Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திடீரென சிபிஐ வசம் செல்லும் ஒடிசா ரயில் விபத்து.! உண்மையில் என்ன நடந்தது! சிபிஐ உள்ளே வர என்ன காரணம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஒடிசா ரயில் விபத்து கேஸ் சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு ரயில் விபத்திற்கு எதற்காக சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைக்கப்படுகிறது என்ற கேள்வி வரலாம் அதற்கான பதிலைப் பார்க்கலாம்.

கடந்த வெள்ளிக்கிழமை ஒடிசா மாநிலத்தில் அரங்கேறிய ரயில் விபத்து நாட்டையே அதிரச் செய்தது. கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் ஒரு சரக்கு ரயில் ஆகியவை ஒடிசாவில் மோதி விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் 275 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இன்னுமே சுமார் 50 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் நடந்த மிக மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

 Why CBI Is Investigating Odisha Train Tragedy

ரயில் விபத்து: இந்த ரயில் விபத்திற்கான காரணம் குறித்து ரயில்வே துறை இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதேநேரம் நேற்றைய தினம் இந்த வழக்கை சிபிஐக்கு பரிந்துரை செய்வதாக அறிவித்தனர். ரயில் விபத்து சிபிஐ விசாரணைக்கு ஏன் பரிந்துரைக்கப்படுகிறது என்ற கேள்வி உங்களுக்கு வரும் அதற்கான பதிலைப் பார்க்கலாம். இன்டர்லாக்கிங் அல்லது சிக்னலில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது.

இதில் சிபிஐ போன்ற விசாரணை அமைப்பால் மட்டுமே குற்றவியல் செயல் நடந்திருந்தால் அதைக் கண்டுபிடிக்க முடியும். இந்த விபத்து குறித்த அனைத்து கேள்விகளுக்கும் சிபிஐ விசாரணை நிச்சயம் பதிலளிக்கும். சிபிஐ விசாரணையுடன், ரயில்வே பாதுகாப்பு ஆணையாளரின் விசாரணையும் நடக்கும். ரயில்வே ஆணையர் இரண்டு வாரங்களில் அறிக்கை சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரயில்வே அமைச்சர்: ஏற்கனவே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த விபத்திற்கான அடிப்படை காரணத்தைக் கண்டுபிடித்துவிட்டதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசும் போது குறிப்பிட்டிருந்தார். மேலும், தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இன்டர்லாக்கிங்கில் ஏற்பட்ட பிரச்சினையே விபத்திற்குக் காரணம் என்று கூறுகிறார்கள். அதாவது கோரமண்டல் எக்ஸ்பிரசுக்கு சிக்னல் கொடுக்கப்பட்டு, அது உடனடியாக ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இது போல நடக்க வாய்ப்புகள் மிக மிகக் குறைவு என்கிறார்கள் வல்லுநர்கள்.

 Why CBI Is Investigating Odisha Train Tragedy

வல்லுநர்கள் சொல்வது என்ன: இது குறித்து வல்லுநர் எஸ்.கே.சின்ஹா கூறுகையில், "பொதுவாக இன்ட்ரலாக்கிங் வழங்கப்பட்ட உடன் பாதையை மாற்ற முடியாது. அதாவது ரயில் அந்த பாதையைக் கடந்து செல்லும் வரை அதை மாற்ற முடியாது. எனவே, இது குறித்து விரிவாக விசாரிக்க வேண்டும். என்ன தவறு நடந்தது என்பதைப் புரிந்துகொள்ள டேட்டாக்களை விரிவாக ஆய்வு செய்ய வேண்டும்.

நமது நாட்டில் பயன்படுத்தப்படும் எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் அமைப்புகள் வலுவானவை.. அது தானாகவே தோல்வியடைய வாய்ப்பே இல்லை. பொதுவாக இதுபோன்ற நிகழ்வுகளில் தண்டவாளங்களில் ஏற்படும் பிரச்சினையே முக்கிய காரணமாக இருக்கும். அதிக வெப்பத்தால் தண்டவாளத்தில் விரிசல் ஏற்படலாம். சமூக விரோதிகள் வேண்டுமென்றே தண்டவாளத்தைச் சேதப்படுத்துவதும் பெரும் பிரச்சினையாக உள்ளது.

24*7 இதைக் கண்காணிக்க ஒரு அமைப்பை உருவாக்குவது அவசியமாகிறது. அதேபோல டிராக் மேனேஜ்மேன்ட் சிஸ்டத்தில் எந்தவொரு தவறும் இருக்கவே கூடாது. அப்படியே தவறு இருந்தால் அது தானாக நிற்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே சிக்னல் அமைப்பில் ஏதோ ஒரு குறுக்கீடு இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது" என்று அவர் தெரிவித்தார்.

ஐஐடி கான்பூர் மெக்கானிக்கல் துறை பேராசிரியர் நளினாக்ஷ் எஸ் வியாஸ், "சிக்னல்களுக்கும் எலக்ட்ரானிக் முறைக்கும் இடையே இடைவெளி இருக்கலாம். அதாவது சிக்னல் தரப்பட்ட பின்னரும் இன்டர்லாக்கிங் நடக்காமலோ அல்லது பாதி மட்டுமோ நடந்து இருக்கலாம். இத மிகவும் அரிதாகவே நடக்கும். இதைக் கண்டறிந்துள்ளதாகவே ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போது வரை விசாரணை சரியான திசையிலேயே சென்று கொண்டிருக்கிறது" என்றார்.

இப்படி சில இடையூறு காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என்ற கோணமும் இருக்கிறது. இதனால் இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை தேவைப்படுகிறது. அதை சிபிஐயால் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்பதாலேயே இப்போது சிபிஐ வசம் இந்த கேஸ் ஒப்படைக்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+