சூத்திரதாரி! நீங்க தலைவராகிடுங்க! அசோக் கெலாட்டிடம் கேட்ட சோனியா காந்தி? காங்கிரஸில் அதிரடி மாற்றம்?
டெல்லி: காங்கிரஸ் கட்சியில் தலைவர் பதவிக்கான தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில் சோனியா காந்தி ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டிடம் காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டதாக தகவல்கள் வர தொடங்கி உள்ளன. சோனியா காந்தியின் இந்த முடிவுக்கு பின் முக்கியமான சில காரணங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியில் கடந்த 23 வருடங்களில் மிகப்பெரிய மாற்றத்திற்கு தயாராகி வருகிறது. நேரு குடும்பத்தை சேராத ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன.
காங்கிரஸ் கட்சிக்கான புதிய தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் ஆகஸ்ட் 21ம் தேதி இருந்து செப்டம்பர் 20ம் தேதிக்குள் எப்போது வேண்டுமானாலும் நடக்கும் வாய்ப்புகள் உள்ளன. வரும் ஞாயிற்றுக்கிழமை இதற்கான முடிவு எடுக்கப்பட உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடக்க உள்ள காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தேர்தல் எப்போது நடக்கும் என்று அறிவிப்பு வெளியிடப்படும்.

வேண்டாம்
இந்த தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்ற முடிவை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி எதிர்த்துவிட்டார். வயோதிகம், உடல்நிலை காரணமாகவும், ஜி 23 தலைவர்களின் எதிர்ப்பு காரணமாகவும் தலைவர் பதவிக்கு போட்டியிட வேண்டாம் என்ற முடிவை இவர் எடுத்துவிட்டார். ராகுல் காந்தியும் தேர்தல் தோல்விகள் மற்றும் ஜி 23 தலைவர்களின் எதிர்ப்பு காரணமாக தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்ற முடிவை எடுத்துவிட்டார்.

கோரிக்கை
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவராக போவது யார் என்ற கேள்வி நிலவி வந்தது. காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே இது தொடர்பான குழப்பம் நிலவி வந்தது. இந்த குழப்பத்திற்கு இடையில்தான் சோனியா காந்தி நேற்று ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட்டை சந்தித்து காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும்படி கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 71 வயது நிரம்பிய மூத்த தலைவரான அசோக் கெலாட், சோனியா ஆதரவுடன் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. .

ஏன் அசோக் கெலாட்
அசோக் கெலாட் நீண்ட கால, பாரம்பரிய காங்கிரஸ் உறுப்பினர். இந்திரா காந்தி காலத்து காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட். கட்சியின் தீவிர விசுவாசி, மூத்த தலைவர். மத்திய சுற்றுலா மற்றும் விமான துறை அமைச்சராக செயல்பட்டுள்ளார். இந்திரா காந்திக்கு மட்டும் நெருக்கமாக இல்லாமல் ராஜிவ் காந்தி, சோனியா காந்திக்கும் நெருக்கமானவராக இருந்துள்ளார். இதற்கு முன் ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தவரும் அசோக் கெலாட்தான். கடந்த குஜராத் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக நியமிக்க அசோக் கெலாட் சூத்திரதாரியாக் இருந்தார்.

ராகுலுக்குடன் நெருக்கம்
சில காலம் முன்பு வரை ராகுலை இந்தியாவே 'பப்பு' என்று கிண்டல் செய்து வந்தது. அவரது குழந்தை தனமான ஒரு சில நடவடிக்கைகளால் இப்படி கிண்டல் செய்யப்பட்டார். ஆனால் அதன்பின் ராகுல் அரசியல் ரீதியாக நிறைய முதிர்ச்சி அடைந்தார். அவரை பேச்சுக்கள், பேட்டிகள் அதிகம் கவனிக்கப்பட்டன. அதற்கு பின்னால் இருந்தது அசோக் கெலாட்தான். இவர்தான் ராகுல் என்ன பேசவேண்டும், என்ன மாதிரியான அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தியவர். குஜராத் சட்டசபை தேர்தலில் கடந்த முறை காங்கிரஸ் சிறப்பாக செயல்படவும் அசோக் கெலாட்தான் முக்கியமான காரணமாக இருந்தார்.

என்ன நடக்கும்?
சோனியாவிற்கு நெருக்கம், ராகுலுடன் நட்பு.. நேரு குடும்பத்தின் அதிகாரபூர்வமற்ற உறுப்பினர் என்ற பல காரணங்களால் அசோக் கெலாட்டை தலைவராகும்படி சோனியா காந்தி கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. இவர் மூத்த தலைவர், மற்ற தலைவர்கள் இவரை ஏற்றுக்கொள்வார்கள், பலரையும் அனுசரித்து செல்வார்கள், வடஇந்திய மாநிலங்களில் பிரபலம், தேர்தல் அரசியல் தெரிந்தவர், தொண்டர்களை வழிநடத்த தெரிந்தவர், கள அரசியல் தெரிந்தவர் என்பதால் இவரை சோனியா அணுகியதாக கூறப்படுகிறது.

ராஜஸ்தான்
அதோடு சச்சின் பைலட் ராஜஸ்தான் முதல்வராக வேண்டும் என்று கூறி வருகிறார். அவரை ராஜஸ்தான் முதல்வராக்கிவிட்டு, அசோக் கெலாட்டை டெல்லிக்கு கொண்டு வருவது ராஜஸ்தான் அரசியல் பிரச்சனையையும் தீர்க்கும். அதே சமயம் அசோக் கெலாட் சோனியா அணி என்பதால் அவருக்கு எதிராக ஜி 23 காங்கிரஸ் தலைவர்கள் கண்டிப்பாக போட்டி வேட்பாளரை நிறுத்த வாய்ப்புகள் உள்ளன. இது கட்சிக்குள் ஆக்கபூர்வமான ஒரு தேர்தல் நடத்தவும், ஆக்கபூர்வமாக தலைவர் தேர்வு செய்யப்படவும் வழி வகுக்கும்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications