பாஜக மீது நிதிஷ் குமாருக்கு அதிருப்தி? ஸ்டாலின் போல் நிதி ஆயோக்கில் பங்கேற்காமல் எஸ்கேப்! பின்னணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக்கின் நிர்வாக குழு கூட்டம் நடந்தது. இதனை ‛இந்தியா' கூட்டணி முதல்வர்கள் புறக்கணித்த நிலையில் பாஜக கூட்டணியில் உள்ள பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பங்கேற்காமல் தவிர்த்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பாஜக மீது நிதிஷ் குமார் அதிருப்தி உள்ளாரா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

மத்திய திட்ட கமிஷனுக்கு பதில் மத்திய அரசு ‛நிதி ஆயோக்' அமைப்பை உருவாக்கி உள்ளது. இதன் தலைவராக பிரதமர் மோடி உள்ளார். இந்நிலையில் தான் நிதி ஆயோக்கின் நிர்வாக குழு கூட்டம் டெல்லியில் இன்று நடந்து வருகிறது. இதில் பங்கேற்க அனைத்து மாநில முதல்வர்கள், ஆளுநர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

nitish kumar niti aayog

2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக்கும் இலக்கை எட்டுவதில் மாநிலங்களின் பங்கு குறித்து நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படவுள்ளது. மேலும், 'விக்சித் பாரத்-2024' தொலைநோக்குப் பார்வைக்கான அணுகுமுறை ஆவணம் மீது ஆலோசனை நடைபெறவுள்ளது. இதனால் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று மாநில முதல்வர்களுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக ‛இந்தியா' கூட்டணி கட்சிகளை சேர்ந்த முதல்வர்கள் அறிவித்தனர். தமிழக முதல்வர் முக ஸ்டாலின், கா்நாடக முதல்வர் சித்தராமையா, இமாச்சல பிரதேச முதல்வர் சுக்வீந்தர் சிங், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கேரளா முதல்வர் பினராயி விஜயன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டவர்கள் புறக்கணிப்பதாக அறிவித்தனர்.

மத்திய பட்ஜெட்டில் பீகார் மற்றும் ஆந்திரப் பிரதேசம் மாநிலங்களுக்கு மட்டும் அதிக அளவு நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. மற்ற மாநிலங்கள் புறக்கணிப்பட்டதாக கூறி அவர்கள் கூட்டத்தில் பங்கேற்க போவது இல்லை என புறக்கணிப்புக்கான காரணமாக அவர்கள் தெரிவித்தனர். இவர்கள் எதிர்க்கட்சிகளாக உள்ள நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.

ஆனால் பாஜக கூட்டணியில் அந்த கட்சி எம்எல்ஏக்களின் தயவில் பீகார் முதல்வராக செயல்பட்டு வரும் நிதிஷ் குமார் இந்த கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார். நிதிஷ் குமாருக்கு பதிலாக துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா ஆகியோர் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் நிதிஷ் குமார் பங்கேற்காமல் போனதற்கான காரணங்கள் என்பது உடனடியாக தெரியவில்லை.

இருப்பினும் கூட நிதிஷ் குமார் பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரினார். ஆனால் அதனை மத்திய அரசு ஏற்க மறுத்துவிட்டது. தற்போது மத்தியில் பாஜக ஆட்சியில் இருக்க நிதிஷ் குமாரின் 12 எம்பிக்களின் ஆதரவு என்பது முக்கியம். அதேபோல் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் 16 எம்பிக்களின் ஆதரவும் முக்கியம். இத்தகைய சூழலில் தான் ஆந்திராவுக்கு மத்திய அரசு பட்ஜெட்டில் பீகாரை விட அதிக நிதி வழங்கி உள்ளது. இதனால் நிதிஷ் குமார் அதிருப்தியடைந்து கூட்டத்தில் பங்கேற்கவில்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால் இதனை நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி முற்றிலுமாக மறுத்துள்ளது. இதுதொடர்பாக அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் நீரஜ் குமார் பேசுகையில், ‛‛நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்காமல் இருப்பது இது முதல் முறைல்ல. இதற்கு முன்பும் நிதிஷ் குமார் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காமல் இருந்துள்ளார். தற்போது பீகார் சார்பில் 2 துணை முதல்வர்களும் பங்கேற்றுள்ளனர். இதுதவிர பீகாரை சேர்ந்த 4 மத்திய அமைச்சர்கள் நிதி ஆயோக்கின் உறுப்பினர்களாக பங்கேற்றுள்ளனர். இதனால் இந்த விஷயத்தில் எதுவும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை'' என்றார்.

இருப்பினும் நிதிஷ் குமார் ஏன் இந்த நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தார் என்பது பற்றி அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. மாறாக முதல்வர் நிதிஷ் குமாருக்கு பதில் 2 தணை முதல்வர்கள் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளதாக மட்டும் அவர் தெரிவித்து நழுவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+