பதவி உயர்வுக்கு காத்திருந்த பிரிகேடியர்.. முன் நாள் குடும்பத்தினருடன் பேசிய கலோனல்.. விபத்தின் சோகம்
டெல்லி: இந்திய விமான படை ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த பிரிகேடியர் லக்பிந்தர் சிங் லிட்டர் இரண்டாவது தலைமுறையைச் சேர்ந்த ராணுவ அதிகாரியாவார். விபத்தில் இறந்த மற்றொரு அதிகாரி சியாச்சென் பகுதியில் பணியாற்றியவர்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். அந்த விபத்திலிருந்து வருண் சிங் என்பவர் மட்டுமே உயிர் பிழைத்தார்.
இந்த விபத்தில் இறந்த லக்பிந்தர் சிங் லிட்டர் பிரிகேடியராக பணிபுரிந்தவர். அவருக்கு மேஜர் ஜெனரலாக பதவி உயர்வுக்கான அனுமதியும் கிடைத்திருந்தது. இவர் திபெத்துடன் உள்ள ஹிமாச்சல பிரதேச எல்லையில் பிரிகேடராக பொறுப்பு வகித்தவர்.

கல்லூரி
இவர் டெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு படை கல்லூரியில் முக்கிய பயிற்சியை எடுத்திருந்தார். ராணுவ விவகாரங்கள் குறித்து அவ்வப்போது லிட்டர் கட்டுரைகளை எழுதுவார். இந்த செப்டம்பர் மாதம் கூட வான்வெளி திறன்களுக்கு சீனாவின் பதிலடி என்ற கட்டுரையை எழுதியிருந்தார்.

லிட்டர் மனைவி
இவரை நண்பர்கள் டோனி என அழைப்பார்கள். லிட்டரின் மனைவி பெயர் கீதிகா. இவர் ஆசிரியை. இவர்களுக்கு 12 ஆம் வகுப்பு படிக்கும் பெண் இருக்கிறார். கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் ஆண்டு அந்த பெண் எழுதிய புத்தகத்தை வெளியிட்டனர். அந்த வெளியீட்டு விழாவில் மதுலிகா ராவத், முன்னாள் புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இறந்தவர்
லிட்டரின் தந்தையும் ஒரு ராணுவ அதிகாரிதான். அவர் பிரிகேடியராக பணியாற்றியர். அது போல் இந்த விபத்தில் இறந்த மற்றொரு லெப்டினட் கலோனல் ஹரீந்தர் சிங். அவர் 11 கோர்கா படைப்பிரிவை சேர்ந்தவர். இதே பிரிவை சேர்ந்தவர்தான் முப்படைகளின் தலைமை தளபதியான பிபின் ராவத். ஹரீந்தர், சியாச்சென் பனிப்பகுதியில் பணிபுரிந்துள்ளார். இவர்கள் லக்னோவை பூர்வீகமாக கொண்டவர்கள். டெல்லிக்கு இடம் பெயர்ந்தனர்.
Recommended Video

கண்ணீர்
இவர்கள் இருவரை தவிர் சிறப்பு படையின் 5 அதிகாரிகள், கோர்கா படையின் ஹவில்தாரும் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக பிபின் ராவத்துடன் பணிபுரிந்த நாயக் குர்சேவாக் சிங்கும் (35) இறந்துள்ளார். இவர் பஞ்சாப் மாநிலம் டோட் கிராமத்தை சேர்ந்தவர். நேற்று முன் தினம் இரவு கூட தனது குடும்பத்தினருடன் நாயக் குர்சேவாக் போனில் பேசியுள்ளார் என குடும்பத்தினர் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications