வலிக்குது! 40 கேஸ் பெண்டிங்! போக்சோவில் பாஜக எம்பியை ஏன் கைது செய்யல? போலீசை சாடிய மகளிர் ஆணையம்
டெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சிங் மல்யுத்த வீராங்கணைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தாலும் கைது செய்யப்படாத நிலையில் டெல்லி போலீசை மகளிர் ஆணையம் கடுமையாக சாடியுள்ளது. உடனே கைது செய்ய வேண்டும் எனவும் மல்யுத்த வீராங்கணைகளை ரோட்டில் தரதரவென இழுத்து சென்ற சம்பவம் வலியை கொடுத்துள்ளதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளது.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக பாஜகவின் எம்பியான பிரிஜ் பூஷண் சரண் சிங் உள்ளார். இவர் மீது பாலியல் புகார் எழுந்தது. இவர் மல்யுத்த வீராங்கணைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டுகள் வெடித்தது. இந்த விஷயம் பூதாகமரமாக வெடித்தது.

மேலும் டெல்லியில் கடந்த ஜனவரி மாதம் பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்ய கோரி மல்யுத்த வீரர், வீராங்கணைகள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் பேச்சுவார்த்தையை தொடர்ந்து முடிவுக்கு வந்தது. இருப்பினும் அவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.
இதனால் கடந்த ஏப்ரலில் டெல்லி ஜந்தர் மந்தரில் வீரர், வீராங்கணைகள் மீண்டும் போராட்டம் நடத்தினர். இதையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவின்படி பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது போக்சோ உள்பட 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இருப்பினும் அவர் கைது செய்யப்படவில்லை. தொடர்ந்து போராட்டம் நடந்தது. இந்நிலையில் தான் புதிய நாடாளுமன்றம் திறப்பு விழாவையொட்டி இன்று நியாயம் கேட்டு மல்யுத்த வீரர், வீராங்கணைகள் டெல்லியில் பேரணி சென்றனர்.

அப்போது போலீசார் வழிமறித்து தரதரவென இழுத்து அனைவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தியாவுக்காக ஒலிம்பிக் உள்பட பல போட்டிகளில் பதக்கங்கள் வென்ற சாக்சி மாலிக், பஜ்ரங் புனியா, சங்கீதா போகத், வினேஷ் போகத் உள்பட பலர் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்நிலையில் தான் டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால், டெல்லி மாநகர போலீஸ் கமிஷனருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் டெல்லி போலீசாரை அவர் கடுமையாக சாடியுள்ளார். இதுதொடர்பாக எழுதப்பட்ட கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
டெல்லி ஜந்தர் மந்தரில் அமைதி வழியில் போராடி வரும் மல்யுத்த வீராங்கணைகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மீது டெல்லி போலீசார் நடத்திய தாக்குதலால் டெல்லி மகளிர் ஆணையம் மிகுந்த வலியை உணர்கிறது. சில மாதங்களுக்கு முன்பு சில மைனர் மல்யுத்த வீராங்கணைகள் உள்பட முன்னணி மல்யுத்த வீராங்கணைகள் பாஜக எம்பியான பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இவர் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த காலத்தில் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறினர். உச்சநீதிமன்ற தலையீட்டை தொடர்ந்து 2 வழக்குகள் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது ஏற்கனவே 40 கிரிமினல் வழக்குகள் உள்ள நிலையில் இந்த 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது.

18 வயது நிரம்பாத மைனர் பெண் அளித்த புகாரிலும் கூட டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் இன்றைய தினம் வரை பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்யாமல் உள்ளது. இதுதான் மல்யுத்த வீராங்கணைகளை போராட்டத்துக்கு தூண்டியதோடு, ஜந்தர் மந்தரில் ஒரு மாதம் போராட்டம் நடக்கிறது. டெல்லியை பொறுத்தமட்டில் தினமும் 6 பாலியல் தொல்லை வழக்குகள் பதிவாகும் நிலையில் குற்றம்சாட்டப்பட்டவர்களை போலீசார் கைது செய்ய முயற்சிக்கிறார்கள்.
ஆனால் பிரிஜ் பூஷண் சிங் இன்னும் கைது செய்யப்படாதது ஏன்?. இது அப்பட்டமான அநீதி என்றாக இருக்கலாம்?. மேலும் குற்றம் சாட்டப்பட்ட எம்பிக்கு பக்கபலமாக டெல்லி காவல்துறை இருப்பது போல் கருதப்படுவது என்பது நீதியை கேலிக்கூத்தாக்கும் வெளிப்படையான பாரபட்சமான அணுகுமுறையாகும். இதுதான் மல்யுத்த வீரர்களை டெல்லி தெருக்களில் இரவில் தூங்க வைத்து போராட வைத்துள்ளது. இவ்வாறு போராடிய மல்யுத்த வீராங்கணைகளையும், அவர்களின் குடுமப்த்தினரையும் போலீசார் தாக்கி கைது செய்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளன.

சாம்பியன் பட்டம் வென்ற மல்யுத்த வீராங்கணைகளை டெல்லி ரோட்டில் இழுத்து சென்றது என்பது போலீஸ் படைக்கு உரித்தான செயல் அல்ல. முதலில் மல்யுத்த வீராங்கணைகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். சாக்சி மாலிக், வினேஷ் போக்த சங்கீதா போகத் உள்ளிட்டவர்கள் நம் நாட்டின் சாம்பியன்கள். இவர்கள் காமன்வெல்த், ஒலிம்பிக்கில் பங்கேற்று இந்தியாவுக்கு புகழ் தேடி தந்தனர்கள். இதனால் கைது செய்யப்பட்ட மல்யத்த வீராங்கணை உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். மேலும் அவர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள பாஜக எம்பி பிரஜ் பூஷண் சரண் சிங்கை உடனடியாகை கைது சய்ய வேண்டும். இது மிகவும் சீரியஸான மேட்டராகும். அதோடு நீதி சார்ந்த விஷயமாகும். மேலும் பெண் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக நீதியை நிலைநாட்ட வேண்டிய தருணம் இதுவாகும்'' என கூறப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications