10% கோட்டா.. இது பெரும் அநீதி.. ஏன் இந்த இடஒதுக்கீடு மக்களுக்கு எதிரானது தெரியுமா?
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் இந்தியாவில் பல பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
Recommended Video

டெல்லி: பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் இந்தியாவில் பல பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட திருத்த மசோதா நேற்று லோக் சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இது இன்று ராஜ்ய சபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்த மசோதா பல வகையான கேள்விகளை, குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளது. மண்டல் கமிஷன் அளித்த பரிந்துரைக்கு முழுக்க முழுக்க எதிராக இருக்கும் இந்த மசோதா காரணமாக இந்தியாவின் ''சிஸ்டம்'' மொத்தமாக சீர்குலைய வாய்ப்புள்ளது.

என்ன கட்டுப்பாடு
இந்த இடஒதுக்கீட்டிற்கு சில வரையறைகள் விதிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி வருடத்திற்கு 8 லட்சம் ரூபாய்க்கு குறைவான வருமானம் ஒருவருக்கு இருக்க வேண்டும். விவசாய நிலம் 5 ஏக்கருக்கு குறைவாக இருக்க வேண்டும். வீடு இருக்கும் நிலம் 1000 சதுர அடிக்கும் குறைவாக இருக்க வேண்டும். நகரத்தில் 109 அடி நிலத்திற்கும் அதிகமான பகுதியில் வீடு இருக்க கூடாது. கிராமத்தில் 209 அடி நிலத்திற்கும் அதிகமான பகுதியில் வீடு இருக்க கூடாது.

இரண்டு ஒன்று கிடையாது
இந்த இடஒதுக்கீடு முறையில் நிறைய தவறுகள் இருக்கிறது. நாம் இதில் முதலில் கவனிக்க வேண்டிய விஷயம், சாதி ரீதியான இடஒதுக்கீடு, பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு ஆகிய இரண்டு இடஒதுக்கீடு முறையும் ஒன்று கிடையாது என்பதுதான். பொருளாதார நிலை எப்போது வேண்டுமானாலும் மாற கூடியது. அதற்கு பொருளாதார திட்டங்களை கொண்டு வரலாம். ஆனால் சாதி முறை பல ஆயிரம் வருடமாக இருப்பது. அதை மாற்ற இடஒதுக்கீடு மட்டுமே சரியாக இருக்கும். சாதி ரீதியாக ஏற்பட்ட ஏற்றத்தாழ்வை, பொருளாதார ரீதியாக ஏற்பட்டுள்ளது ஏற்றத்தாழ்வுடன் ஒப்பிட்டு, இடஒதுக்கீடு அளிப்பது, இந்திய அமைப்பையே சீரழிக்கும்.

யார் ஏழை
அதேபோல் பொருளாதார இடஒதுக்கீடு பெற நிறைய வரையறைகளை அரசு கூறி இருந்தாலும், இவர்களை எல்லாம் அரசு எப்படி இனம் காண போகிறது என்று எந்த விதமான குறிப்பும் இல்லை. ஒரே வீட்டில் அண்ணன் பணக்காரராகவும், தம்பி ஏழையாகவும் இருந்தால் என்ன செய்வார்கள், கணக்கில் காட்டாத பல கோடி சொத்துக்களை வைத்து இருந்தால், பினாமி பெயரில் சொத்து இருந்தால் என்ன செய்வார்கள் என்ற பல கேள்வி எழுந்துள்ளது. இதை எப்படி நடைமுறைபடுத்த போகிறார்கள் என்பதே கேள்விக்குறியாகி உள்ளது.

திடீரென்று மாறினால்
இதில் எழுந்துள்ள இன்னொரு பெரிய சந்தேகம், திடீரென்று ஒருவர் பணக்காரரானால், திடீரென்று அதிக சம்பள உயர்வு பெற்றால், சினிமாவில் நடித்து பிரபலம் ஆகி கோடிகளில் பணம் பெற்றால், இந்த இடஒதுக்கீடு நிறுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சாதி மொத்தமாக அழிந்தால் சாதி ரீதியான இடஒதுக்கீட்டை நிறுத்தலாம். ஆனால் அது நடக்க வாய்ப்பில்லை. அப்படியிருக்கும் போது பொருளாதார ரீதியான இடஒதுக்கீட்டிற்கு என்ன வரம்பு இருக்கிறது என்ற பெரிய கேள்வி உருவாகியுள்ளது.

திடீரென்று ஏழையானால்
அதேபோல் பெரும் பணக்காரர் ஒருவர் அனைத்து பணங்களையும் இழந்து ஏழையானால் என்ன நடக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் வருடத்திற்கு 8 லட்சம் ரூபாய் வருமானம் என்பது மாதம் 66666 ரூபாய். இவ்வளவு சம்பாதிப்பவர்களும், 5 ஏக்கர் நிலம் வைத்து இருப்பவர்களும் உண்மையில் ஏழையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பெரிய அநீதி
இது அனைத்தும் ஒரே ஒரு விஷயத்திற்கு மட்டுமே வழி வகுக்கும். இது சமுதாயத்தில் பின்தங்கி இருக்கும் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்பதே சரியானது. உதாரணமாக, ஏழையாக இருக்கும், 49 சதவிகித கோட்டா மூலம் இடம் கிடைக்காமல் இருக்கும் ஒரு இடைநிலை சாதி, பட்டியலின சாதியை சேர்ந்த நபர், இந்த கோட்டா மூலம் பெரிதும் பாதிக்கப்படுவர். இது ஏழையான பெரும்பான்மை மக்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட அநீதி ஆகும்.

வளர்ந்தவர்கள் மேலும் வளர்வார்கள்
இது ஏழையை மேலும் ஏழைகளாக மாற்றும். ஏற்கனவே பெரிய பதவிகளில் இருக்கும் மக்கள் இன்னும் பெரிய பதவிகளை பெற இது இன்னும் வழிவகுக்கும். முக்கியமாக பெரிய சமுதாய ஏற்றத்தாழ்வுகளை இது இந்தியாவில் கொண்டு வரும். இதனால் ஏழை தாயின் மகன் சக ஏழை தாயின் மகன்களுக்கு ஏன் உதவுவது இல்லை என்ற கேள்வி உருவாகி உள்ளது!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications