அசாமில் குழந்தை திருமணம்: கைது பண்ணுறது சரி..கைதானவர்களின் மனைவி, பிள்ளைகளுக்கு யார் பொறுப்பு..ஒவைசி
ஐதராபாத் எம்.பியும், ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவருமான அசாதுதின் ஓவைசி குழந்தை திருமணங்களுக்கு எதிரான அசாம் அரசின் நடவடிக்கையை விமர்சித்து பேசியுள்ளார்.
டெல்லி: அசாமில் குழந்தை திருமணங்களை தடுக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் 1,800 பேர் அங்கு கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், அசாம் அரசின் இந்த நடவடிக்கையை விமர்சித்துள்ள ஓவைசி கைதான நபர்களின் மனைவி, பிள்ளைகளை யார் கவனித்துக் கொள்வார்கள் என்று சாடியுள்ளார்.
இந்தியாவில் ஆண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 21 என்றும் பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 18 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த குறிப்பிட்ட வயதிற்கு கீழே உள்ள ஆண்கள், பெண்கள் திருமணம் செய்து கொள்வது சட்ட விரோதம் ஆகும். குழந்தை திருமணங்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

சட்டவிரோத குழந்தை திருமணம்
இந்த நிலையில் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் சட்டவிரோத குழந்தை திருமணங்கள் அதிக அளவில் நடப்பது அங்கு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து குழந்தை திருமணங்களை முடிவுக்கு கொண்டு வருவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்தது. அதன்படி, அசாம் மாநிலத்தில் சட்ட விரோதமாக குழந்தை திருமணங்கள் நடைபெறுவது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

1,800-க்கும் மேற்பட்டோர் கைது
குழந்தை திருமணங்களை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அதிரடி நடவடிக்கை எடுப்பது, குற்றவாளிகளை கைது செய்வது, விரிவான வகையில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்வது என்று கடந்த 23-ந் தேதி முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா தலைமையில் கூடிய மாநில மந்திரிசபை முடிவு எடுத்தது. அதன்படி, அசாம் மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 1,800-க்கும் மேற்பட்டோர் குழந்தை திருமண விவகாரத்தில் கைது செய்யப்பட்டனர். இந்த தகவலை அம்மநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறினார்.

ஓவைசி விமர்சனம்
இது தொடர்பாக அவர் கூறும் போது, "அசாம் முழுவதும் குழந்தை திருமண தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த மூன்று நான்கு தினங்களுக்கு சட்டவிரோத திருமணங்கள் செய்து கொண்டவர்கள் மீதான நடவடிக்கை தொடரும். குழந்தை திருமணங்கள் தொடர்பாக சுமார் 4 ஆயிரம் வழக்குகள் கடந்த 15 தினங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார். இந்த நிலையில், ஐதராபாத் எம்.பியும், ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவருமான அசாதுதின் ஓவைசி குழந்தை திருமணங்களுக்கு எதிரான அசாம் அரசின் இந்த நடவடிக்கையை சாடியுள்ளார்.

மனைவிகளை யார் கவனித்துக் கொள்வார்கள்
அசாம் அரசின் இந்த ஆபரேஷனில் கைதான நபர்களின் மனைவிகளை யார் கவனித்துக் கொள்வார்கள் என்றும் ஓவைசி கேள்வி எழுப்பியிருக்கிறார். இது தொடர்பாக ஓவைசி கூறியிருப்பதாவது:- திருமணம் செய்து கொண்ட பெண்களின் நிலை என்ன? அவர்களை யார் கவனித்துக் கொள்வார்கள். 4 ஆயிரம் வழக்குகளை அசாம் அரசு பதிவு செய்துள்ளது. அவர்கள் ஏன் புதிய பள்ளிகளை திறப்பது இல்லை. அசாமில் உள்ள பாஜக அரசு முஸ்லிம்களுக்கு எதிராக பாரபட்சமாக செயல்படுகிறது. மேல் அசாமில் உள்ள நிலமில்லா மக்களுக்கு இலவச நிலங்களை கொடுக்கின்றனர். ஆனால் கீழ் அசாமில் உள்ள மக்களுக்கு இதே சலுகை வழங்கப்படவில்லை" என்றார்.

கைதிற்கு எதிராக பெண்கள் போராட்டம்
இதற்கிடையே, குழந்தை திருமணம் செய்து கொண்ட நபர்களை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்களின் போராட்டமும் அசாமில் நடைபெற்றது. தங்களின் கணவன்மார்களை கைது செய்ததால் குடும்பத்தை நடத்த வருமானம் இல்லை எனக்கூறி இளம்பெண்கள் பலர் தங்கள் குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களின் கணவன்மார்களும் மகன்களும் கைது செய்யப்பட்டால் நாங்கள் எப்படி வாழ்வது என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் பலர் கேள்வி எழுப்பினர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications