Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இந்தியா vs ரஷ்யா.!" சரித்திரம் படைக்கப் போவது யார்! சந்திரயான் 3ஐ ஓவர்டேக் செய்யும் லூனா 25?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நிலவின் தென் துருவத்தில் யார் தரையிறங்குவது என்பதில் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் யார் வெல்வார் என்பது விரைவில் தெரிந்து விடும்.

நிலவு குறித்த ஆய்வுகளில் இப்போது பல்வேறு உலக நாடுகளும் தீவிரமாக இறங்கவிட்டன. இந்தியா தனது சந்திரயான் 3 ராக்கெட்டை கடந்த மாதம் வெற்றிகரமாக நிலவுக்கு அனுப்பியது. சந்திரயான் 3 என்பது இஸ்ரோவின் வழக்கமான ஒரு மிஷன் இல்லை. இது ஒட்டுமொத்த இந்திய மக்களின் கனவாகும்.

 Who will create history by landing in Lunar south poll India or Russia

கடந்த ஜூலை 14ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 3 ராக்கெட் ஆகஸ்ட் 23-24 தேதிகளில் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது. அதேபோல ரஷ்யாவும் நிலவு குறித்த ஆய்வுக்கு லூனா -25ஐ அனுப்பியுள்ளது. இது ஆகஸ்ட் 21-23 தேதிகளில் தரையிறங்க உள்ளது.

ஏன் தென் துருவம்: கடந்த சில ஆண்டுகளில் நடந்த ஆய்வுகளில் நாசா உள்ளிட்ட விண்வெளி ஏஜென்சிகள் நிலவின் தென் துருவத்தில் உறைந்த தண்ணீரைக் கண்டறிந்துள்ளனர். இது எரிபொருள், ஆக்ஸிஜன் மற்றும் குடிநீருக்கான மூலமாகச் செயல்படும்.. வரும் காலத்தில் செய்வாய் கிரகம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய மனிதர்கள் திட்டமிட்டுள்ள நிலையில், இது அவர்களுக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும்.

ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்காம்ஸ் மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆகிய இரண்டும் சந்திரனின் தென் துருவத்தில் முதன்முதலில் தரையிறங்கி மாபெரும் வரலாற்றைப் படைக்கவுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரைச் சந்திரயான்-3 என்பது சந்திரனை அடையும் இந்தியாவின் மூன்றாவது முயற்சியாகும். தென் துருவத்தில் தரையிறங்க எடுக்கப்படும் இரண்டாவது முயற்சியாகும். அதேநேரம் ரஷ்யாவைப் பொறுத்தவரை அவர்கள் 1976க்குப் பிறகு முதல்முறையாக இப்போது லூனா 25ஐ அனுப்புகிறார்கள்.

எப்போது தரையிறங்கும்: இரண்டும் கிட்டதட்ட ஒரே காலத்தில் தரையிறங்க உள்ளதால் எங்கு இரண்டும் மோதும் அபாயம் ஏற்படுமோ என்று பலரும் கவலை கொண்டனர். இருப்பினும், இரண்டும் வெவ்வேறு இடங்களில் தான் தரையிறங்கும் என்பதால் இரண்டும் ஒரே பாதையில் வராது என்று ரஷ்யா தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. மேலும், அவை மோதும் ஆபத்து எதுவும் இல்லை என்றும் விளக்கம் தரப்பட்டுள்ளது.

இது குறித்து முன்னாள் இஸ்ரோ தலைவர் டாக்டர் கே சிவன் கூறுகையில், "சர்வதேச அளவில் இதுபோல பல ஆய்வுகள் நடந்து வருகிறது.. இரண்டு பயணங்களும் சந்திரனின் தென் துருவத்தை எட்டுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன.. இதில் யார் முதலில் தரையிறங்குவார்கள் என்பது போட்டி இல்லை. இரண்டு சாட்டிலைட்களுக்கும் வெவ்வேறு பணிகள் இருக்கிறது. ஒன்றை மற்றொன்று நிச்சயம் பாதிக்காது" என்று அவர் தெரிவித்தார்.

சந்திரயான் 3: சந்திரயான் 3 அனுப்பப்பட்டு 40 நாட்களுக்கு நிலவில் தரையிறங்க உள்ளது. அதேநேரம் லூனார் 25 ராக்கெட் அனுப்பிய 11 நாட்களில் சந்திரனில் தரையிறங்க உள்ளது. ரஷ்யாவின் சந்திரன் செயற்கைக்கோளின் இலகுரக வடிவமைப்பு, நேரடியாக நிலவுக்குப் பாயும் வகையில் செய்யப்பட்டிருந்த பிளான் காரணமாகச் சீக்கிரம் அவை நிலவுக்குச் செல்கிறது. லூனா-25 ஆனது 1,750 கிலோ எடை கொண்டதாகும். மறுபுறம் சந்திரயான்-3 ஆனது 3,900 கிலோ எடை கொண்டதாகும்.

ரஷ்யாவாக இருந்தாலும் சரி, இந்தியாவாக இருந்தாலும் சரி, எந்த நாடு வெற்றிகரமாகத் தென் துருவத்தில் தரையிறங்குகிறதோ அது மாபெரும் சாதனையைப் படைக்கும்.. நிலவு குறித்த ஆய்வில் அது புது சகாப்தத்தைப் படைக்கப் போகிறது என்பதில் சந்தேகமே இல்லை.

ராக்கெட்: சந்திரயான் 3 ராக்கெட் ஜூலை 14ஆம் தேதி எல்விஎம் 3 ராக்கெட் மூலம் விண்ணில் அனுப்பப்பட்டது. சந்திரயான் 3 ராக்கெட்டில் லேண்டர், ரோவர், பிரோபள்ஷன் மாடூல் என 3 இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி நிலவின் வளிமண்டலத்தில் நுழைந்த சந்திரயான் 3 ஆகஸ்ட் 23 இல்லது 24ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது. நிலவில் தரையிறங்கிய பிறகு 6 வீல்களை கொண்ட வாகனம் அங்கு 6 நாட்கள் ஆய்வுகளைச் செய்யவுள்ளது.

லூனார் 25ஐ பொறுத்தவரை ரஷ்யா சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு அனுப்பும் ஒரு ராக்கெட்டாகும். பல முறை தாமதத்திற்குப் பிறகு ஒரு வழியாகக் கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி அனுப்பப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி நிலவின் பாதைக்குள் நுழைந்த இது, ஆகஸ்ட் 21 அல்லது 22இல் தரையிறங்க உள்ளது. சந்திரயானைப் போல இல்லாமல் இது நிலவில் ஒரே இடத்தில் இருந்தே ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+