சிக்கிம் இன்னொரு தமிழ்நாடு.. பாஜக, காங்கிரஸால் நுழைய முடியாத கோட்டை.. யார் இந்த பிரேம் சிங் தமாங்?
டெல்லி: தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் கட்சிகளால் அதிகாரத்துக்கு வரமுடியாத மாநிலமாக திகழும் தமிழ்நாட்டை போன்ற மாநிலம் சிக்கிம். அங்கு தற்போது முதல்வராக இருக்கும் பிரேம் சிங் தமாங் (பிஎஸ் கோலே), சிக்கிம் மாநிலத்தின் 25 வருட வரலாற்றை மாற்றிக்காட்டியவர். 2019ல் ஆட்சியை கைப்பற்றிய இவரது எஸ்கேஎம் கட்சி, தற்போது 2வது முறையாக ஆட்சியை கைப்பற்றுகிறது.
சிக்கிம் மாநிலத்தில் உள்ள 32 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை காலையிலேயே தொடங்கியது. மாநிலத்தின் பல மாவட்டங்களில் உள்ள 6 இடங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இங்கு தேர்தலில் பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் பிற மாநில காட்சிகள் களத்தில் இருந்தாலும் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா மற்றும் எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிகளுக்கு இடையில் தான் போட்டி நிலவுகிறது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக எப்படியோ அதுபோல் தான் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவும், சிக்கிம் ஜனநாயக முன்னணியும் அங்கு உள்ளன.

சிக்கிமில் மொத்தம் உள்ள 32 தொகுதிகளில் 146 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்களில் முதல்-மந்திரி பிரேம் சிங் தமாங், அவரது மனைவி கிருஷ்ண குமாரி ராய், முன்னாள் முதல்வர் பவன் குமார் சாம்லிங் மற்றும் முன்னாள் இந்திய கால்பந்து வீரர் பைச்சுங் பூட்டியா ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவார்.
சிக்கிமில் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதி 32 சட்டசபை தொகுதிகள் மற்றும் ஒரு மக்களவை தொகுதிக்கு ஒரே கட்டமாக நடந்த தேர்தலில் 80 சதவீத வாக்குகள் பதிவானது. இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலையில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி மொத்தம் உள்ள 32 தொகுதிகளில் 29 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி ஒரு இடத்தில் தான் முன்னிலையில் இருக்கிறது.
சிக்கிம் மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் முன்னிலையில் உள்ள சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியை பற்றி பார்ப்போம். சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா என்பதன் அர்த்தம் சிக்கிம் புரட்சிகர முன்னணி என்பதாகும். பெயருக்கு தகுந்தாற் போல் சிக்கில் இந்த கட்சி மிகப்பெரிய புரட்சியை செய்திருக்கிறது. சிக்கிம் மாநிலத்தில் 1994 முதல் 2019 வரைர 25 வருடங்களாக சிக்கிம் ஜனநாயக முன்னணி சார்பில் முதல்வராக இருந்த பவன் குமார் சாம்லிங்கை ஆட்சியில் இருந்து அகற்றியுள்ளது. இதற்கு காரணம் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியின் தலைவர் பிரேம் சிங் தமாங் தான்.
சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியின் தலைவர் பிரேம் சிங் தமாங் முன்னதாக சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தார். இவர் சிக்கிமில் பவன் குமார் சாம்லிங்கின் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர். பிரேம் சிங் தமாங் 2013ம் ஆண்டு பிப்ரவரியில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியை தொடங்கினார். இவர் கட்சியை தொடங்கிய உடன் பாரதி சர்மா என்பவரை செயல் தலைவராக அறிவித்து கட்சியை நடத்தி வந்தார்.
அதன்பின்னர், முறைப்படி சிக்கிம் ஜனநாயக முன்னணியில் இருந்து விலகி, 2013 செப்டம்பரில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியில் இணைந்தார்.. 2014ல் முதல் முறையாக பிரேம் சிங் தமாங் சந்தித்த தேர்தலில் அவரது சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி மொத்தம் உள்ள 32ல் 10 இடங்களில் வென்றது. 40.8% வாக்குகளை பெற்று எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. அடுத்த ஐந்து வருடங்களில் அப்படியே வேறலெவலில் மாறியது.
2019ல் பிரேம் சிங் தமாங்கின் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி 17 இடங்களில் வென்று முதல் முறையாக ஆட்சி அமைத்தது.பிரேம் சிங் தமாங் ( தற்போது பிஎஸ் கோலே என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறார்) சிக்கிம் மாநிலத்தின் முதல்வரானார். 2019ல் தேர்தலுக்கு பிறகு பாஜக கூட்டணியில் இணைந்தவர், 2024ல் தற்போது தனித்து போட்டியிட்டார்.. இதில் முதல்வர் பிஎஸ் கோலேவின் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி மொத்தம் உள்ள 32ல் 29 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. இதில் மாறுபாடு இருந்தாலும் மீண்டும் பிரேம் சிங் தமாங்கின் எஸ்கேஎம் கட்சி ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது. சிக்கிம் மாநிலத்தை பொறுத்தவரை தமிழ்நாடு போன்று தேசிய கட்சிகளை அனுமதிக்காத மாநிலம் ஆகும். அங்கு மாநில கட்சிகளே வெற்றி பெறுகின்றன. தேசிய கட்சிகள் இங்கு வெற்றி பெற பல ஆண்டுகளாக தவம் இருக்கின்றன. ஆனால் வெற்றி பெற முடியவில்லை..
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications