குஜராத் & கர்நாடகா.. "அக்னி" பரீட்சைக்கு ரெடியாகும் பாஜக.. 3ம் கட்ட தேர்தல் மோடிக்கு ஏன் முக்கியம்!
டெல்லி: வரும் மே 7ஆம் நமது நாட்டில் 3ஆம் கட்ட லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், இதில் 3 மாநிலங்கள் ரொம்ப முக்கியமானதாக இருக்கிறது
நமது நாட்டில் 2 கட்ட லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்து 3ஆம் கட்ட வாக்குப்பதிவு வரும் மே 7ஆம் தேதி நடைபெறுகிறது.

3ஆம் கட்ட தேர்தல்: கோவா, குஜராத், அசாம், பீகார், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் என மொத்தம் 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 லோக்சசபா தொகுதிகளுக்கு 3ஆம் கட்ட வாக்குப்பதிவில் தேர்தல் நடைபெறுகிறது. இதில் குஜராத், கர்நாடகா மற்றும் கோவா கவனிக்க வைப்பதாக இருக்கிறது.
கோவா: இதில் கோவா யூனியன் பிரதேசத்தில் வடக்கு கோவா மற்றும் தெற்கு கோவா என இரு தொகுதிகள் இருக்கும் நிலையில், அங்கு காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. வடக்கு கோவாவில் பாஜகவின் ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக்கை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர் ரமாகாந்த் கலப் போட்டியிடுகிறார். தெற்கு கோவாவில் பாஜக பல்லவி டெம்போவை எதிர்த்து காங்கிரஸின் விரியாடோ பெர்னாண்டஸ் களமிறங்கினார்.
பாஜகவை ஒரே கல்லில் கதறவிட்ட ராகுல்- மோடிக்கும் ஆப்பு,ஸ்மிருதி இரானிக்கும் செக்-செம்ம 'ரேபரேலி' கேம்!
இந்த மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் களத்தில் இருக்கும் வேட்பாளர்களிலேயே அதிக பணக்காரர் என்றால் அது இந்த பல்லவி டெம்போ தான். கடந்த 2019 லோக்சபா தேர்தலில் வடக்கு கோவா தொகுதியில் பாஜக வென்ற நிலையில், தெற்கு கோவா தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
குஜராத்: அடுத்து குஜராத். இது ஏன் பாஜகவுக்கு முக்கியமானது என நாம் தனியாகச் சொல்லத் தேவையில்லை. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் மொத்தம் 26 தொகுதிகளில் இருக்கும் நிலையில், 25 தொகுதிகளுக்கு அங்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சூரத்தில் காங்கிரஸின் நிலேஷ் கும்பனியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது..
பாஜகவைப் பொறுத்தவரை, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலம் என்பதால் குஜராத் முக்கியமானது. 1995 ஆம் ஆண்டு முதல் சுமார் 30 ஆண்டுகளாக குஜராத்தில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சிக்கல்: அதேநேரம் குஜராத்தில் மத்திய அமைச்சரும் பாஜகவின் ராஜ்கோட் மக்களவை வேட்பாளருமான பர்ஷோத்தம் ரூபாலா க்ஷத்ரிய சமூகத்தினர் குறித்துக் கூறிய கருத்துகள் அந்த சமூக மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் க்ஷத்ரிய சமூகத்தினரின் வாக்குகள் பாஜகவுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கர்நாடகா: கர்நாடகாவில் மொத்தம் 28 தொகுதிகள் இருக்கும் நிலையில், முதல் 14 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26இல் வாக்குப்பதிவு நடந்த நிலையில், மீதமுள்ள 14 தொகுதிகளுக்கும் மே 7ஆம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கர்நாடகாவைப் பொறுத்தவரை அதுவும் பாஜகவுக்கு முக்கியமானது.
ஏனென்றால் கடந்த 2019இல் அங்குள்ள 28 இடங்களில் 25 இடங்களில் பாஜக வென்று இருந்தது. தென் இந்தியாவில் பாஜக இந்தளவுக்கு வலிமையாக இருக்கும் ஒரே மாநிலமாகக் கர்நாடகா இருப்பதால் இதுவும் முக்கியமானதாகும்.
இருப்பினும், அங்கு பாஜகவுக்கு மிக பெரிய தலைவலி கூட்டணியில் உள்ள ஜேடிஎஸ் கட்சியால் ஏற்பட்டுள்ளது. அங்கு முன்னாள் பிரதமர் எச்டி தேவகவுடாவின் பேரனும் ஜேடிஎஸ் முக்கிய தலைவர்களில் ஒருவருமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களைப் பலாத்காரம் செய்துள்ளதாக வெளியான புகார் மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் வலிமையாக உள்ள மாநிலமாக இருந்தாலும் கூட பாஜகவுக்கு பெரிய சவால் காத்திருக்கிறது. இந்த தேர்தல் முடிவுகள் எப்படி இருக்க போகிறது என்பதை நாம் பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications