இந்திய எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவிய 100 சீன ராணுவ வீரர்கள்? உத்தரகாண்டில் ஆக.30ல் என்ன நடந்தது ?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி 100க்கும் மேற்பட்ட சீன ராணுவ வீரர்கள் உத்தரகாண்ட் மாநிலத்தில் பரஹோதி எல்லையை கடந்து அத்துமீறி நுழைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீன ராணுவ விரர்கள் சில மணி நேரத்திற்கு பிறகு திரும்பி சென்றதும் தற்போது தெரியவந்துள்ளது.

லடாக்கில் பல மலைப்பகுதிகள் விவகாரத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான எல்லை பிரச்சனை உள்ளது. இந்நிலையில் லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி ஊடுருவ முயன்றதன் காரணமாக கடந்த ஆண்டு லடாக்கில் பெரிய மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில் வடக்கு உத்தரகாண்டின் பரஹோதி பகுதியில் இந்த முறை சீனப் படைகளின் சமீபத்தில் நடத்திய எல்லை மீறிய ஊடுருவல் பற்றிய விவரங்கள் வெளிவருகின்றன.

சீன ராணுவம்

சீன ராணுவம்

சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் (பிஎல்ஏ) சுமார் 100 வீரர்கள் கடந்த மாதம் 5 கிமீ தொலைவில் உண்மையான கட்டுப்பாட்டு கோடு அல்லது எல்ஏசி நந்தா தேவி உயிர்க்கோள காப்பகத்தின் வடக்கே எல்லையை தாண்டியதாக, இந்த வார தொடக்கத்தில் எகனாமிக் டைம்ஸ் தெரிவித்து இருந்தது.

பிடிஐ தகவல்

பிடிஐ தகவல்

இந்நிலையில் சீன மக்கள் ராணுவத்தின் இந்த அத்துமீறல் ஆகஸ்ட் 30 அன்று நடந்துள்ளது. இந்தோ-திபெத்திய எல்லை காவல் துறை (ITBP)யால் பாதுகாக்கப்பட்ட பகுதியில் சில மணிநேரங்கள் இருந்த சீனப் படைகள் பின்னர் தங்களது எல்லைக்கு திரும்பி வந்தன என்று செய்தி நிறுவனமான பிடிஐ தெரிவித்துள்ளது.

சேதம் ஏற்படவில்லை

சேதம் ஏற்படவில்லை

சீன ராணுவத்தின் அத்து மீறல் குறித்து அதிகாரப்பூர்வ கருத்து எதுவும் இதுவரை இந்திய ராணுவம் தெரிவிக்கவில்லை. நந்தா தேவி உயிர்க்கோள காப்பகத்தின் வடக்கே உள்ள பரஹோதி பகுதியில் எந்த உள்கட்டமைப்புக்கும் சீன ராணுவத்தால் சேதம் ஏற்படவில்லை என்று இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

பரஹோதி

பரஹோதி

கடந்த ஆண்டு கிழக்கு லடாக்கின் பல பகுதிகளில் இந்திய மற்றும் சீன ராணுவத்தினருககு இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வந்தது. பல நாட்கள் நீடித்த பதற்றத்திற்கு பிறகு இரு தரப்பினரும் இரண்டு முக்கிய இடங்களில் பலமாக நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த சூழலில் தான் உத்தரகாண்டின் பரஹோதியில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி இந்திய எல்லைக்குள் ஊடுருவி பின்னர் தங்கள் எல்லைக்கு சென்றுள்ளனர்.
உத்தரகாண்டின் பரஹோதியில் அவ்வப்போது சிறியமோதல்கள் இருந்து வந்தாலும், ஆகஸ்ட் 30 அன்று 100 சீன ராணுவ வீரர்கள் இந்திய எல்லைக்குள் வந்ததாக கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சீன ஆர்வம்

சீன ஆர்வம்

சீன ராணுவம் உத்தரகாண்ட், லடாக் உள்பட இந்திய எல்லையை ஒட்டிய பகுதிகளில் உள்கட்டமைப்பு வளர்ச்சியை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தியாவும் எல்லையில் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறது. கிழக்கு லடாக்கில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து ஏறக்குறைய 3,500 கிமீ நீள எல்லையை இந்தியா தீவிரமாக கண்காணித்து வருகிறது. பாங்காங் ஏரி பகுதியில் ஏற்பட்ட வன்முறை மோதலைத் தொடர்ந்து இரு தரப்பினரும் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் மற்றும் கனரக ஆயுதங்களுடன் விரைந்து தங்கள் இருப்பை அதிகரித்தனர். தொடர்ச்சியான இராணுவ மற்றும் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளின் விளைவாக, இரு தரப்பினரும் கடந்த மாதம் கோக்ரா பகுதியில் படைகளை விலக்கினர், தற்போது ஒவ்வொரு பக்கமும் தற்போது 50,000 முதல் 60,000 வரை வீர்கள் எல்லையில் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+