செம ப்ளான்.. திரௌபதி முர்முக்கு பாஜகவின் பிறந்தநாள் பரிசு -ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க இதான் காரணம்
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணியின் வேட்பாளராக ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்முவை தேர்வு செய்ததன் பின்னணி என்ன என்பதை இந்த செய்தியில் காணலாம்.
Recommended Video
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது. வரும் ஜூலை 18 ஆம் தேதி நாட்டின் 15 வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த 9 ஆம் தேதி அறிவித்தது.
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை தொடர்ந்து குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான பணியில் ஆளும் பாஜகவும், காங்கிரஸ், திரிணாமூல் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் முழு மூச்சாக இறங்கின.

குடியரசுத் தலைவர் வேட்பாளர்கள்
அதன் விளைவாக இன்று காலை முன்னாள் மத்திய அமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான யஷ்வந்த் சின்ஹா எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இதனை தொடர்ந்து பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளராக ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டு உள்ளார். நேற்று 64 வது பிறந்தநாளை கொண்டாடிய அவருக்கு பாஜக தனது பிறந்தநாள் பரிசாக இதை அளித்து இருக்கிறது.

திரௌபதி முர்மு ஏன்?
திரௌபதி முர்மு ஒடிசா மாநிலத்தின் பின்தங்கிய பகுதியிலிருந்து வந்த பழங்குடியின பெண் ஆவார். இதன் காரணமாக பெண்கள் மற்றும் பழங்குடியின மக்களின் ஆதரவு கிடைக்கும் என்பது பாஜகவின் திட்டம். இதற்கு முன்பாக இஸ்லாமியரான அப்துல் கலாமையும், கிறிஸ்வரான சங்க்மாவையும், தலித் சமுதாயத்தை சேர்ந்த ராம்நாத் கோவிந்தையும் குடியரசுத் தலைவர் வேட்பாளர்களாக நிறுத்தியது பாஜக. அந்த வரிசையில் மற்றுமொரு விளிம்புநிலை சமுதாயத்தை சேர்ந்தவரை அக்கட்சி வேட்பாளராக அறிவித்து இருக்கிறது.

தேர்தல் கணக்கு
2017 குடியரசுத் தலைவர் தேர்தலை ஒப்பிடுகையில் பாஜகவுக்கு இருக்கும் வாக்குகளின் எண்ணிக்கை குறைந்து இருக்கிறது. எனவே அக்கட்சி தன்னுடன் கூட்டணியில் உள்ள அதிமுக, எதிர்க்கட்சி கூட்டணியில் இல்லாத பாஜக மீதும் விமர்சனங்களை வைக்காத ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் பீகாரை ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சி எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்களை நம்பி இருக்கிறது. எனவேதான் ஒரு கல்லில் 2 மாங்காய் என்ற வியூகத்தின் அடிப்படையில் பிஜு ஜனதா தளத்தின் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் ஒடிசாவை சேர்ந்த பழங்குடி பெண்ணான திரௌபதி முர்முவை பாஜகவின் நிறுத்தி இருக்கிறது.

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்
அதே நேரம் இருவருமே ஆசிரியர்களாகவும், அரசு பணியாளர்களாகவும் இருந்தவர்கள். பாட்னா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய யஷ்வந்த் சின்ஹா, ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்று 24 ஆண்டுகள் பல்வேறு அரசு பதவிகளில் அங்கம் வகித்தவர். திரௌபதி முர்முவை பொறுத்தவரை பட்டப்படிப்பை முடித்த பிறகு ஆசிரியராக பணியாற்றியவர். அதன் பின்னர் அரசு ஊழியராக நீர்வளம் மற்றும் மின்சார துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றியவர்.

முக்கிய காரணம்
முன்னாள் பாஜக நிர்வாகியான திரௌபதி முர்மு அக்கட்சியின் திட்டங்கள், கொள்கைகளை ஆதரித்தே வந்துள்ளார். இனி நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வரும் புதிய மசோதாக்களுக்கு எந்த கேள்வியும் எழுப்பாமல் ஒப்புதல் அளிக்கும் சரியான நபரை குடியரசுத் தலைவராக்க வேண்டும் என திட்டமிட்டு இருந்த பாஜக, திரௌபதி முர்முவை வேட்பாளராக அறிவித்து இருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications