வான் மகன் அபிநந்தனுடன் வீர நடை போட்ட அந்த பெண்மணி யார்? வாவ்.. ! ஆச்சர்ய தகவல்கள்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    அபிநந்தனுடன் வீர நடை போட்ட அந்த பெண்மணி யார்?- வீடியோ

    டெல்லி: பாகிஸ்தானில் இருந்து இந்திய விமானி அபிநந்தனுடன் சேர்ந்து வந்த பெண் அதிகாரி யார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

    பாகிஸ்தான் வசமிருந்த இந்திய விமானப்படை வீரர் தமிழகத்தின் தங்க மகன் அபிநந்தனை நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விடுவிப்பதாக அறிவித்தார். இந்நிலையில், நேற்று இரவு 9:20 மணிக்கு வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் அபிநந்தனை ஒப்படைத்தனர்.

    அபிநந்தன் இந்தியா வருவதை நாடே கோலாகலமாக கொண்டாடி வந்தனர். நேற்று சமூக வலைத்தளங்களில் அபிநந்தனுடன் சேர்ந்து அந்த பெண் அதிகாரியும் வைரல் ஆகியது மட்டுமில்லாமல், அவர் யார் என்ற கேள்வியும் வைரலாக பரவியது.

    அவர் யார்?

    அவர் யார்?

    இந்நிலையில், அவர் யார்? என்ன பெயர் என்பது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன. அந்தப் பெண்மணி, அபிநந்தனின் குடும்ப உறுப்பினர் அல்ல. அவரது பெயர், பரிகா பக்தி என்பதாகும்.

    உயரதிகாரி

    உயரதிகாரி

    பாகிஸ்தானின் எப்.எஸ்.பி அதிகாரி. அதாவது எப்.எஸ்.பி. இந்தியாவின் ஐஎப்எஸ் பதவிக்கு இணையானது ஆகும். அவர் பாகிஸ்தான் வெளியுறவு செயலகத்தில் இயக்குநராக உள்ளார். அந்நாட்டின் வெளியுறவு செயலகத்தில் இந்திய விவகாரங்களை கவனிக்கும் பொறுப்பில் இருக்கிறார்.

    உதாரணம்

    உதாரணம்

    அவர்தான் நேற்று இரவு 9.20 மணிக்கு வாகா,அட்டாரி எல்லையில் அபிநந்தன் கால் வைத்தபோது உடன் வந்து அவரை ஒப்படைத்தார். இவர் யார் என்று எளிதாக மனதில் வைத்துக் கொள்ள மற்றொரு சம்பவத்தை உதாரணமாக கூறலாம்.

    குல்பூஷன் ஜாதவ் விவகாரம்

    குல்பூஷன் ஜாதவ் விவகாரம்

    இந்திய உளவாளியாக குற்றம்சாட்டப்பட்டு, பாகிஸ்தான் பிடியில் வைத்து இருக்கும் குல்பூஷன் ஜாதவ் விவகாரத்தை கையாள்பவர் இதே பக்திதான். கடந்த ஆண்டு இஸ்லாமாபாத்தில் ஜாதவை அவரது தாயும், மனைவியும் சந்தித்த போது உடன் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+