ஹிஜாப் தடை தொடரும் என்று தீர்ப்பு வழங்கியது ஏன்? நீதிபதி ஹேமந்த் குப்தா தீர்ப்பில் சொன்னது இதுதான்!
டெல்லி: ஹிஜாப் தடை தொடரும் என்று தீர்ப்பு வழங்கியது ஏன் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் குப்தா விளக்கம் அளித்துள்ளார் .
ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கி உள்ளது. மேல்முறையீட்டு மனுவை நீதிபதி ஹேமந்த் குப்தா தள்ளுபடி செய்துள்ளார்.

கர்நாடக ஹைகோர்ட் ஹிஜாப்பிற்கு விதித்த தடை சரி என ஹேமந்த் குப்தா தீர்ப்பு வழங்கி உள்ளார்.
இன்னொரு பக்கம் கர்நாடக ஹைகோர்ட் தீர்ப்பை தள்ளுபடி செய்தார் நீதிபதி சுஷாந்து துலியா. அதாவது ஹிஜாப் தடை செல்லாது என்று அவர் தீர்ப்பு வழங்கி உள்ளார்.
இந்த வழக்கில் ஹிஜாப்பிற்கு தடை விதித்தது ஏன் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் குப்தா தெரிவித்து உள்ளார். அவர் தனது தீர்ப்பில்.. மத ரீதியிலான உடையை மாணவிகள் அணிவது என்பது அடிப்படை உரிமையில் வருமா? இஸ்லாத்தில் உடை அணியும் விவகாரம் என்பது கட்டாய மத பழக்க வழக்கங்களில் வருகிறதா? என்பதே கேள்வி. இந்த தடை காரணமாக கல்வி எந்த வகையிலாவது பாதிக்கப்படுகிறதா? இந்த கேள்விகளுக்கு எல்லாம் ஒரே பதில்தான் இருக்கிறது.

அந்த பதில் இல்லை. அதன் காரணமாக இந்த மேல்முறையீட்டு மனுவை நான் தள்ளுபடி செய்கிறேன். இதில் பல விதமான கருத்துக்கள் வைக்கப்படுகின்றன. என்னுடைய உத்தரவில் மொத்தம் 11 கேள்விகளை நான் முன்வைத்து உள்ளேன். முதல் கேள்வி இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வு விசாரிக்கலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் கல்லூரி நிர்வாகம் மாணவிகளின் உடை விவகாரத்தில் முடிவு எடுக்கலாமா என்று கேள்வி எழுப்பினேன்.
அதேபோல் ஹிஜாப்பை தடை செய்வது என்பது சட்ட விதி 25க்கு எதிரானதா என்றும் கேள்விஎழுப்பினேன். இந்த உரிமை என்பது நீக்கவே முடியாத கட்டாய உரிமையா என்ற கேள்வி எழுந்தது. அரசின் உத்தரவு அடிப்படை உரிமையை தடுக்கிறதா என்ற கேள்விகளை முன் வைத்தேன். இந்த கேள்விகளின் அடிப்படையில்தான் எனது தீர்ப்பை வழங்கி உள்ளேன் என்று நீதிபதி ஹேமந்த் குப்தா குறிப்பிட்டு உள்ளார்.
முன்னதாக இந்த வழக்கில் நீதிபதி ஹேமந்த் குப்தா, ஹிஜாப் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பினார். அதில், பர்கா அணிவது மத அடிப்படையிலான அடிப்படை உரிமை இல்லை என்றால்? மத அடிப்படையிலான பழக்கம் இல்லை என்றால் அது என்ன மாதிரியான பழக்கம்? குரானில் இருக்கும் விஷயங்கள் எல்லாம் கடவுள் சொன்ன வார்த்தைகள். அதனால் அவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய விஷயம் என்று மனுதாரர்கள் வாதம் வைக்கிறார்கள். இஸ்லாமில் இருக்கும் அடிப்படை கட்டாய பழக்கங்களில் ஒன்று ஹிஜாப் என்று மனுதாரர்கள் கூறுகிறார்கள். பெண்கள் கண்டிப்பாக ஹிஜாப் அணிய வேண்டும் என்று அவர்கள் மதத்தில் குறிப்பிட்டுள்ளதாக கூறுகிறார்களே. அந்த பழக்க வழக்கம் எது வரை செல்லுபடியாகும் என்று சொல்ல வேண்டும்.

பாகிஸ்தானில் இருந்து ஒரு நீதிபதி இந்தியா வந்தார். அவர்களின் சிறுமிகள் இந்தியாவில் ஹிஜாப் அணியவில்லை. பாகிஸ்தான் பஞ்சாப்பில், இந்தியா பஞ்சாப்பில் பல இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். அங்கே பலர் ஹிஜாப் அணிவது இல்லை. உத்தர பிரதேசம், பீகாரில் பல இஸ்லாமியர்கள் ஹிஜாப் அணிவது இல்லையே.
ஹிஜாப் பற்றி குரானில் இருக்கிறது என்பதற்காக அது இஸ்லாமியர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய பழக்கம் என்று கூறலாமா நேற்று நீதிபதி ஹேமந்த் குப்தா கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications