இந்தியா மாஸ்டர்பிளான்! மேற்கு உலகமே திரண்டு வந்தாலும்.. ரஷ்யாவை எதிர்க்காத மோடி.. 5 பெரிய காரணங்கள்!
டெல்லி: உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியா ரஷ்யாவை எதிர்க்காமல் தொடர்ந்து தவிர்த்து வருகிறது. இந்தியா இதில் நடுநிலை நிலைப்பாட்டை எடுக்க 5 முக்கியமான காரணங்கள் உள்ளன.
உக்ரைன் ரஷ்யா போர் தொடர்பான ஐநா பொதுச்சபை விவாதம் நடைபெற்று வருகிறது. போர் கடந்த 5 நாட்களாக தீவிரமாக நடந்து வரும் நிலையில் இன்று 6வது நாளை எட்டி உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவில் தற்போது இரண்டு நாடுகளுக்கு இடையிலான போர் தீவிரமாக நடந்து வருகிறது.
உக்ரைன் போர் உலகம் முழுக்க கவனம் பெற்றுள்ளது. இது சர்வதேச பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

ரஷ்யா
ரஷ்யாவிற்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நடந்த கூட்டத்தில் இந்தியா வாக்களிக்க மறுத்துவிட்டது. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் இதில் வாக்களிக்க மறுத்துவிட்டது. ரஷ்யாவின் போரை கண்டிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானத்திற்கு அமெரிக்கா உள்ளிட்ட மீதம் உள்ள 11 நாடுகள் ஆதரவு அளித்து வாக்களித்தன. இந்தியா இதில் நடுநிலையை கடைபிடிக்க விரும்புவதாக அறிவித்தது.

ஞாயிற்றுக்கிழமை
அதேபோல் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஐநா பாதுகாப்பு கவுன்சில் மூலம் இன்னொரு கூட்டம் நடத்தப்பட்டது. ரஷ்யாவிற்கு எதிராக ஐநாவில் அவசர கூட்டம் நடத்த வேண்டும் என்று இதில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இந்த கூட்டத்திலும் இந்தியா ரஷ்யாவிற்கு எதிராக வாக்களிக்கவில்லை. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் இதில் வாக்களிக்க மறுத்துவிட்டது. மேலும் ஐநா மனித உரிமைகள் அமைப்பில் ரஷ்யாவிற்கு எதிரான தீர்மானத்திலும் இந்தியா வாக்களிக்க மறுத்துவிட்டது.

மேற்கு உலகம்
மேற்கு உலகமே உக்ரைன் போரில் ரஷ்யாவை எதிர்த்துக்கொண்டு இருக்கிறது. கிட்டத்தட்ட 31 நாட்கள் உக்ரைனுக்கு ராணுவ ஆயுதங்கள், ஏவுகணைகள், விமானங்களை அனுப்பி வருகிறது. அதேபோல் ஐநா பொதுச்சபையில் புதன் கிழமை நடக்கும் வாக்கெடுப்பில் 100க்கும் மேற்பட்ட நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக வாக்களிக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் சர்வதேச கிரைம் கோர்ட் ரஷ்யாவின் போர் குற்றங்களை விசாரிப்போம் என்று அறிவித்துள்ளது.

ஐரோப்பா
ஆனால் இப்படி மேற்கு உலகமும், ஐரோப்பாவும் திரண்டு வந்தாலும் கூட ரஷ்யாவை இந்தியா எதிர்க்கவில்லை. உக்ரைன் அதிபர் வெளிப்படையாக இதில் உதவி கேட்டும் இந்தியா உக்ரைனுக்கு ஆதரவாக நிற்கவில்லை. உக்ரைன் - ரஷ்யா விவகாரத்தில் இந்தியா நடுநிலையாக இருக்க நினைக்கிறது. இந்த விவகாரத்தில் யார் பக்கமும் சேராமல் இருப்பது போல காட்டிக்கொண்டு, கொஞ்சம் ரஷ்யா ஆதரவு நிலைப்பாட்டை இந்தியா எடுத்து உள்ளது.

காரணங்கள் என்னென்ன?
காரணம் 1 - இந்தியா தனது பழைய, நெடுங்கால நண்பன் ரஷ்யாவை பகைக்க விரும்பவில்லை. அதேபோல் புதிய நண்பன் அமெரிக்கா உட்பட மேற்கு உலக நாடுகளையும் பகைக்க விரும்பவில்லை. இதனால் இந்தியா இரண்டுக்கும் நடுவில் செல்ல பார்க்கிறது.
காரணம் 2 - இந்தியாவிற்கு ரஷ்யாதான் அதிக அளவு ஆயுதங்களை ஏற்றுமதி செய்கிறது. சுகோய் 30 விமானங்கள் 270 இந்தியா வசம் உள்ளது. இது ரஷ்ய ஏற்றுமதி. அதேபோல் 1300க்கும் அதிகமான ரஷ்யாவை சேர்ந்த டி 90 பீரங்கிகள் இந்தியாவிடம் உள்ளது. 8 ரஷ்ய தயாரிப்பை சேர்ந்த நீர்மூழ்கி கப்பல்கள் இந்தியாவிடம் உள்ளது. இதற்கான பராமரிப்பை ரஷ்யா அவ்வப்போது செய்கிறது. இப்படிப்பட்ட ரஷ்யாவை இந்தியா பகைக்க முடியாது.

அமெரிக்கா எதிர்ப்பு
காரணம் 3 - அதேபோல் அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவிடம் எஸ் 400 மிஸைல் ஏவுகணை தடுப்பு கருவியை வாங்க உள்ளது. இதற்காக 5 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டு உள்ளது. இந்த சிஸ்டம் இன்னும் இந்தியாவின் கைக்கு வராத நிலையில் ரஷ்யாவை இந்தியா எதிர்ப்பது சரியாக இருக்காது.
Recommended Video

இந்தியா ரஷ்யா நட்பு
காரணம் 5 - கடைசியாக உக்ரைன் இந்தியாவிற்கு சர்வதேச அளவில் உதவியது இல்லை. பொக்ரான் சோதனைக்கு பின் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தானுக்கு உக்ரைன் பீரங்கியை வழங்கியது. அதேபோல் இந்தியாவிற்கு எதிராக காஷ்மீர் விவகாரத்தில் உக்ரைன் நிலைப்பாடு எடுத்தது. இதனால் இந்தியா இந்த விவகாரத்தில் உக்ரைனை ஆதரிக்காமல், ரஷ்யாவிற்கு லேசான ஆதரவோடு நடுநிலை நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications