சுற்றி வளைக்கப்பட்ட இந்தியா.. 4 திசைகளிலும் இனி எதிரிகள்தான்.. வங்கதேச புரட்சி இந்தியாவிற்கு ஆபத்து!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வங்கதேசத்தில் நான்கு முறை பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த நாட்டின் நீண்ட தலைவர் ஷேக் ஹசீனா தற்போது ராஜினாமா செய்துள்ளார். நாட்டை விட்டும் வெளியேறி உள்ளார். ஒரு மாத காலமாக நீடிக்கும் வன்முறை மற்றும் மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து நேற்று நாட்டை விட்டு வெளியேறினார். வங்கதேசத்தில் இராணுவம் இடைக்கால அரசாங்கம் அமைப்பதாக அறிவித்து உள்ளது. ஹசீனாவின் வீழ்ச்சியானது.. அந்த நாட்டிற்கு சிக்கல் என்பதை விட.. இந்தியாவிற்கு பெரிய சிக்கல் ஆகும்.. இந்தியாவின் நட்பு நாடுகளின் பட்டியலில் இருந்து மேலும் ஒரு நாடு வெளியேறும் அவலம் ஏற்பட்டு உள்ளது.

வங்கதேசம் இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடு. சீனா அருகிலேயே இருந்தாலும், அமெரிக்கா பல கோடிகளை முதலீடு செய்ய தயாராக இருந்தாலும் கூட அவர்களை அரசியலை வங்கதேசம் உள்ளே விட்டது இல்லை. காரணம் ஹசீனா இந்தியாவுடன் வைத்து இருக்கும் நெருக்கம். இந்தியாவின் ஆட்சியாளர்களுடன் அவர் தொடர்ந்து கடைபிடிக்கும் நெருக்கம் இந்தியாவிற்கு உறுதுணையாக இருந்தது.

bangladesh sheikh hasina

ஏனென்றால் பாகிஸ்தான் இந்தியாவின் நட்பு நாடு இல்லை. அதேபோல் ஆப்கானிஸ்தான் இந்தியாவின் நட்பு நாடு இல்லை. அதோடு இலங்கை சீனாவிற்கு நெருக்கம் ஆகிவிட்டது. நேபாளம் இந்தியாவை எதிரியாக பார்க்கிறது. பூடான் அவ்வப்போது இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களை, நிலைப்பாடுகளை எடுத்து வருகிறது.

இப்படி இருக்க வங்கதேசத்தின் நட்பு இந்தியாவிற்கு தேவையாக இருந்தது. இதன் காரணமாகவே வங்கதேசத்தில் இந்தியாவின் பாரம்பரிய ஜவுளி துறை கூட வளர்ச்சி அடைய இந்தியா இடம் கொடுத்தது. இரண்டு நாட்டு உறவு வலிமை அடைய.. இரண்டு நாடுகளுக்கு இடையிலான பிஸ்னஸ் காரணமாகவும் இருந்தது.

உறவு காலி: ஆனால் தற்போது இரண்டு நாட்டு உறவு உடையும் நிலை ஏற்பட்டு உள்ளது. ஷேக் ஹசீனா வெளியேற்றம் காரணமாக இந்தியா வங்கதேசம் உறவு இனி நீடிக்கும் வாய்ப்புகள் குறைவு. ஏனென்றால் இப்போது வங்கதேச அரசு உடைய காரணம் அமெரிக்கா செய்த வேலை அல்லது சீனா செய்த வேலை என்று கூறப்படுகிறது. இரண்டில் ஒரு நாடு பாகிஸ்தான் மூலமாக வங்கதேச ஆட்சியை கவிழ்த்து உள்ளது.

இதை இந்தியா கணிக்க தவறிவிட்டது. இல்லையென்றால் இந்தியா இந்த விவகாரத்தில் துரிதமாக செயல்பட தவறிவிட்டது என்று புகார்கள் வைக்கப்படுகின்றன.

இந்தியா இழந்த நண்பன்: ஷேக் ஹசீனா இந்தியாவின் நம்பகமான கூட்டாளிகளில் ஒருவராக இருந்து வந்தார். தெற்காசியாவில் உள்ள நாடுகளை எல்லாம் சீனா தனது பாக்கெட்டில் போட்டுக்கொண்ட நிலையில், இந்தியாவுடன் வங்கதேசம் மட்டுமே நெருக்கமாக இருந்தது. பிரதமர் நரேந்திர மோடியும், ஷேக் ஹசீனாவும் 2023ல் 10 முறை சந்தித்து சாதனை படைத்தனர். அந்த அளவிற்கு இவர்களுக்கு இடையே நெருக்கம் இருந்தது.

ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான், மாலத்தீவு, மியான்மர் ஆகிய நாடுகள்மற்றும் இந்தியா இடையிலான உறவு உடைந்தது. நேபாளம் மற்றும் இலங்கையுடனான உறவும் சமீபத்தில் பாதிக்கப்பட்டது.

இப்போது பூடான், மொரீஷியஸ் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுடன் மட்டுமே இந்தியா கொஞ்சம் நட்பை கடைப்பிடித்து வருகிறது. மற்றபடி மற்ற எல்லா நாடுகளும் ஒன்று இந்தியாவிற்கு எதிரி அல்லது சீனாவிற்கு நண்பன் என்ற நிலையே உள்ளது. வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்று எல்லா திசைகளிலும் இந்தியாவிற்கு ஒரு எதிரி உள்ள நிலை ஏற்பட்டு உள்ளது.

வங்கதேசம் என்ற நாடு உருவாக இந்தியாதான் காரணம். அமெரிக்கா, சீனாவை எதிர்த்து இந்தியா வங்கதேசம் உருவாக காரணமாக இருந்தது. இதற்கு இந்திராகாந்தியின் அரசியல் சாணக்யத்தனம் காரணம். ஆனால் இப்போது ரீல்ஸ் போட்டு பிரபலம் செய்வது எல்லாம் இந்தியாவின் வெளியுறவு கொள்கையாக மாறிவிட்ட நிலையில்.. வரிசையாக வெளியுறவு உறவுகளில் இந்தியா தோல்வியை தழுவ தொடங்கி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+