3 மாநிலங்களில் வென்றதும்.. மோடி கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்! மாநிலங்களுக்கு பெரிய சவுக்கடி.. போச்சு
டெல்லி: 5 மாநில சட்டசபை தேர்தல் முடிந்த நிலையில் 3 மாநில சட்டசபை தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றது. சட்டீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியை பிடித்தது.
ராஜஸ்தானில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேர்தல் நடந்த 199 தொகுதிகளில் பாஜக 115 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கான தகுதியைப் பெற்றது.

மத்திய பிரதேசத்தில்., பாஜக 163 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் வெறும் 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மெஜாரிட்டி பெற 116 இடங்கள் போதும். அங்கே சாதாரண வெற்றி இல்லாமல் மாபெரும் இமாலய வெற்றியை பாஜக பதிவு செய்து உள்ளது. இந்தியா கூட்டணி இல்லாமல் காங்கிரஸ் களமிறங்கியது அங்கே பாஜகவிற்கு சாதகமாக மாறியுள்ளது.
மேலும் சட்டசபை தேர்தலில் சத்தீஸ்கரில் பாஜக அபார வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளில் 54 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. சத்தீஸ்கரில் ஆட்சி அமைக்க 46 உறுப்பினர்கள் இருந்தால் போதுமானது. இதன் மூலம் அரிதி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது பாஜக. காங்கிரஸ் கட்சி 35 இடங்களில் மட்டும் வென்றது. கடந்த 2018 தேர்தலோடு ஒப்பிடுகையில் கையில் இருந்த 33 இடங்களை காங்கிரஸ் இழந்துள்ளது.
3 மாநிலங்களில் வெற்றி: இதில் 3 மாநிலங்களில் பாஜக மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. 3 மாநிலங்களில் வென்றதும் பாஜக முக்கியமான ஒரு முடிவை எடுத்துள்ளது. அதன்படி ராஜஸ்தான் முதலமைச்சர் பதவிக்கு பாஜகவில் பல தலைவர்களின் பெயர்கள் அடிபட்ட நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், முதல் முறை எம்.எல்.ஏவான பஜன்லால் சர்மா, முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.
அதேபோல் மத்திய பிரதேசத்தில் பாஜக யாரும் எதிர்பாராத விதமாக சீனியர் லீடர்களை ஓரம் கட்டிவிட்டு மோகன் யாதவை முதல்வராக தேர்வு செய்தது. யாதவ் சமூகத்தை சேர்ந்த ஒருவரை முதல்வராக்கிய பாஜக அதிரடி காட்டி உள்ளது. முக்கியமாக சிட்டிங் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஓரம் கட்டப்பட்டு உள்ளார். அதேபோல் சத்தீஸ்கர் மாநில புதிய முதல்வராக பழங்குடியினத் தலைவர் விஷ்ணு தியோ சாய் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
முதல்வர் வேட்பாளர்கள்: இதில் 3 மாநிலங்களிலும் முதல்வராக டெல்லி பாஜக மேலிடம் யாரை தேர்வு செய்யும் என்ற கேள்வி நிலவி வந்தது. மாநிலங்களில் பாஜகவின் முகமாக இருக்கும் நபர்களை ஒதுக்கிவிட்டு புதிய முகங்களை பாஜக கொண்டு வரும் முடிவை பாஜக எடுத்துள்ளது. மாநில அளவில் பாஜகவிற்கு என்று முகங்கள் உருவாவதை மோடியோ, டெல்லி மேலிடமோ விரும்பியதே இல்லை. உதாரணமாக கர்நாடாகாவில் பாஜகவின் முகமாக எடியூரப்பா இருந்தார்.
அவரை ஒதுக்கிவிட்டு பொம்மை முதல்வராக நியமிக்கப்பட்டார் . அந்த வகையில்தான் தற்போது ராஜஸ்தான் தேர்தலில் வென்ற நிலையில் அம்மாநில முகமான வசுந்தரா ராஜேவை டெல்லி மேலிடம் ஒதுக்கி உள்ளது. அதற்கு பதிலாக ராஜஸ்தானில் புதிய முகமான முதல் முறை எம்.எல்.ஏவான பஜன்லால் சர்மா முதல்வர் ஆகி உள்ளார்.
மத்திய பிரதேசம்: இன்னொரு பக்கம் மத்திய பிரதேசத்திலும் சிவராஜ் சிங் சவுகான் மாநில முகமாக இருப்பதால் கொஞ்சம் கொஞ்சமாக அவர் ஒதுக்கப்படலாம் என்கிறார்கள். தனக்கே போட்டியாக சிவராஜ் சிங் சவுகான் வரலாம் என்பதால் அவரை ஓரம்கட்ட மோடி பிளான் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மத்திய பிரதேசத்தில் பாஜக யாரும் எதிர்பாராத விதமாக சீனியர் லீடர்களை ஓரம் கட்டிவிட்டு மோகன் யாதவை முதல்வராக தேர்வு செய்தது.
சத்தீஸ்கர்: இது போக சத்தீஸ்கரில் முன்னாள் முதல்வர் டாக்டர் ராமன் சிங், அருண் சவ் துர்க். எம்பி விஜய் பாகேல் மற்றும் முன்னாள் ஐஏஎஸ் மற்றும் பாஜக பொதுச் செயலாளர் ஓபி சவுத்ரி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் முதல்வர் பதவிக்கு வலுவான போட்டியாளர்களாக இருந்தனர். அவர்கள் எல்லோரும் ஓரம்கட்டப்பட்டு உள்ளனர். தன்னை தவிர பாஜகவில் மாநில அளவில் வலுவான முகம் இருக்க கூடாது என்பதில் மோடி உறுதியாக இருப்பதாகவே தெரிகிறது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications