சீக்ரெட்டை கண்டுபிடிங்க! கனிமொழிக்கு வந்த டாஸ்க்.. ராகுல் யாத்திரைக்கு போனது ஏன்? ஓ இதான் சங்கதியா?
டெல்லி: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் திடீரென திமுக எம்பி கனிமொழி கலந்து கொண்டது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தலைமையில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை யாத்திரை நடைபெற்று வருகிறது. இந்த மாபெரும் யாத்திரை மக்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. தினமும் 20-30 கிமீ தூரத்தை ராகுல் காந்தி நடந்தே கடக்கிறார். தற்போது இந்த யாத்திரைக்கு மக்கள் தரும் ஆதரவும் அதிகரித்து உள்ளது.
150 நாட்கள் காங்கிரஸ் சார்பாக இந்த யாத்திரை நடத்தப்பட உள்ளது. தற்போது வரை 108 நாட்கள் இந்த யாத்திரை நிறைவு பெற்றுள்ளது. இந்த யாத்திரை தற்போது டெல்லியில் நுழைந்து உள்ளது.

ராகுல் காந்தி
கடந்த சனிக்கிழமை டெல்லியில் பாதயாத்திரை நுழைவதற்கு முன் வெள்ளிக்கிழமை டெல்லி எல்லையில் பரிதாபாத் சென்ற ராகுல் காந்தி அங்கு மக்களை சந்தித்தார். திரளாக வந்து இருந்த ஆயிரக்கணக்கான காங்கிரஸ் கட்சியினர், பொதுமக்களை ராகுல் காந்தி சந்தித்தார். வெள்ளிக்கிழமை நடந்த யாத்திரையில் திமுக எம்பி கனிமொழி கலந்து கொண்டார். ராகுல் காந்தியுடன் கனிமொழி யாத்திரையில் கலந்து கொண்டு ஒன்றாக நடந்தார். ராகுலின் வேகத்திற்கு ஈடு கொடுத்து வேகமாக நடந்து சென்றார். கனிமொழி திமுகவின் வண்ணமான கருப்பு சிவப்பு உடையில் இன்று கூட்டத்தில் கலந்து கொண்டார்.

கமல்ஹாசன்
ராகுல் காந்தியுடன் பேசியபடி இவர் இந்த பயணத்தில் கலந்து கொண்டார். இவர்கள் அங்கே இருந்த மக்களிடமும் பேசி குறைகளை கேட்டறிந்தனர். ராகுல் நடத்திய ஒற்றுமை யாத்திரையில் திடீரென்று திமுக எம்.பி.கனிமொழி கலந்து கொண்டது கவனத்தை பெற்றது. இது பற்றி பெரிதாக தகவல் எதுவும் வெளியாகாத நிலையில்தான் கனிமொழி திடீரென இந்த யாத்திரையில் பங்கேற்றார். இது, திமுகவினர் இடையிலும் சீரியசாக கவனிக்கப்பட்டது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கும் நிலையில், கனிமொழி கலந்துகொண்டது எப்படி திமுகவினர் சீரியசாக பார்க்க முடியும் ? என்ற கேள்வி எழலாம்.

கனிமொழி
ஆனால், கனிமொழி கலந்துகொண்டதன் பின்னணியில் சில விசயங்கள் இருக்கிறது என்கிறார்கள் திமுகவினர். நம்மிடம் பேசிய திமுக நிர்வாகிகள், "ராகுல் நடத்தும் யாத்திரை டெல்லியை அடைகிறபோது சில சந்திப்புகளை நடத்த ராகுல் நினைத்தார். அந்த வகையில். கமலுக்கும் விடுதலை சிறுத்தை திருமாவுக்கும் கடிதம் எழுதி யாத்திரையில் கலந்துகொள்ள அழைத்திருந்தார் ராகுல். ஆனால், திமுகவுக்கு அழைப்பில்லை. திமுக எம்பிக்கள் பலர் டெல்லியில் இருக்கிறார்கள். அப்படி இருக்க திமுக தரப்பில் இருந்தும் யாரையும் ராகுல் அழைக்கவில்லை.

என்ன காரணம்?
ஆனால் கமலையும் திருமாவையும் ராகுல் அழைக்கிறார் எனில், ஏதோ எதிர்கால திட்டமிருக்கிறது என எங்கள் தலைமை (திமுக) யோசித்தது. அதன் ரகசியத்தை அறிந்து கொள்ளவே ராகுலின் யாத்திரைக்கு சென்று வருமாறு கனிமொழிக்கு சொல்லப்பட்டது. அதனடிப்படையிலேயே, கனிமொழி கலந்துகொண்டார் என்கிறார்கள். ஆனால், காங்கிரசின் அரசியல் திட்டம் என்னவென்பது தலைமைக்கு இன்னும் தெரியவரவில்லை" என்கிறார்கள் உடன்பிறப்புகள். இந்த சீக்ரெட்டை தெரிந்து கொள்ளவே கனிமொழி அந்த யாத்திரைக்கு சென்றுள்ளாராம்.

இதுதான் சங்கதி?
ஆனால் காங்கிரஸ் தரப்பினரோ.. கமல் இந்த யாத்திரையில் கலந்து கொள்ளும் முடிவு அவரின் சொந்த முடிவு. மற்றபடி திமுகவை அழைக்க கூடாது என்றெல்லாம் இல்லை. இந்த மாபெரும் யாத்திரையை தொடங்கி வைத்ததே திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின்தானே? அப்படி இருக்க திமுகவை அழைக்க ராகுல் காந்தி ஏன் யோசிக்க வேண்டும் என்று விளக்கி உள்ளனர். முன்னதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கடந்த சனிக்கிழமை இந்த பேரணியில் கலந்து கொண்டார்.

என்ன சொன்னார்?
இதற்காக பெரிய அணியை கமல்ஹாசன் தேர்வு செய்து இருந்தார்., கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், தனக்கு என்று கமல்ஹாசன் சார்பாக 300 பேர் கொண்ட குழு இந்த யாத்திரையில் நேற்று கலந்து கொண்டனர். நான் ஏன் இங்கே இருக்கிறேன் என்று பலர் என்னிடம் கேட்பார்கள். நான் ஒரு இந்தியனாக இங்கே இருக்கிறேன். என் அப்பா ஒரு காங்கிரஸ் நிர்வாகி. எனக்கு பல்வேறு அரசியல் கொள்கைகள் இருந்துள்ளன. நான் தனியாக கட்சி நடத்தி வருகிறேன். ஆனால் என்னுடைய நாடு என்று வரும் போது, கட்சி கோடுகள், எல்லைகள் எல்லாம் மறைந்துவிடும். நான் அந்த வேறுபாடுகளை மறந்துவிட்டு இங்கே வந்து இருக்கிறேன், என்று கமல்ஹாசன் குறிப்பிட்டார். இதனால் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் காங்கிரஸ் - திமுக கூட்டணியில் இணைய உள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications