"பொருளாதார பேரழிவு.. இந்திய பொருளாதாரம் ரொம்பவே வீக்கா இருக்கு.." ரிசர்வ் வங்கி குழு உறுப்பினர் பரபர

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இப்போது மிகவும் பலவீனமாக உள்ளதாக ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு (எம்பிசி) உறுப்பினர் ஜெயந்த் ஆர் வர்மா தெரிவித்துள்ளார். மேலும், தனியார் நுகர்வு மற்றும் முதலீடு இன்னும் அதிகரிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கொரோனா பரவலுக்கு பெரும்பாலான நாடுகளில் வளர்ச்சி போதுமானதாக இல்லை. அமெரிக்கா மத்திய வங்கி தொடர்ச்சியா வட்டி விகிதங்களை அதிகரித்து வரும் நிலையில், இது சர்வதேச சந்தைகளிலும் எதிரொலிக்கிறது.

இந்தியாவில் பங்குச் சந்தை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்தச் சூழலில் நாட்டின் பொருளாதாரம் குறித்து ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு (எம்பிசி) உறுப்பினர் ஜெயந்த் ஆர் வர்மா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

பலவீனம்

பலவீனம்

இது தொடர்பாக அவர் கூறுகையில், "பொருளாதார வளர்ச்சியின் நான்கு என்ஜின்கள் ஏற்றுமதி, அரசு செலவுகள், முதலீடு மற்றும் தனியார் நுகர்வு ஆகும். உலகளாவிய மந்தநிலை காரணமாக ஏற்றுமதி அதிகரிக்க முடியாது என்றாலும்.. அரசு செலவினம் பல்வேறு காரணங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. தனியார் நுகர்வு வரும் காலங்களில் எப்படி இருக்கும் என்பதே முக்கியமான கேள்வி. எனவே, பொருளாதார வளர்ச்சி இப்போது மிகவும் பலவீனமாக உள்ளது என்பதை என்னால் கூற முடியும்.

கணிப்பு

கணிப்பு

இதனால் நமது பொருளாதாரத்தைக் காக்க நாம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த ஜெயந்த் ஆர் வர்மா ஐஐஎம் அகமதாபாத்தில் பேராசிரியராக உள்ளார். இந்தாண்டு இந்தியாவின் வளர்ச்சி குறைவாகவே இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 2023 நிதியாண்டிற்கான வளர்ச்சி 7%ஆக இருக்கும் என முதலில் கூறப்பட்டிருந்த நிலையில், ரிசரவ் வங்கி அதைக் கடந்த வாரம் 6.8%ஆக குறைத்திருந்தது. அதேநேரம் உலக வங்கி இதன் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சி 6.9%ஆக இருக்கும் என்று கணித்துள்ளது.

இந்தியா

இந்தியா

ஜெயந்த் ஆர் வர்மா மேலும், கூறுகையில், "பொருளாதாரம் பலவீனமாக இருந்தாலும் கூட, நம் மந்த நிலையை அடைய மாட்டோம்.. உண்மையில், இன்று உலகின் பிற பெரிய பொருளாதாரங்களை விட இந்தியப் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது, பிரச்சனை என்னவென்றால், இந்தியாவில் எதிர்பார்ப்பு அதிகம். அதிலும் ஏற்கனவே கொரோனாவால் நாம் இரண்டு ஆண்டுகளை இழந்துவிட்டோம். இதனால் பெரிய வளர்ச்சியை அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். இந்தியாவில் வேலையில் சேரும் இளைஞர்களுக்கு அதிக வளர்ச்சி தேவை. அதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

பணவீக்கம்

பணவீக்கம்

உலகின் மற்ற நாடுகளை விட இந்தியா மெதுவாக வளர்ச்சியடையும் என்று நான் கூறவில்லை. உலக நாடுகளை விட நமது பொருளாதாரம் சிறப்பாகவே உள்ளது. நாம் எதிர்பார்ப்பதைக் காட்டிலும் தான் நாம் குறைவாக வளர்வோம் என்று நான் கூறுகிறேன். 10 மாதங்களாக ரிசர்வ் வங்கியால் இலக்கிற்குள் பணவீக்கத்தை வைத்துக் கொள்ள முடியவில்லை. கொரோனாவுக்கு பிறகு பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தே இதற்கு முக்கிய காரணம் என்று நினைக்கிறேன். கொரோனா போன்ற பெருந்தொற்றுக்கள் நூற்றாண்டிற்கு ஒரு முறை ஏற்படுவது. எனவே, இதைத் தவிர்க்க முடியாது.

பொருளாதார பேரழிவு

பொருளாதார பேரழிவு

கொரோனா பெருந்தொற்று உயிரிழப்புகளை ஏற்படுத்தியது மட்டுமின்றி பொருளாதார பேரழிவையும் பாதிப்பை ஏற்படுத்தியது. 2022இல் நாம் பார்ப்பது அந்தக் காலகட்டத்தின் செயலற்ற தன்மையின் விளைவாகும்.. இருப்பினும், இந்த தாமதம் கூட இந்த ஆண்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த போதுமானதாக இல்லை. உக்ரைன் போரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த உதவவில்லை. உக்ரைன் போர் காரணமாகச் சர்வதேச வணிகம் தடைப்பட்டன. இதுவும் கூட பணவீக்கம் இத்தனை காலம் அதிகமாக இருக்கக் காரணமாக அமைந்துவிட்டது" என்று அவர் தெரிவித்தார்.

சில்லறை பணவீக்கம்

சில்லறை பணவீக்கம்

சில்லறை பணவீக்கத்தை 2-6%க்குள் வைத்துக் கொள்ள வேண்டியது ரிசர்வ் வங்கியின் பொறுப்பாகும். இருப்பினும், நவ. மாதத்திற்கு முன்பு வரை கடந்த 10 மாதங்களாகப் பணவீக்கம் 6% மேல் தான் இருந்தது. இப்போது தான் கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த 3 காலாண்டுகளாகப் பணவீக்கம் ஏன் 6% மேல் இருந்தது என்பதை விளக்கி மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கி கடிதம் எழுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+