அடுத்த துணை குடியரசுத் தலைவராக யார் வர வாய்ப்பு இருக்கு தெரியுமா? காங்கிரஸ் எம்பி சசி தரூர் கணிப்பு
டெல்லி: துணை குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்தும் என்று சொல்லப்படுவதால் துணை குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டி இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அடுத்த குடியரசு துணைத்தலைவர் யார் வர வாய்ப்புள்ளது என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு காங்கிரஸ் எம்பி சசி தரூர் பதில் அளித்துள்ளார்.
துணைக் குடியரசுத்தலைவர் பொறுப்பில் இருந்து ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்துள்ளார். தனது உடல் நிலையை காரணம் காட்டி ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்த நிலையில், அடுத்த துணைக்குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான நடைமுறையை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

7 ஆம் தேதி முதல் வேட்புமனு
துணைக்குடியரசுத் தலைவர் தேர்தலை பொருத்தவரை மக்கள் பிரதிநிதிகள் மட்டுமே வாக்களிக்க முடியும். மக்கள் நேரடியாக வாக்களிக்க முடியாது. அதாவது, நாடாளுமன்ற எம்.பிக்கள் மட்டுமே வாக்களித்து துணைக்குடியரசுத் தலைவரை தேர்வு செய்வார்கள். தேர்தலுக்கான அறிவிக்கை வருகிற 7 ஆம் தேதி (வியாழக்கிழமை) வெளியாகிறது. அன்று முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
வேட்புமனு தாக்கலுக்கான கடைசி தேதி 21 ஆம் தேதி ஆகும். மறுநாள் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன. தாக்கல் செய்த வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதாக இருந்தால் 25 ஆம் தேதிக்குள் வாபஸ் பெற்றுக்கொள்ளலாம். ஒன்றுக்கு மேற்பட்டோர் போட்டியில் இருந்து, வாக்கெடுப்பு நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் அடுத்த மாதம் 9 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
வேட்பாளராக யார் நிறுத்தப்படுவார்?
வாக்கெடுப்பானது அன்றைய தினம் நாடாளுமன்றத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். அன்றே முடிவுகள் தெரிவிக்கப்படும். துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. தற்போது நாடாளுமன்ற இரு அவைகளின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 782 ஆக உள்ளது. இந்த 782 உறுப்பினர்களில் பாஜகவிற்கு லோக்சபாவில் 240 பேரும், ராஜ்யசபாவில் 99 பேரும் உள்ளனர்.
கூட்டணிக் கட்சி உறுப்பினர்களையும் சேர்த்துப் பார்த்தால் 450-க்கும் மேல் உள்ளனர். இதனால் ஆளுங்கட்சி வேட்பாளர் வெற்றி பெற வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஆளுங்கட்சி தரப்பில் வேட்பாளராக யார் நிறுத்தப்படுவார்? என்பதே தற்போது கேள்வியாக உள்ளது. பலரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு உள்ளன. இதன்பேரில் ஆலோசனை நடந்து வருகிறது.
சசி தரூர் எம்பி பதில்
இந்த நிலையில், மத்திய அரசுடன் இணக்கமான போக்குடன் உள்ள காங்கிரஸ் எம்.பி சசி தரூரிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த சசிதரூர், எனக்கு அது பற்றி எதுவும் தெரியாது. ஆளும் கட்சி யாரை முன்மொழிகிறதே அவர்களே வர வாய்ப்புள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில் மாநில எம்.எல்.ஏக்களும் வாக்களிக்கலாம். ஆனால், துணைக் குடியரசுத் தலைவருக்கு எம்பிக்கள் மட்டுமே வாக்களிக்க முடியும்.
எனவே, இதில் யார் பெரும்பான்மை பெறப்போகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அடுத்த துணைக் குடியரசுத் தலைவர் ஆளும் கட்சி முன்மொழியும் நபரே வரப்போகிறார். எதிர்க்கட்சிகளுடன் இந்த விவகாரத்தில் மத்திய அரசு கலந்து ஆலோசிக்கும் என்று நம்புகிறேன்" என்றார்.
துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல்
துணை குடியசுத்தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளரை நிறுத்தினால் துணைக்குடியரசுத் தலைவர் பதவிக்கு தேர்தல் என்பது நடைபெறும். துணைக்குடியரசுத் தலைவரே, ராஜ்யசபா தலைவராகவும் இருப்பார் என்பதால் இந்த பதவி என்பது அரசியல் அமைப்பு ரீதியாகவும் மிகவும் முக்கியத்துவம் பெற்ற ஒன்றாகும்.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications