இக்கட்டான நேரத்தில் கைகொடுத்த ரபேல் விமானங்கள்.. பாகிஸ்தான் எல்லைக்கு அருகே ஆடிய ருத்ர தாண்டவம்
ஸ்ரீநகர்: பாகிஸ்தான் எல்லைக்கு அருகே சென்று இந்தியாவின் ரபேல் விமானங்கள் தாக்குதல்களை நடத்தி உள்ளன. ரபேல் விமானங்களை இந்திய எல்லைக்கு கொண்டு சென்று, பாகிஸ்தான் உள்ளே செல்லாமல்.. இங்கிருந்தபடியே SCALP cruise missiles மற்றும் HAMMER ஆயுதங்களை ஏவி உள்ளனர்.
அதாவது LOC எனப்படும் கட்டுப்பாட்டு எல்லை பகுதிக்கு இந்தியாவின் ரபேல் விமானங்கள் சென்றுள்ளன. அங்கிருந்து தாக்கி உள்ளனர். இந்த தாக்குதல் பற்றி பார்க்கும் முன் ரபேல் விமானங்கள் பற்றி பார்க்கலாம்.
விமான வகை: ரஃபேல் ஒரு பல வகை (multi-role) போர் விமானம் ஆகும், இது காற்றிலும் தரையிலும் தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது.
நாடு: ரஃபேல் விமானத்தை ஒரு பிரான்ஸ் நாட்டின் Dassault Aviation நிறுவனம் உருவாக்கியது.
இந்தியாவுக்கு வந்தது எப்போது?: இந்தியா முதல் ரஃபேல் விமானங்களை ஜூலை 2020ல் பெற்றது.

ஒப்பந்தம்: இந்தியா 2016ல் பிரான்ஸுடன் 36 ரஃபேல் விமானங்களை வாங்க ரூ.59,000 கோடி மதிப்பில் ஒப்பந்தம் செய்தது.
வேகம்: ரஃபேல் ஒரு சூப்பர்சோனிக் விமானமாகும்; அதாவது இது 1 மணிநேரத்திற்கு 2,222 கி.மீ வேகத்தில் பறக்க முடியும்.
ஆயுதங்கள்: இது அதிக எடை கொண்ட நீண்ட தூர ஏவுகணைகளை இயக்க கூடியது. Meteor, SCALP, மற்றும் MICA ஆகிய ஏவுகணைகளை சுமக்க முடியும்.
செயல்திறன்: ஒரே நேரத்தில் பல பணி செய்யும் திறன் உள்ளது - தாக்குதல், பாதுகாப்பு, ரேடார் கண்காணிப்பு மற்றும் மின்னணு போர் ஆகியவற்றை செய்யும்.
நவீன தொழில்நுட்பம்: இது AESA ரேடார், Spectra Electronic Warfare System போன்ற நவீன வசதிகளுடன் வருகிறது.
இந்தியாவில் சேவை: இந்திய விமானப்படையில், ரஃபேல் விமானங்கள் '17 Golden Arrows' மற்றும் '101 Falcons' எனும் படைகளில் சேவை செய்கின்றன.
இக்கட்டான நேரத்தில் கைகொடுத்த ரபேல் விமானங்கள்:
இன்று நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் அட்டாக்கில் பாகிஸ்தான் உள்ளே செல்லாமல் பாகிஸ்தான் எல்லைக்கு அருகே நின்று தாக்க வேண்டும். அதோடு HAMMER precision-guided munition வகை ஏவுகணைகளான AASM, AASM ஹேமர் ஆயுதங்களை ஏவ வேண்டும். இது வானத்தில் இருந்து பூமியில் உள்ள இலக்கை தாக்கும் ஸ்மார்ட் ஏர்-டு-சர்ஃபேஸ் ஸ்டாண்ட்-ஆஃப் ஆயுதமாகும்.
அதேபோல் புயல் என்று அழைக்கப்படும் SCALP cruise missilesகளை ஏவ வேண்டும். இது ஒன்றரை டன் எடை கொண்டது. 600 கிமீ வரை சென்று தாக்க கூடியது. 1994-2001 வரை ஆய்வு செய்யப்பட்டு உருவாக்கப்பட்டு 2003ல் பயன்பாட்டிற்கு வந்தது. 5.1 m நீளம் கொண்டது. Mach 0.95 (323 m/s; 1,060 ft/ வேகம் கொண்டது. அதவாது ஒரு நொடிக்கு 1.163 கிலோ மீட்டர் செல்ல கூடி திறன் கொண்டது ஆகும் இது.
இது இரண்டையும் ஏவ கூடிய திறன் தேவை, அதே சமயம் தாக்குதல், பாதுகாப்பு, ரேடார் கண்காணிப்பு மற்றும் மின்னணு போர் ஆகியவற்றை ஒரே நேரத்தில் செய்யும் திறன் தேவை.. இதை எல்லாம் செய்யும் திறன் கொண்ட நவீன விமானம் ரபேல்தான். இதன் காரணமாகவே இன்று பாகிஸ்தான் எல்லையில் இருந்து ஆபரேஷன் சிந்தூரை பயன்படுத்த ரபேல் விமானங்கள் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications