Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாட்னாவில் ஒன்று திரண்ட எதிர்க்கட்சிகள்.. தள்ளியே நிற்கும் கேசிஆர்.. என்ன காரணம்! பரபர தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பிஆர்எஸ் கட்சி கலந்து கொள்ளாத நிலையில், இது தொடர்பாக அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கே.டி. ராமாராவ் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற்றது. இந்த மக்களவை தேர்தலை அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைந்து எதிர்கொள்ள வேண்டும் எனத் தொடர்ச்சியாக எதிர்க்கட்சி தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

இருப்பினும், எதிர்க்கட்சிகள் இடையே பல கருத்து வேறுபாடுகள் இருந்தன. இந்தச் சூழலில் தான் இன்று பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் இதை ஏற்பாடு செய்திருந்தார்.

Why BRS party is staing away from opponents meet explains K.T. Rama Rao

16 எதிர்க்கட்சிகள்: பீகார் தலைநகர் பாட்னாவில் 16 எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டன. காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் தங்கள் கருத்து வேறுபாடுகளைத் தாண்டி கலந்து கொண்டன. அதேநேரம் இந்த மீட்டிங்கில் சில முக்கிய எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ளவில்லை. குறிப்பாக நவீன் பட்னாயக், கேசிஆர் உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்ளவில்லை.

தெலங்கானா முதல்வர் கேசிஆர் பிரதமர் மோடியை மிகக் கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், அவர் கலந்து கொள்ளாமல் போனது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இது குறித்து தெலுங்கானா நகர்ப்புற வளர்ச்சி அமைச்சரும் பிஆர்எஸ் கட்சித் தலைவருமான கே.டி. ராமாராவ் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

என்ன காரணம்: செய்தியாளர்களிடம் பேசிய கே.டி. ராமாராவ் "பாஜக அல்லது காங்கிரஸ் என இரண்டு கட்சிகளில் ஒரு கட்சி தான் உங்களை வழிநடத்த வேண்டும் என்று சொல்வதை ஏற்க முடியாது. ஒரு மாற்றுச் சித்தாந்தம் இருக்க வேண்டும் என்பதையே நாங்கள் நம்புகிறோம்" என்றார்.

இதற்கிடையே பாஜகவின் தேசிய தலைவர் நட்டாவும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். பாட்னாவில் எதிர்க்கட்சிகள் சந்தித்துள்ளது சந்தர்ப்பவாதம் என்றும் இது முரண்பாடுகள் நிறைந்தது என்றும் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா விமர்சித்துள்ளார்.

ஜே பி நட்டா: அவர் மேலும் கூறுகையில், "அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் ஒன்றாகக் கட்டித்தழுவிக்கொண்டு இருப்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சிறு வயதில் நான் பாட்னாவில் தான் பள்ளிப் படிப்பைப் படித்தேன். அப்போது என்ன நடந்தது என்பது எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. ராகுல் காந்தியின் பாட்டி இந்திரா காந்தி இதே லாலு பிரசாத் யாதவை 22 மாதங்களும் நிதிஷ்குமாரை 20 மாதங்களும் சிறையில் தள்ளினார்.

Why BRS party is staing away from opponents meet explains K.T. Rama Rao

இதை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துவிட மாட்டார்கள். இப்போது அரசியல் லாபத்திற்காக அவர்கள் ஒன்றாக இணைந்துள்ளனர். இதையெல்லாம் பொதுமக்கள் நம்ப மாட்டார்கள். அடுத்து வரும் தேர்தலிலும் நிச்சயம் பாஜகவே வெல்லும். பிரதமர் மோடி மீண்டும் பிரதமர் ஆவார். அதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை" என்றார்.

மறுபுறம் டெல்லியில் அதிகாரிகளை நியமிக்கும் அவசர சட்டத்திற்கு எதிராகக் காங்கிரஸ் குரல் கொடுக்கவில்லை என்றால் இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியாது என ஆம் ஆத்மி அறிவித்திருந்தது. இருப்பினும், கடைசி நேரத்தில் கெஜ்ரிவால் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். ஆனாலும், கூட்டம் முடிந்த உடனேயே காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கும் வகையில் ஆம் ஆத்மி கருத்து வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+