Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரதமர் மோடி காலில் விழுந்த பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராப்.. யார் இவர்! பின்னணி என்ன

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பப்புவா நியூ கினியா சென்ற பிரதமர் நரேந்திர மோடியின் காலில் விழுந்து அந்நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மராப் வணங்கினார். இந்த பிரதமர் ஜேம்ஸ் மராப் யார் என்றும் அவர் குறித்த சுவாரசிய தகவல்கள் பற்றியும் பார்க்கலாம்.

பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பானில் நடந்து ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு அங்கிருந்து நேரடியாக பப்புவா நியூ கினியா நாட்டிற்குச் சென்றார். அங்கே பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Who is James Marape, Papua New Guinea Leader Who Touched PM Modis Feet

அங்கே தான் இந்திய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் 3ஆவது உச்சி மாநாடு நடக்கிறது. இதில் கலந்து கொள்ளவே பிரதமர் நரேந்திர மோடி அங்கே சென்றார்.

உற்சாக வரவேற்பு: பொதுவாக பப்புவா நியூ கினியாவில் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு நாட்டிற்கு வரும் எந்தத் தலைவருக்கும் அரசு தரப்பில் இருந்து வரவேற்பு அளிக்கப்படாது. ஆனால், பிரதமர் மோடிக்கு மட்டும் இதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு வந்த பிரதமர் மோடிக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மராப் நேரடியாக ஏர்போர்ட் வந்து பிரதமர் மோடியை வரவேற்றார்.

அப்போது யாருமே எதிர்பார்க்காத வகையில் பிரதமர் நரேந்திர மோடியின் காலில் விழுந்து ஜேம்ஸ் மராப் வணங்கினார். பிரதமர் மோடியைக் கட்டித்தழுவி வரவேற்ற ஜேம்ஸ் மராப், டக்கென மோடியின் காலை தொட்டு வணங்கினார். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது. பிரதமர் மோடியின் காலில் விழுந்த வணங்கிய பப்புவா நியூ கினியாவின் பிரதமர் ஜேம்ஸ் மராப் யார் என்றும் அவர் குறித்த சுவாரசிய தகவல்கள் பற்றியும் பார்க்கலாம்.

Who is James Marape, Papua New Guinea Leader Who Touched PM Modis Feet

யார் இவர்: 52 வயதான ஜேம்ஸ் மராப், கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பப்புவா நியூ கினியாவின் பிரதமராக இருந்து வருகிறார். அவர் அங்குள்ள PANGU Pati என்ற அரசியல் கட்சியின் முக்கிய தலைவராக இருந்து வருகிறார். இவர் 1993இல் பப்புவா நியூ கினியா பல்கலைக்கழகத்தில் கலை பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இது மட்டுமின்றி, சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் வணிக நிர்வாகம் ஆகிய பாடங்களிலும் அவர் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.

ஜேம்ஸ் மராப் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான பப்புவா நியூ கினியாவின் 8ஆவது பிரதமர் ஆவார். பிரதமர் ஆகும் முன்பு அவர் கல்வி மற்றும் நிதி உட்பட என அமைச்சராகவும் பல முக்கிய துறைகளைக் கவனித்துள்ளார். இது மட்டுமின்றி, அவர் வேலைகள் மற்றும் போக்குவரத்துக்கான நாடாளுமன்ற செயலாளராகவும் இருந்துள்ளார். மேலும் நாடாளுமன்ற பரிந்துரைக் குழுவிலும் இடம் பெற்றுள்ளார்.

Who is James Marape, Papua New Guinea Leader Who Touched PM Modis Feet

தலைமை பதவி: இதற்கு முன்பு மராப் 2001 முதல் 2006 வரை மேலாண்மைத் துறையின் துணைக் கொள்கைச் செயலாளராகப் பணியாற்றினார். அங்கு உள்ள மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சியில் தான் மராப் முதலில் இருந்தார். இருப்பினும், சில காரணங்களால் ஏப்ரல் 20, 2019இல் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அவர், PANGU Pati கட்சியில் இணைந்தார். அங்கே அவருக்குத் தலைமை பதவி வழங்கப்பட்டது.

கடந்த 2020ஆம் ஆண்டு நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் மராப் அரசைக் கவிழ்க்க முயற்சி எடுத்தனர். இருப்பினும், போதிய உறுப்பினர்கள் ஆதரவு இருந்ததால் அது முறியடிக்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+