காரணம் இதுதான்.. நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ‛டீப் ஃபேக்’ வீடியோவை உருவாக்கியது ஏன்? கைதானவர் பகீர்
டெல்லி: நடிகை ராஷ்மிகா மந்தனாவை ஆபாசமாக சித்தரித்து டீப் ஃபேக் வீடியோ வெளியிடப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான என்ஜினீயர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஷ்மிகா மந்தனாவின் ரசிகரான இவர் அந்த வீடியோவை ஏன் உருவாக்கினார் என்பது பற்றி பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய மொழிப்படங்களில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. கர்நாடகாவை சேர்ந்த இவர் கன்னட மொழியில் ‛கிரிக் பார்ட்டி' திரைப்படத்தில் அறிமுகமாகி அனைவரையும் கவர்ந்தார். அதன்பிறகு தெலுங்கு மொழியில் ‛கீதா கோவிந்தம்' திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்து புகழ்பெற்றார்.

தமிழில் ‛வாரிசு' திரைப்படத்தில் நடிகர் விஜயுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். இதன்மூலம் தமிழ், கன்னடா, தெலுங்கு மொழி ரசிகர்கள் ராஷ்மிகா மந்தனாவுக்கு அதிகம் உள்ளனர். இந்நிலையில் தான் கடந்த ஆண்டு ராஷ்மிகா மந்தனாவின் ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.
அதாவது கருப்பு நிற உடையணிந்திருந்த நடிகை ராஷ்மிகா மந்தனா லிப்ட்டில் நுழைவதுபோன்று அந்த வீடியோ இருந்தது. இதுபற்றி விசாரித்தபோது அது உண்மையான வீடியோ இல்லை என்பதும், ‛டீப் ஃபேக்' முறையில் வீடியோ உருவாக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. அதாவது பிரிட்டனை சேர்ந்த இந்தியாவின் ஜாரா படேல் என்பவரின் வீடியோவை எடுத்து அதில் ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை ஒட்டியது தெரியவந்தது.
இதுபற்றி டெல்லி சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தான் ராஷ்மிகா மந்தனாவின் ‛டீப் ஃபேக் வீடியோ' வழக்கில் ஆந்திராவை சேர்ந்த ஒருவரை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். இந்நிலையில் தான் அவர் யார்? பின்னணி என்ன? அவர் எதற்காக ராஷ்மிகா மந்தனாவை ஆபாசமாக சித்தரித்து வீடியோ உருவாக்கினார்? என்பது பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
இதுபற்றி போலீசார் கூறுகையில், ‛‛கைதான நபரின் பெயர் ஈமணி நவீன். இவர் ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே பீடநான்திபாடு கிராமத்தை சேர்ந்தவர். இவர் எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன் என்ஜினீயரிங் படிப்பை முடித்துள்ளார். 2019ல் ஆன்லைன் மூலம் கூகுள் கேரேஜில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் சான்றிதழ் பெற்றுள்ளார். மேலும் வலைதளத்தை எப்படி மேம்படுத்துவது? போட்டோ மற்றும் வீடியோ எடிட்டிங் உள்ளிட்டவற்றை கற்றுள்ளார்.
இவர் ராஷ்மிகா மந்தனாவின் ரசிகர். இவர் ராஷ்மிகா மந்தனாவுக்காக வலைதளத்தில் தனியாக பக்கத்தை வைத்துள்ளார். இந்த பக்கத்தை அவர் பிரபலப்படுத்தவும், அதிக பாலோயர்களை கொண்டு வரவும் விரும்பி உள்ளார். இதையடுத்து அவர் ராஷ்மிகா மந்தனாவை ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை அவர் 2023 அக்டோபர் 13ம் தேதி உருவாக்கி பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவை அவர் இன்ஸ்டாவில் பதிவிட்ட அடுத்த 2 வாரத்தில் அவருக்கு 90 ஆயிரம் முதல் 1 லட்சத்து 8 ஆயிரம் பாலோயர்ஸ் கிடைத்துள்ளனர். இதற்கிடையே அந்த வீடியோ வைரலாகி உள்ளது. மேலும் விவாதத்தை கிளப்பி உள்ளது. இதனால் பயந்துபோன ஈமணி நவீன் அந்த வலைதள பக்கத்தின் பெயரை மாற்றி உள்ளார். மேலும் அந்த வீடியோவையும் அவர் டெலிட் செய்துள்ளார்'' என்றனர்.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!











Click it and Unblock the Notifications