சந்திரயான் 3 வெற்றியால் எகிறிய சொத்து மதிப்பு.. உலக கோடீஸ்வரர்கள் லிஸ்டில் வந்த ரமேஷ்! யார் இவர்
டெல்லி: சந்திரயான் 3 மிஷன் வெற்றி இந்தியர்கள் அனைவரும் பெருமைப்படும் செய்தி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், இந்த சந்திரயான் 3 வெற்றியால் ஒருவர் கோடீஸ்வரனாகி உலக பணக்காரர்கள் வரிசையிலும் இடம் பிடித்துள்ளார் தெரியுமா.. யார் அவர் சந்திரயான் வெற்றி அவருக்கு எப்படி உதவியது என்பது குறித்துப் பார்க்கலாம்.
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ கடந்தாண்டு சந்திரயான் 3ஐ வெற்றிகரமாக அனுப்பியது. உலக நாடுகள் இதுவரை செய்யாத வகையில் முதல்முறையாகத் தென் துருவத்தில் ஏவுகணையை அனுப்பிச் சாதித்தது. அதுவும் மிகக் குறைந்த செலவில் இதைச் செய்து இருந்து.

ஆனால் இந்த சந்திரயான் 3 வெற்றியால் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் பெரும் கோடீஸ்வரராக உயர்ந்து இருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா.. அவர் வேறு யாரும் இல்லை ரமேஷ் குன்ஹிகண்ணன் தான்.
சந்திரயான் 3: கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷின் சொத்து மதிப்பு சந்திரயான் 3 வெற்றியால் பல மடங்கு அதிகரித்துள்ளது. மேலும், அவர் உலகின் பெரும் கோடீஸ்வரர்களின் லிஸ்டான ஃபோர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியலும் நுழைந்துள்ளார். ஃபோர்ப்ஸ் பில்லியனர்களில் பட்டியலில் அவர் நுழைவது இதுவே முதல்முறையாகும். 1.2 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்புடன், எலான் மஸ்க், முகேஷ் அம்பானி, ஜெஃப் பெசோஸ் போன்ற உலகப் பணக்காரர்கள் வரிசையில் ரமேஷும் இடம் பிடித்துள்ளார்.
கடந்த 2023இல் ஏவப்பட்ட சந்திரயான் 3 இந்திய விண்வெளி துறையில் மாபெரும் சரித்திரம் படைத்தது மட்டுமின்றி 60 வயதான ரமேஷின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்த்தி ஃபோர்ப்ஸ் பில்லியனர்களில் பட்டியலிலும் இடம்பெற வைத்து உள்ளது. யார் இவர்.. சந்திரயான் 3 வெற்றி இவருக்கு எப்படி உதவியது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
யார் இவர்: ரமேஷ் குன்ஹிகண்ணன் கர்நாடகாவின் மைசூர் பகுதியைச் சேர்ந்தவர்.. அவர் மைசூரைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள கெய்ன்ஸ் டெக்னாலஜி என்ற நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார். இப்போது அவர் அந்த நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக இருக்கிறார்.
மைசூரில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் மின் பொறியியலில் இளங்கலை பட்டம் பெற்ற குன்ஹிகண்ணன், 1988ல் கெய்ன்ஸ் டெக்னாலஜி என்ற எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி நிறுவனத்தைத் தொடங்கினார். இவரது மனைவி சவிதா ரமேஷ் 1996ல் இவரது நிறுவனத்தில் சேர்ந்தார். இப்போது அவர் நிறுவனத்தின் சேர்மேனாக இருக்கிறார்.
சந்திரயானுக்கு இருக்கும் தொடர்பு: இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திரயான்-3 திட்டத்தில் ரமேஷ் முக்கிய பங்காற்றினார். ரோவர் மற்றும் லேண்டர் ஆகிய இரண்டிற்கும் மின்னணு அமைப்புகளை வழங்கியதே ரமேஷ் தான். அதாவது ஆகஸ்ட் 2023ல் சந்திரனின் மேற்பரப்பில் வெற்றிகரமாகத் தரையிறங்க இவரது பங்களிப்பு ரொம்பவே முக்கியமானது.
உலக நாடுகள் பல ஆயிரம் கோடி செலவழித்து சந்திரனுக்கு ராக்கெட் அனுப்பும் நிலையில், இந்தியா வெறும் ரூ.615 கோடி செலவில் அதைச் சாத்தியமாக்கி இருக்கிறது. அதில் இவர் அளித்த உயர் தரமிக்க சாதனங்கள் ரொம்பவே முக்கிய பங்கை ஆற்றி இருக்கிறது.
சொத்து மதிப்பு: இவரது கெய்ன்ஸ் டெக்னாலஜி நிறுவனத்தில் இப்போது ரமேஷுக்கு 64% பங்குகள் உள்ளன. பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமான இந்த கெயன்ஸ் டெக்னாலஜி நிறுவனத்தின் பங்குகள் சந்திரயான் -3 வெற்றிக்குப் பிறகு கணிசமாக அதிகரித்தன.
நவம்பர் 2022ல் பங்குச் சந்தையில் இந்த நிறுவனம் பட்டியலிடப்பட்ட நிலையில், அதன் பிறகு இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு சுமார் 3 மடங்கு உயர்ந்துள்ளது. இப்போது இவரது சொத்து மதிப்பு 1.2 பில்லியன் டாலராக இருப்பதாக போர்ப்ஸ் இதழே கூறி இருக்கிறது.












Click it and Unblock the Notifications