க்யூ.ஆர் கோட் உடன் வரும் "பான் 2.0.." யாரெல்லாம் அப்ளை செய்ய வேண்டும்! இதற்கான கட்டணம் எவ்வளவு
டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இப்போது பான் 2.0 திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் குறித்த 8 முக்கிய கேள்விகளையும் அதற்கான பதிலையும் நாம் பார்க்கலாம். குறிப்பாக இந்த புதிய பான் 2.0க்கு நாம் விண்ணப்பிக்க வேண்டுமா.. இதற்கு என்ன கட்டணம் என்பது குறித்தும் நாம் பார்க்கலாம்.
நாடு முழுக்க காகிதமற்ற மற்றும் ஆன்லைன் முறையிலான பான் அமைப்பை உருவாக்க மத்திய அமைச்சரவை நேற்றைய தினம் பான் 2.0 திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

பான் 2.0: இந்தத் திட்டத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (சிசிஇஏ) ஒப்புதல் அளித்துள்ளது. பிஸ்னஸ்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது, தற்போதுள்ள சிக்கல்களை எளிதாகத் தீர்ப்பது, சைபர் பாதுகாப்பை மேம்படுத்துவது ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு உருவாக்கப்படும்.
மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்குகிறது: இந்த பான் 2.0 திட்டத்தை மிகச் சிறப்பாகச் செயல்படுத்த மத்திய அரசு இதற்கு ரூ.1,435 கோடி ஒதுக்கவுள்ளதாக உறுதியளித்துள்ளது.
இதன் நோக்கம் என்ன? டிஜிட்டல் முறையைப் பயன்படுத்தி மக்கள் தங்களை வரி செலுத்துவோராகப் பதிவு செய்வதை எளிதாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.. இதன் மூலம் மக்களுக்கு பல்வேறு பலன்கள் கிடைக்கும் நிலையில், அரசின் செயல்திறனும் அதிகரிக்கிறது.
நன்மைகள் என்ன? இதன் மூலம் பான் சார்ந்த சேவைகளை நம்மால் எளிதாக அணுக முடியும். இதன் மூலம் பான் சேவைகளின் தரம் மற்றும் வேகத்தை அதிகரிக்க முடியும். இது முழுக்க முழுக்க டிஜிட்டல் முறையில் இருக்கும் என்பதால் இதற்கான செலவுகள் குறையும். சுற்றுச்சூழலையும் பெரியளவில் பாதிக்காத ஒன்றாக இருக்கும்.
அப்டேட் என்ன? தற்போதுள்ள பான் மற்றும் டான் 1.0 கட்டமைப்பை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும். இதன் மூலம் கோர் மற்றும் நான் கோர் பான்/ டான் தேவைகளை ஒரே இடத்தில் செய்ய முடியும். மேலும், பான் வெலிடெஷன் சர்வீஸையும் இது எளிதாக்க உதவுகிறது.
என்ன மாற்றம்? டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த பான் 2.0 திட்டம் செயல்படுத்தப்படும். இதனால் அரசு நிறுவனங்களின் அனைத்து டிஜிட்டல் சேவைகளுக்கும் பொதுவான அடையாளமாக பான் மாறும். மேலும், பான் கார்ட் வைத்திருப்போரின் அனைத்து தகவல்களையும் எளிதாக அணுகும் வகையில் க்யூ.ஆர் கோட் வசதியும் இதில் இருக்கும்
ஏன் முக்கியம்: பான் சார்ந்த ஏழும் பிரச்சினைகளை மிக வேகமாக குறை தீர்ப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் கூறுகிறார். இது பொதுமக்களின் தேவைகளை எளிதாகப் பூர்த்தி செய்யும்.
தற்போதைய நிலை என்ன? இப்போது நாடு முழுக்க மொத்தம் 78 கோடி பான் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் சுமார் 98 சதவீதம் பான் கார்டுகள் தனிநபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
யார் விண்ணப்பிக்க வேண்டும்? தற்போதுள்ள பான் கார்டு வைத்திருப்பவர்கள் எதையும் மாற்றவோ அல்லது புதிய கார்டுகளுக்கு விண்ணப்பிக்கவோ தேவையில்லை. பேக் கிரவுண்டிலேயே அனைத்தும் நடக்கும். அதேநேரம் க்யூஆர் கோட் உடன் கூடிய பான் கார்ட் தேவை என்றால் மட்டும் அப்ளை செய்து கொள்ளலாம். அது இலவசமாகவே வழங்கப்படும்.
PAN 2.0 is now approved by govt who to apply (பான் கார்டு 2.0ஐ திட்டத்திற்கு யார் எல்லாம் விண்ணப்பிக்க வேண்டும்): All things to know about PAN 2.0.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications