் பிறப்பித்துள்ளது. குரங்கு அம்மை தொற்றை கட்டுப்படுத்த 2022 ஆம் ஆண்டு ஜூலையில் அவசர நிலை பிறக்கப்பட்டு, 2023 மே மாதம் திரும்பப் பெறப்பட்டது. இந்நிலையில் தற்போது குரங்கு அம்மை வைரஸ் காரணமாக 2வது முறையாக அவசர நிலை பிறக்கப்பட்டுள்ளது.
குரங்கு அம்மை என்பது வைரஸால் ஏற்படும் ஓர் அரிய வகை தொற்று நோய். 1958இல் குரங்கு அம்மை நோய் கண்டுபிடிக்கப்பட்டது. முதன் முதலில் ஆய்வகத்தில் உள்ள குரங்குகளிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்டதால், இந்த நோய் குரங்கு அம்மை என அழைக்கப்படுகிறது. 1970 வாக்கில் மனிதர்களுக்கு இந்த தொற்று பரவியது கண்டறியப்பட்டது.
எம்.பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை பாலியல் தொடர்பு காரணமாக ஆண்களிடம் இருந்தே பரவுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. குரங்கு அம்மை, காங்கோ உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே முன்பு இருந்த நிலையில், தற்போது இந்தப் பரவல் ஆப்பிரிக்கக் கண்டத்தை தாண்டி உலகெங்கும் பரவத் தொடங்கியுள்ளது.
தற்போது பரவி வரும் குரங்கு அம்மையின் புதிய வகைக்கு clade 1b mpox என பெயரிடப்பட்டுள்ளது. இது முந்தைய வகைகளைக் காட்டிலும் வேகமாகப் பரவக்கூடியது என்றும் குழந்தைகளிடையே இறப்பு சதவீதம் 10% வரை அதிகமாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளேட் 2 வை விட கிளேட் 1 அதிக பாதிப்பை ஏற்படுத்தி உயிரிழப்புகளை அதிகப்படுத்துவதாக தெரியவந்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம் மற்றும் பாதிக்கப்பட்ட நாடுகளின் நிபுணர்கள், குரங்கம்மையால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான தரவுகளை வழங்கினர். இந்த தரவுகளை மறுபரிசீலனை செய்வதற்காக, சர்வதேச சுகாதார விதிமுறைகள் தொடர்பான குழு ஆலோசனை மேற்கொண்டது. இந்த ஆலோசனையின் முடிவிலேயே உலக சுகாதார அமைப்பின் தலைவர் இதை பொது சுகாதார அவசரநிலை என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், "இந்த பரவல் சர்வதேச பொது சுகாதார அவசர நிலையாக கருதப்படுகிறது. இந்த பரவல் மிகவும் கவலைக்குரியது. பரவலைத் தடுக்கவும், உயிர்களைக் காப்பாற்றவும் ஒருங்கிணைந்த சர்வதேச செயல்பாடுகள் அவசியம்" எனக் கூறியுள்ளார்.
Mpox வைரஸ், காய்ச்சல், குளிர் காய்ச்சல் மற்றும் உடல் வலி போன்ற லேசான அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. உடலில் அம்மை போன்ற வீக்கங்கள் ஏற்படும். மிகவும் தீவிரமான பாதிப்பு உள்ளவர்களுக்கு முகம், கைகள், மார்பு மற்றும் பிறப்புறுப்புகளில் புண்கள் ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications