ரிசல்ட் இன்று?.. பாஜகவுக்கே சான்ஸ்.. சீனியர்களுக்கும் வந்த ஆசை.. துணை ஜனாதிபதி வேட்பாளர் யார்..?
துணை ஜனாதிபதி தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் இன்று அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது
டெல்லி: விரைவில் துணை குடியரசு தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைய உள்ளநிலையில், யாரை வேட்பாளராக நியமிப்பது என்ற குழப்பத்தில் பாஜக சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
Recommended Video
ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18-ந் தேதி நடைபெற உள்ளது.. இந்த பதவிக்கு திரௌபதி முர்மு என்ற ஒடிசா மாநிலத்தைச் சேந்த பழங்குடியின தலைவரை பாஜக முன்னிறுத்தி உள்ளது..
இவரை குடியரசுத் தலைவராக்குவதன் மூலம் அடுத்து வரும் ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில், நாற்காலியை எட்டிப்பிடித்து விடலாம் என்பதே பாஜகவின் பிளானாக உள்ளதாக கூறப்படுகிறது.

வெங்கையா நாயுடு
மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின், மம்தா பானர்ஜி உட்பட எதிர்க்கட்சியினர் பலரும் ஒன்றாக இணைந்து யஷ்வந்த் சின்ஹாவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்துள்ளனர்... அதேபோல, தற்போதைய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவி காலம் ஆகஸ்ட் 10-ந் தேதியுடன் நிறைவடைகிறது.. ஆகையால் அதற்கு முன்னதாக புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய வேண்டும்... அதன்படி, 6ல் தேர்தல் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.. அன்றைய தினமே ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது..

பாஜக கூட்டணி
தற்போது, வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. துணை குடியரசுத் தலைவர் தேர்தலை பொறுத்தவரை, மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிக்கள் மற்றும் நியமன எம்பிக்கள் வாக்களிப்பார்கள். மொத்தமுள்ள 775 எம்பிக்களில் 388 எம்பிக்கள் வாக்களித்தால் மட்டுமே, துணை குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்க முடியும்.. அந்த வரிசையில், பாஜக கூட்டணியிடம் 395 எம்பிக்கள் இப்போதைக்கு இருப்பதால், பாஜக நிறுத்தும் வேட்பாளரே வெற்றி என்று இப்போதைக்கு உறுதியாகி உள்ளது.

அமரீந்தர் சிங்
அந்த வகையில், வெங்கையா நாயுடு, தன்னை இந்த முறையும் வேட்பாளராக பாஜக நிறுத்தும் என்று நம்பிக் கொண்டு இருக்கிறார்.. கட்சியில் சீனியர் என்பதாலும், இவருக்கு வேறு பதவி எதுவும் இல்லாத காரணத்தினாலும் இவரை பாஜக வேட்பாளராக தேர்ந்தெடுக்குமா தெரியவில்லை.. இந்த லிஸ்ட்டில் டாப்பில் உள்ளவர் பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்தான்.. இவர் ஏற்கனவே பாஜகவில் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜக சார்பில் இவர் நிறுத்தப்படலாம் என்று தகவல்கள் வட்டமடிக்கின்றன...

ஆளுநர் ரவி
அதேபோல, தமிழக ஆளுநர் ரவியும், இந்த பதவிக்கு முயற்சிப்பதாக கூறப்பட்டு வருகிறது.. பாஜகவை சேர்ந்த மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி பெயரும் இதே குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் லிஸ்ட்டில் உள்ளது.. இந்த முறை முஸ்லிம் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கும்பட்சத்தில், விரைவில் எம்பி தேர்தல் உள்ள நிலையில், சிறுபான்மை மக்களின் ஓட்டுக்களை பெறுவதற்காக, இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று பாஜக கணக்கு போடுகிறது.

முஸ்லிம் வேட்பாளர்
அதனால்தான், அப்பாஸ் நக்வி பெயருடன், கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் பெயரும் சேர்ந்தே அடிபடுகிறது. ஆனாலும், எனினும் வேட்பு மனு தாக்கல் முடிய, இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் வேட்பாளரை பாஜக இன்னும் அறிவிக்கவில்லை.. பார்லிமென்டின் இரு சபைகளிலும் பாஜவுக்கு முஸ்லிம் எம்பிக்கள் இல்லாததால், அவருக்கு துணை ஜனாதிபதி வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்பட்ட நிலையில், ஒரு வாரமாகியும் வேட்பாளர் அறிவிப்பதில் தாமதமாகி கொண்டே வருகிறதாம்..

சீனியர்கள்
இதற்கு நடுவில் பாஜக தேசிய தலைவர் நட்டாவும், துணை ஜனாதிபதி போஸ்டிங் கேட்கிறாராம்.. பல மூத்த மத்திய அமைச்சர்கள் துணை ஜனாதிபதி போஸ்டிங் கேட்டு கொண்டிருக்கிறார்களாம்.. இதனால், மேலிடம் குழம்பி உள்ளதாக கூறப்படுகிறது. துணை ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பொதுச்செயலர் தத்தாத்ரேய ஹொசபோலே பாஜக பொறுப்பாளரான ஆர்எஸ்எஸ் இணைப் பொதுச்செயலர் அருண்குமார் ஆகியோரிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நட்டா, அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ் ஆகியோர் ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள்..

யார் அவர்?
அதேபோல, டெல்லியில் இன்று பாஜக பார்லிமென்ட் குழு கூட்டம் நடைபெற இருப்பதாகவும் அதில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்றும் ஒரு தகவல் வட்டமடிக்கிறது.. எப்படியும் இன்றைய தினம் வேட்பாளர் அறிவித்துவிடுவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.. எப்படியும், வெற்றி பெறுவது கடினம் என்பதால், துணை ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ்-கம்யூனிஸ்ட்- திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யார் அவர்?
அதேபோல, டெல்லியில் இன்று பாஜக பார்லிமென்ட் குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்... எப்படியும், வேட்பாளர் யார் என்பது என்பதை இன்று மாலைக்குள் அறிவித்துவிடுவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.. அதேசமயம், வெற்றி பெறுவது கடினம் என்பதால், துணை ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ்-கம்யூனிஸ்ட்- திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
தலைவரை ஓரங்கட்டியவர்களுக்கு எதுக்கு வாக்கு! அண்ணாமலை ஆர்மி உள்ளடி வேலை! புலனாய்வில் இறங்கிய கமலாலயம் -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
"மாநில நலனையும் பலி கொடுக்க துணிந்துவிட்டார் என்பதே எடப்பாடியின் அமைதிக்கான அர்த்தம்"- சு.வெங்கடேசன் -
“கொடூரமானது.. அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்”- ப.சிதம்பரம் -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு












Click it and Unblock the Notifications