"இங்கெல்லாம் அணுசக்தி நிலையங்கள் இருக்கு.." பாகிஸ்தானுக்கு லிஸ்ட் போட்டு தந்த இந்தியா! ஏன் தெரியுமா
டெல்லி: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் எப்போதும் நிலவி வந்தாலும் கூட, சில வழக்கமான நடைமுறைகள் எப்போதுமே தொடரும். அப்படித்தான் இப்போது இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் அணுசக்திகள் எங்குள்ளன என்பது குறித்த தகவல்களைப் பரிமாறிக் கொண்டுள்ளன.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சுதந்திரம் அடைந்தது முதலே நல்ல சுமுகமான உறவு இருந்தது இல்லை. ஒவ்வொரு முறையும் இந்தியாவில் எதாவது பதற்றம் அல்லது குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியில் தான் பாஜக தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
மேலும், எல்லையிலும் அத்துமீறி துப்பாக்கிச் சூடு சம்பவங்களிலும் ஈடுபடும். இப்படித் தொடர்ந்து அத்துமீறல் சம்பவங்களில் பாகிஸ்தான் ஈடுபட்டே வரும். இதனால் எல்லையில் பதற்றமான சூழல் நிலவும்.

இந்தியா பாகிஸ்தான்
இரு நாடுகளுக்கும் இடையே எவ்வளவு பதற்றமான சூழல் நிலவினாலும் கூட சில வழக்கமான நடைமுறைகள் எப்போதும் பின்பற்றப்படும். அதன்படி இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 தேதிகளில் தங்களது பிடியில் உள்ள கைதிகள் மற்றும் மீனவர்கள் அடங்கிய பட்டியலைப் பரிமாறிக் கொள்வார்கள். மேலும், இரு நாடுகளும் அணுசக்தி நிலையங்கள்போன்ற அணுசக்தி நிறுவல்கள் எங்குள்ளன என்பது குறித்த தரவுகளையும் பரிமாறிக் கொள்வார்கள்.

எதற்காக
எவ்வளவு பதற்றமான நிலை ஏற்பட்டாலும் இந்த இடங்களில் தாக்குதல் நடத்தக் கூடாது என்பதற்காகவே இரு நாடுகளும் இந்த பட்டியலைப் பரிமாறிக் கொள்கிறார்கள். சுமார் 30 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்படும் இந்த வழக்கத்தின்படி இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று தங்கள் அணுசக்தி நிறுவல்களின் பட்டியலைப் பரிமாறிக்கொண்டன. மேலும், இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்தியா சிறைகளில் உள்ள பாகிஸ்தானியர்கள் குறித்த பட்டியலையும் இந்திய அதிகாரிகள் பாகிஸ்தானிடம் வழங்கியது.

பரிமாற்றம்
பாகிஸ்தானில் எந்த இடத்தில் எல்லாம் அணுசக்தி நிறுவல்கள் உள்ளன என்பது குறித்த தகவல்களை இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரிடம் பாக். அரசு ஒப்படைத்தது. அதேபோல இந்தியாவும் தனது நாட்டில் இருக்கும் நிறுவல்கள் உள்ளன என்பது குறித்த தகவல்களை டெல்லியில் உள்ள பாக். தூதரிடம் வழங்கியது. மேலும், 631 இந்திய மீனவர்கள் மற்றும் இரண்டு சிவில் கைதிகள் தங்கள் சிறை காலம் முடிந்த பிறகும் பாகிஸ்தான் சிறையில் உள்ளதாகவும் அவர்களை விரைவில் விடுவிக்க வேண்டும் என்று இந்தியா சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கைதிகள் தகவல்கள்
மேலும், 30 மீனவர்கள் மற்றும் பாகிஸ்தானின் காவலில் உள்ள இந்தியர்கள் என நம்பப்படும் 22 பேருக்கு உடனடியாக தூதரக அணுகலை வழங்குமாறு இந்தியா வலியுறுத்தியுள்ளது. மேலும், இந்தியாவில் உள்ள 71 பாக். கைதிகளின் குடியுரிமையை இதுவரை பாகிஸ்தான் உறுதி செய்யவில்லை என்றும் அந்த விவகாரத்திலும் பாகிஸ்தான் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. இந்திய மீனவர்கள் மற்றும் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அவர்கள் இந்தியாவுக்கு நாடு திரும்புவதற்கு நடவடிக்கை எடுக்கவும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
-
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
"மூச்சு இருந்தது.." 130 அடியில் பங்கி ஜம்பிங் விபரீதம்.. இளம்பெண்ணுக்கு நடந்தது என்ன! பகீர் தகவல் -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
இன்ஸ்டா முதல் யூடியூப் வரை எல்லாவற்றுக்கும் தடை.. 16 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பிரிட்டன் அதிரடி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?"












Click it and Unblock the Notifications