ஒடிசா முதல்வர் ஆகிறாரா முன்னாள் ஐ.ஏ.எஸ்? மோடி, அமித் ஷாவுக்கு நெருக்கம்.. யார் இந்த கிரிஷ் முர்மு?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஒடிசா மாநிலத்தில் முதல் முறையாக பாஜக ஆட்சி அமைக்க உள்ள நிலையில் முதலமைச்சராக வரப்போவது யார் என்ற பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் ஒடிசா முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் கிரிஷ் சந்திர முர்மு.

ஒடிசா மாநில சட்டசபை தேர்தலில் பாஜக வென்றுள்ளது. அங்கு மொத்தமுள்ள 147 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக கூட்டணி 78 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சி 51 இடங்களில் மட்டுமே வென்றது. காங்கிரஸ் கட்சி 14 இடங்களில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் ஒடிசாவில் தனி மெஜாரிட்டி உடன் ஆட்சியைப் பிடிக்கிறது பாஜக.

Odisha odisha assembly election result 2024 naveen patnaik bjp 2024 politics


ஒடிசா முதல்வர் யார்?: பாஜக ஒடிசா மாநிலத்தில் முதல் முறையாக ஆட்சிக்கு வரும் நிலையில், யாரை முதல்வராக தேர்ந்தெடுக்கும் என்பது தான் இப்போது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பழங்குடியினர் தலைவர் ஜுவல் ஓரம் உள்ளிட்ட பலரது பெயர்கள் முதல்வர் பதவிக்கான போட்டியில் அடிபட்டு வரும் நிலையில், எதிர்பாராத விதமாக மற்றொரு பெயர் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

அதாவது, முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஆடிட்டர் ஜெனரல் கிரிஷ் சந்திர முர்முவின் பெயர் முதல்வர் பதவிக்கான போட்டியில் அடிபட்டு வருகிறது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு மிகவும் விருப்பமான லிஸ்ட்டில் இருப்பவர் கிரிஷ் சந்திர முர்மு. மோடி அரசில் உயரிய பதவிகளை வகித்துள்ளார்.

யார் இந்த கிரிஷ் சந்திர முர்மு?: கிரிஷ் முர்முவின் சொந்த ஊர் ஒடிசா மாநிலம் மாயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பெட்னோடி. அங்கு சந்தால் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் கிரிஷ் முர்மு. குஜராத் கேடர் 1985 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான கிரிஷ் முர்மு, பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போது, குஜராத் மாநிலத்தில் முதன்மை செயலாளராக இருந்தவர். முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குஜராத் மாநில உள்துறை அமைச்சராகப் பதவி வகித்தபோது அவருக்குக் கீழ் உள்துறை இணை செயலாளராக பதவி வகித்தார் கிரிஷ் முர்மு.

மோடிக்கு நெருக்கம்: 2002 குஜராத் கலவர வழக்குகளை கையாளும் பணி கிரிஷ் முர்முவுக்கு வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்ட பிறகு முதல் துணை நிலை ஆளுநராக பதவியில் இருந்தார். அடுத்த ஒராண்டுக்குள் முர்மு, சிஏஜி ஆக நியமிக்கப்பட்டார். மோடி, அமித் ஷாவுக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படுபவர் கிரிஷ் முர்மு.

2020 ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளராக (சிஏஜி) பதவி வகித்து வருகிறார் கிரிஷ் முர்மு. இவரது பதவிக்காலம் இன்னும் சில மாதங்களில் முடிவுக்கு வர உள்ளது. இந்நிலையில், இவர் ஒடிசா முதலமைச்சராக அறிவிக்கப்பட்டால் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்கு வருவார் எனத் தெரிகிறது.

சரியான சாய்ஸ்: தர்மேந்திர பிரதான், ஜுவல் ஓரம் ஆகியோர் ஒடிசாவில் இருந்து மக்களவை எம்.பிக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தற்போது மத்தியில் பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி ஆட்சி அமையப்போகும் நிலையில் எம்.பிக்களை ராஜினாமா செய்யச் சொல்வது சரியான முடிவாக இருக்காது என்பதால், தர்மேந்திர பிரதான் பின்னுக்குத் தள்ளப்பட்டு கிரிஷ் சந்திர முர்மு, ஒடிசா முதல்வர் ஆகவே கூடுதல் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

ஒடிசாவில் மீண்டும் பிஜேடி வெற்றி பெற்றால், நவீன் பட்நாயக், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான விகே பாண்டியனை ஒடிசா முதல்வர் ஆக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், பிஜேடி ஆட்சியை இழந்து, பாஜக வென்ற நிலையில், ஒடிசா மாநில முதல்வராக முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரே பதவிக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.

Odisha odisha assembly election result 2024 naveen patnaik bjp 2024 politics


ஒடிசா மாநில பாஜக தலைவர் மன்மோகன் சமல் கூறுகையில் “கட்சியின் பார்லிமென்ட் குழு, முதல்வர் யார் என்பதை ஓரிரு நாளில் முடிவு செய்யும். பாஜகவின் புதிய முதல்வர் ஜூன் 10 ஆம் தேதி பதவியேற்பார். முதல்வர் தேர்வு பிரதமர் நிர்ணயித்த அளவுகோல்களின் அடிப்படையில் இருக்கும். மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை நிலைநிறுத்தும் வகையில் ஒடிசாவைச் சேர்ந்த மண்ணின் மைந்தர் அடுத்த முதல்வராக இருப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+