பாஜகவை ஒரே கல்லில் கதறவிட்ட ராகுல்- மோடிக்கும் ஆப்பு,ஸ்மிருதி இரானிக்கும் செக்-செம்ம 'ரேபரேலி' கேம்!
டெல்லி: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு தொகுதியைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுவதுதான் தற்போது புதிய விவாதங்களை கிளப்பி உள்ளது. பாஜகவுக்கு எதிரான ராகுலின் ஆடுபுலி ஆட்டம்தான் 'ரேபரேலி'யில் போட்டியிடுவது என்கின்றனர் மூத்த அரசியல் பார்வையாளர்கள்.
உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி, அமேதி ஆகிய நேரு-இந்திரா குடும்பத்தின் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் மேலிடம் அறிவிக்காமலேயே இழுத்தடித்து வந்தது. இதனை பாஜக அரசியல் ஆதாயத்துக்காக கையில் எடுத்தது.

மோடி, ஸ்மிருதி பேசியது என்ன?: பிரதமர் மோடி இது குறித்து பேசுகையில், பாரம்பரிய வாக்கு வங்கி உள்ள தொகுதிகளான அமேதி, ரேபரேலியிலே கூட போட்டியிட பயந்து கொண்டிருக்கிறது நேரு குடும்பம் என கிண்டலடித்தார். அமேதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரான மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ராகுல் காந்தியானாலும் சரி அவரது மைத்துனர் ராபர்ட் வதேராவானாலும் சரி.. என்னை எதிர்த்து போட்டியிட்டு ஜெயித்துதான் பாருங்கள் என சவால்விட்டார்.
பாஜகவை தெறிக்கவிடும் ராகுலின் வியூகம்: இப்போது ரேபரேலியில் ராகுல் காந்தியும் அமேதியில் 40 ஆண்டுகாலம் நேரு குடும்பத்தின் முகமாக பணியாற்றிய கிஷோரி லால் ஷர்மாவும் (கேஎல் ஷர்மா) வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுவிட்டனர். எல்லோரும் அமேதியில்தான் ராகுல் காந்தி போட்டியிடுவார்; ரேபரேலியில் 'அனேகமாக' பிரியங்கா காந்தி அல்லது ராபர்ட் வதேரா போட்டியிடலாம் என எதிர்பார்த்தனர். ஆனால் அதிரடியாக ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தியும் அமேதியில் கேஎல் ஷர்மாவும் களமிறங்கி உள்ளனர். ராகுல் காந்தியின் இந்த தடாலடி வியூகமானது பாஜகவினரை 'வாயடைக்க' வைத்திருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
மோடிக்கு செக் வைத்த ராகுல்: பிரதமர் மோடியைப் பொறுத்தவரை குஜராத் அல்லது உத்தரப்பிரதேச மாநிலம் என வட இந்திய மாநிலங்களில் மட்டும்தான் போட்டியிடுகிறார். தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தில் மோடி என போட்டியிடுவார் என கிளப்பிவிடப்பட்டாலும் இந்த தேர்தலிலும் உ.பி. வாரணாசியில்தான் மோடி போட்டியிட்டுள்ளார். ராகுல் காந்தி கடந்த தேர்தலிலேயே 'குடும்ப வழக்கப்படி' வட இந்தியா- தென்னிந்தியா தொகுதிகளில் போட்டியிட்டார். தென்னிந்தியாவின் வயநாடு (கேரளா) தொகுதியில் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றார்.
ராகுல் காந்தியின் பாட்டி இந்திரா, ராகுல் காந்தியின் அம்மா சோனியா ஆகியோரும் இதே போல தென்னிந்தியாவில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கின்றனர். பொதுவாக பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் 'விந்தியமலை'க்கு தெற்கே கால் வைக்கவே அச்சப்படுகிறார்கள். தென்னிந்தியாவின் 132 தொகுதிகளில் பாஜகவால் 20-30 தொகுதிகளில்தான் வெல்ல முடியும் என்கிற போது 'தலைவர்களை' களம் இறக்குகிற விஷப்பரீட்சையில் எல்லாம் ஒருபோதும் அந்த கட்சி இறங்காது. அந்த வகையில் பிரதமர் மோடிக்கு சரியான செக் வைத்திருக்கிறார் 'செஸ்' வீரரான ராகுல் காந்தி என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
அமேதி ஸ்மிருதி இரானி: அதே போல இன்னொரு விஷயத்தையும் கவனித்தாக வேண்டும். 'ராகுல் காந்தி'யை தேர்தலில் தோற்கடித்தவர்; 'ராகுல் காந்தி'யை எதிர்த்து போட்டியிடுகிறவர் என்பதுதான் திரை உலகத்தைச் சேர்ந்த தற்போதைய மத்திய அமைச்சர் ஸ்மிருது இரானியின் அடையாளம். ஒருவகையில் இஸ்மிருதி இரானிக்கு இதுதான் பலமும் கூட. ராகுல் காந்தி, வாரிசு அரசியல், நேரு- இந்திரா ஆட்சிக் கால விவகாரங்கள் என ஏதேனும் ஒன்றை பேசிவிட்டு பிரசாரம் செய்துவிட்டுப் போய்விடலாம் என்பதுதான் ஸ்மிருதி இரானிக்கு எளிதான ஒன்றாக இருந்தது.
பதில் சொல்ல வேண்டும் ஸ்மிருதி: இப்போது அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடவில்லை. நேரு குடும்பத்தின் மிக நெருக்கமான விசுவாசமான கே.எல்.ஷர்மாவை களமிறக்கியிருக்கிறார் ராகுல் காந்தி. தற்போது ஸ்மிருதி இரானி, கடந்த 5 ஆண்டுகளில் அமேதி தொகுதிக்கு செய்த சாதனைகளைச் சொல்லித்தான் ஓட்டுக் கேட்டாக வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். அமேதியில் செயல்படுத்துவதாக சொன்ன வளர்ச்சித் திட்டங்கள் மருத்துவமனைகள் மூடப்பட்டது, ஸ்டீல் தொழிற்சாலை உள்ளிட்ட கொடுத்த வாக்குறுதிகள் இவற்றுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலையில் ஸ்மிருதி இரானியை தள்ளிவிட்டிருப்பதும் ராகுலின் ராஜதந்திர வியூகமாகப் பார்க்க வேண்டும் என்கின்றனர்.
பிரியங்கா காந்தி: இங்கே ராகுல் காந்தி மட்டுமல்ல பிரியங்காவையும் குறிப்பிட வேண்டும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். வடக்கும் தெற்குமாக ஒவ்வொரு மாநிலமாக சென்று அதிரடி பிரசாரம் செய்து வருகிறார் பிரியங்கா காந்தி. பிரதமர் மோடிக்கு எதிரான அண்ணனும் தங்கையும் ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் இரட்டை குழல் பீரங்கிகளாக பிரசாரம் செய்து வருகின்றனர்.
காங்கிரஸின் குரல்: இப்போதும் ரேபரேலி, அமேதியில் முகாமிட்டு பிரசாரம் செய்வேன் என சவால்விட்டிருக்கிறார் பிரியங்கா காந்தி. தேர்தல் அரசியல் களத்தில் குதிக்கிற அரசியல் வாரிசாக இல்லாமல், காங்கிரஸை கரைசேர்க்கிற துடுப்புகளில் ஒன்றாக தம்மை பிரியங்கா காந்தி அடையாளப்படுத்தும் வகையில் அமேதி- ரேபரேலியில் போட்டியிடாததும் சரியான வியூகம்தான் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
தவெகவை ஏன் எதிர்க்கிறீர்கள்? வாரிய பதவி கேட்டு வாங்குங்க! ஸ்ரீநிதிக்கு காங்கிரஸ் நிர்வாகி அட்வைஸ் -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
விஜய்யே பண்ணாலும் தப்பு தப்பு தான்.. குதிரை பேரத்தை நியாயப்படுத்தக் கூடாது! ஃபயர் மோடில் ஜோதிமணி! -
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா -
டெல்லியில் முதல்வர் விஜய் - சோனியா, ராகுல் சந்திப்பு திடீர் ரத்து.. என்ன நடந்தது? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து?












Click it and Unblock the Notifications