ரெடியாகும் மத்திய பட்ஜெட்.. நிர்மலா சீதாராமன் டீமில் உள்ள 6 முக்கிய அதிகாரிகள் யார்!
டெல்லி: ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படும். அதன்படி இந்தாண்டு வரும் சனிக்கிழமை தாக்கலாகும் பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான டீம் தயாரிக்கிறது. இந்த டீமில் உள்ளவர்கள் யார் யார்! இவர்களுக்கான பொறுப்பு என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்தாண்டு மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் சனிக்கிழமை பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்கிறார். இதை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான டீம் உருவாக்கியுள்ளது.

அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான இந்த டீமில் உள்ள மற்ற முக்கிய அதிகாரிகள் யார் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
துஹின் காந்தா பாண்டே, நிதி மற்றும் வருவாய் துறை செயலர்
1987 ஒடிசா கேடரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான துஹின் காந்தா பாண்டே.. நிதி மற்றும் வருவாய்த்துறை செயலாளரான துஹின் காந்தா பாண்டேவுக்கு தான் சவாலான பணி காத்திருக்கிறது. மக்களின் வரிச் சலுகைகளுக்கான எதிர்பார்ப்புகளை நிர்வகிக்கும் அதே நேரம் அரசுக்குத் தேவையான வருவாயையும் திரட்டும் பொறுப்பு இவருடையது தான். பட்ஜெட்டுக்கு சில நாட்களுக்கு முன்பு தான் அவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார். வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் வருமான வரிச் சட்டத்தின் மறுசீரமைப்பு அறிமுகப்படுத்தப்படும் நிலையில், அதை துஹின் காந்தா பாண்டே கவனித்து வருகிறார்.
அஜய் சேத், பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர்:
1987 பேட்ச் கர்நாடக கேடர் ஐஏஎஸ் அதிகாரியான அஜய் சேத், பட்ஜெட் ஆவணங்களைத் தயாரிப்பதற்கும், மேக்ரோ பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பராமரிப்பதற்கும் பொறுப்பான துறையைக் கவனித்து வருகிறார். பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யும் அதேநேரம் கடனை குறைப்பதும் இவரது பணியாகும். நுகர்வோர் செலவினங்களை பூஸ்ட் செய்யவும் தேவையான திட்டங்களை வகுப்பதும் இவரது பணியாகும். இது சாதாரண மக்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் ஒன்றாகவே உள்ளது.
வி ஆனந்த நாகேஸ்வரன், தலைமை பொருளாதார ஆலோசகர்:
ஐஐஎம்-அகமதாபாத்தின் முன்னாள் மாணவரும், மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவருமான நாகேஸ்வரன், இதற்கு முன்பு பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் பகுதி நேர உறுப்பினராக இருந்துள்ளார். அவரும் அவரது குழுவும் தயாரிக்கும் பொருளாதார ஆய்வறிக்கை, வளர்ச்சியை அதிகரிப்பதற்கான சீர்திருத்தங்களைக் கோடிட்டுக் காட்டுவதில் முக்கியமானது. தற்போதுள்ள உலகமயமாக்கல் சூழலில் இது முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
மனோஜ் கோவில், செலவினத் துறை செயலாளர்:
மத்தியப் பிரதேச கேடரைச் சேர்ந்த 1991 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான மனோஜ் கோவில், இந்த துறைக்கு வரும் முன்பு கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் செயலாளராகப் பணியாற்றினார். அரசு செலவினங்களைச் சரியாக நிர்வகிப்பதும், மானியங்கள் மற்றும் மத்திய நிதியுதவி திட்டங்களில் சரியான முடிவெடுப்பதும் இவரது பணியாகும்.
எம் நாகராஜு, நிதி சேவைகள் துறை செயலாளர்
1993 பேட்ச் திரிபுரா கேடர் ஐஏஎஸ் அதிகாரியான நாகராஜு, நிலக்கரி கூடுதல் செயலாளராகப் பணியாற்றிய பிறகு நிதிச் சேவைத் துறையில் நியமிக்கப்பட்டார். கடன் வழங்கும் வழிமுறை, டெபாசிட் திரட்டுதல், காப்பீட்டுத் தொகையை விரிவுபடுத்துதல் மற்றும் டிஜிட்டல் பேங்கிங்கை மேம்படுத்துதல் ஆகியவற்றை நிர்வகிக்கும் பொறுப்பு இவருடையதாகும்.
அருணிஷ் சாவ்லா, DIPAM மற்றும் DPE துறை செயலாளர்:
பீகாரைச் சேர்ந்த 1992 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான அருணிஷ் சாவ்லா, முன்பு மருந்துத் துறை செயலாளராக இருந்தார். தற்போது முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறை (டிஐபிஏஎம்) மற்றும் பொது நிறுவன துறை (டிபிஇ) ஆகியவற்றின் செயலாளராக உள்ளார். அரசு முதலீடுகளைக் குறைப்பது, அரசு சொத்துகளைப் பணமாக்குதல், அரசு நடத்தும் நிறுவனங்களிலிருந்து முக்கிய சொத்துக்களின் மதிப்பை அன்லாக் செய்வது ஆகியவை இவரது பொறுப்பாகும்.












Click it and Unblock the Notifications