டிரம்ப் போனா என்ன? ஐரோப்பிய ஒன்றியத்துடன் டீலை முடிக்கும் மோடி.. உலக ஜிடிபியில் 25%! ஏன் முக்கியம்?
டெல்லி: ஐரோப்பிய ஒன்றியத்துடன் மிக பெரிய டீலை முடிக்கும் தறுவாயை எட்டியுள்ளது இந்தியா! இதை ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உறுதி செய்துள்ளார். கிட்டத்தட்ட உலக ஜிடிபியில் 25% மதிப்பு கொண்ட இந்த ஒப்பந்தம் ஏன் முக்கியம்.. பல காலமாக இழுபறியில் இருந்த இந்த டீல் இப்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது ஏன் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
அமெரிக்கா இந்தியா வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை இப்போ முடியும்.. அப்போ முடியும் எனச் சொன்னாலும் கூட அது இறுதியாவது போலத் தெரியவில்லை. அமெரிக்கா கேட்கும் சில நிபந்தனைகளை இந்தியா ஏற்கத் தயாராக இல்லை. இதன் காரணமாகவே அவர் இந்தியா மீது வரியையும் விதித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்கும் சூழலில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் டீலை முடிக்கும் தறுவாயில் இருக்கிறது இந்தியா!

இறுதியாகும் டீல்
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தில் இதைத் தெரிவித்தார். இது இரு தரப்புக்கும் மிக முக்கிய திருப்புமுனையாக அமையும் என அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக அவர் மேலும், "இன்னும் கொஞ்சம் பணி நிலுவையில் இருக்கின்றன. ஆனால் நாம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் விளிம்பில் இருக்கிறோம். இதை 'அனைத்து ஒப்பந்தங்களின் தாய்' எனச் சொல்லலாம். இது 200 கோடி மக்களைக் கொண்ட ஒப்பந்தம்.. உலக மொத்த ஜிடிபியில் கிட்டத்தட்ட 25% பங்கைக் கொண்டிருக்கும்" என்றார்.
ஏன் முக்கியம்
இந்த ஒப்பந்தம் ரொம்பவே முக்கியமானது. இது. உலகின் வேகமாக வளரும் இந்தியாவை, உலக வர்த்தகத்தின் மையமான ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைக்கிறது. அத்தோடு சர்வதேச விநியோகச் சங்கிலியையும் மாற்றி அமைக்கும். எனவே, இந்த ஒப்பந்தம் உலகளவில் கவனிக்கப்படும் ஒரு ஒப்பந்தமாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஐரோப்பிய ஒன்றியம் இப்போது தனது பல பொருட்களுக்குச் சீனாவைச் சார்ந்து இருக்கும் நிலையில், இந்த ஒப்பந்தம் வந்தால் அது மாறும். இந்தியாவிற்கும் கூட தனது ஏற்றுமதியை அதிகரிக்க முக்கிய வாய்ப்பைத் தரும். ஏற்றுமதியை மேம்படுத்தி, உற்பத்தி சங்கிலியில் உயர உதவும். இப்படி இரு தரப்புக்குமே இது பாசிட்டிவாகவே இருக்கும்.
மிக நீண்ட பேச்சுவார்த்தை
பொதுவாகவே வர்த்தகப் பேச்சுவார்த்தை என்பது பல ஆண்டுகள் நீட்டிக்கும். இந்த பேச்சுவார்த்தையும் அப்பி தான். இந்தியா- ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் 2007இல் தொடங்கியது. இருப்பினும், 2012ல் சில காரணங்களால் பேச்சுவார்த்தை நின்றுபோனது. சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு 2022ல் மீண்டும் இந்தப் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியது
இருதரப்பு வர்த்தகம் ஏற்கனவே புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 2023ஆம் ஆண்டில், சரக்கு வர்த்தகம் €124 பில்லியனை தாண்டியது. டிஜிட்டல் மற்றும் ஐடி சேவைகள், அதாவது சர்வீஸ் வர்த்தகம் €60 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது. இப்படி இரு தரப்பிற்கும் இடையே வர்த்தகம் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், வணிக ஒப்பந்தம் வர்த்தகத்தை மேலும் மேம்படுத்தும். குறிப்பாகத் தூய்மையான எரிசக்தி, மருந்துகள், உற்பத்தி மற்றும் டிஜிட்டல் சர்வீஸ் போன்ற துறைகளில் மிகப் பெரிய வளர்ச்சியைக் கொடுக்கும்.
அமெரிக்கா போனால் என்ன?
டிரம்ப் அந்தப் பக்கம் வர்த்தக டீலுக்கு பிரஷர் போடுகிறார். ஆனால், உண்மையில் வர்த்தக ஒப்பந்தம் என்பது இதுபோல நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு இரு தரப்புக்கும் நலனை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படும். அதைவிட்டுவிட்டு வெறுமன பிரஷர் போடுவது என்பது எந்தவொரு பலனையும் கொடுக்காது.
டிரம்ப் பிரஷுக்கு சில நாடுகள் அடிபணிந்தாலும் கூட இந்தியா உட்படப் பல நாடுகள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இந்தச் சூழலில் தான் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்த முக்கியமான டீல் இறுதியாகியுள்ளது. இது இந்தியாவுக்கு மிக முக்கியமானதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.












Click it and Unblock the Notifications