வாஜ்பாய் பெயரில் புதிய கட்சி.. பாஜகவை மிரட்டி பார்க்கும் யஷ்வந்த் சின்ஹா.. யார் இவர் தெரியுமா?
டெல்லி: இந்தியாவில் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான யஷ்வந்த் சின்ஹா புதிய கட்சியை தொடங்கி உள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் வாஜ்பாயை நினைவு கூறும் வகையில் அடல் விசார் மஞ்ச் என்ற பெயரில் அவர் கட்சியை தொடங்கி உள்ளார். கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் யஷ்வந்த் சின்ஹா ‛இந்தியா' கூட்டணி சார்பில் வேட்பாளராக திரெளபதி முர்முவை எதிர்த்து களமிறங்கிய நிலையில் அவர் வாஜ்பாய் நினைவாக கட்சி தொடங்கியது ஏன்? யஷ்வந்த் சின்ஹாவின் பின்னணி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
பீகாரில் பிறந்தவர் யஷ்வந்த் சின்ஹா. முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரான இவர் தற்போது இந்தியாவில் உள்ள மூத்த அரசியல் கட்சி தலைவர்களில் ஒருவர். இந்நிலையில் தான் ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் பகுதியில் பத்திரிகையாளர்களை சந்தித்த யஷ்வந்த் சின்ஹா புதிய கட்சியை தொடங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவர் தனது கட்சி பெயரை அடல் விசார் மாஞ்ச்(Atal Vichar Mach) என அறிமுகம் செய்துள்ளார். பாஜகவை சேர்ந்த மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவாக அவர் கட்சி தொடங்கி உள்ளதாக தெரிவித்தார். மேலும் வரும் நாட்களில் அனைத்து தேர்தல்களிலும் அந்த கட்சி போட்டியிடும் என அறிவித்துள்ளார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனை மனதில் வைத்து தான் யஷ்வந்த் சின்ஹா ஜார்கண்ட்டில் கட்சி அறிவிப்பை செய்துள்ளார். மேலும் அவரது கட்சி ஜார்கண்ட் சட்டசபை தேர்தலில் களமிறங்க வாய்ப்புள்ளது.இந்நிலையில் தான் ‛அடல் விசார் மாஞ்ச்' என்ற பெயரில் கட்சி தொடங்கி உள்ள யஷ்வந்த் சின்ஹா யார்? அவரது பின்னணி என்ன என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
யஷ்வந்த் சின்ஹா பீகார் மாநிலம் பாட்னாவில் 1937ல் பிறந்தார். 1958ல் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1960 வரை பாட்னா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார். அதன்பிறகு யுபிஎஸ்சி தேர்வு எழுதி ஐஏஎஸ் ஆனார். பீகாரில் பணி நியமனம் பெற்ற யஷ்வந்த் சின்ஹா 24 ஆண்டுக்காலம் பல்வேறு பதவிகளை வகித்திருக்கிறார். 1971 முதல் 1974 வரை ஜெர்மனியில் பான் நகரில் உள்ள இந்திய தூதரகத்தின் முதன்மைச் செயலாளராக யஷ்வந்த் சின்ஹா நியமிக்கப்பட்டார். அதன்பிறகு பீகாரில் 1977 ல் கர்பூரி தாகூர் முதல்வராக இருந்தபோது அரசு முதன்மை செயலாளராக செயல்பட்டார்.
அதன்பிறகு அவர் 1984ல் ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்தார். ஜெயபிரகாஷ் நாராயணன் மீது ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக அவர் ஜனதா கட்சியில் இணைந்தார். 1988ல் ராஜ்ய சபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989ல் ஜனதா தளம் கட்சி உருவானபோது அதன் பொதுச்செயலாளராகப் பதவி வகித்தார். 1990 முதல் 1991 வரை முன்னாள் பிரதமர் சந்திரசேகர் சேகர் அமைச்சரவையில் மத்திய நிதி அமைச்சராக இருந்தார்.
அதன்பிறகு வாஜ்பாயின் செயல்பாடுகளால் கவரப்பட்டார். 1996ல் பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளராக பொறுப்பு வகித்தார். வாஜ்பாய் தலைமையிலான மத்திய பாஜக அரசில் 1998-ல் நிதி அமைச்சராக இருந்த அவர் 2002ம் ஆண்டு வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். யஷ்வந்த் சின்ஹா பீகாரில் பிறந்திருந்தாலும் கூட அவரது அரசியல் செயல்பாடுகள் ஜார்கண்ட்டில் தான் இருந்தது. கடந்த 1998, 1999, 2009 ஆகிய லோக்சபா தேர்தல்களில் ஜார்கண்ட்டின் ஹசாரிபாக் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2004ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் புவனேஷ்வர் பிரசாத் மேக்தாவிடம் தோல்வியடைந்தார்.
அதன்பிறகு பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தன்னை ஓரம்கட்டுவதாக அவர் நினைத்தார். இதனால் 2021ல் யஷ்வந்த் சின்ஹா பாஜகவில் இருந்து வெளியேறினார். இதையடுத்து அவர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து செயல்பட்டு வந்த நிலையில் தான் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பாஜக சார்பில் திரெளபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் கூட்டணி வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இந்நிலையில் தான் தற்போது அவர் வாஜ்பாய் பெயரில் அடல் விசார் மஞ்ச் என்ற பெயரில் கட்சியை தொடங்கி உள்ளார். இவர் தனது பிரஸ்மீட்டில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சித்தாந்தங்களை செயல்படுத்த கட்சி தொடங்கி உள்ளதாக கூறினார். இதன்மூலம் அவர் பாஜகவை மிரட்டும் வகையில் கட்சி தொடங்கி உள்ளாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications