அமெரிக்காவில் இருந்து.. கொத்து கொத்தாக நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. ஏன்? 6 முக்கியமான காரணங்கள்
டெல்லி: அமெரிக்காவில் முறைகேடாக தங்கி இருந்த இந்தியர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இவர்கள் ஏன் வெளியேற்றப்படுகிறார்கள் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
சட்டவிரோத இந்திய குடியேறிகளை நாடு கடத்த தொடங்கி உள்ளது அமெரிக்கா. அதன் ஒரு கட்டமாக டெக்சாஸில் இருந்து சட்டவிரோத இந்திய குடியேறிகள் நாடு கடத்தப்பட்டு உள்ளனர். அமெரிக்காவின் C-17 போர் விமானம் மூலம் முதற்கட்டமாக 140 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இந்த விமானத்தில் அதிகபட்சம் 150 பேர் மட்டுமே இருக்க முடியும் என்பதால் 140 பேர் நாடு கடத்தப்பட்டு உள்ளனர். இப்படி நாடு கடத்தப்பட்ட இந்தியர்களில் பெரும்பாலானோர் பஞ்சாப் மற்றும் குஜராத் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. எதன் அடிப்படையில் இவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள், இவர்கள் ஏன் வெளியேற்றப்படுகிறார்கள் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
1. முதல் காரணம்.. நாடு கடத்தப்படும் பெரும்பாலானோர்.. அமெரிக்காவிற்கு முறைகேடாக.. பெரும்பாலும் நடைபயணமாக மெக்சிகோ வழியாக விசா இல்லாமல் போனவர்கள்.
2. படிக்க சென்றவர்கள் அதற்கான விசா காலம் முடிந்தும் தங்கி இருந்தவர்கள்.
3. சுற்றுலா சென்று அங்கே வேலை தேடி பின்னர் முறைகேடாக தங்கியவர்கள்.
4. வேலை விசா முடிந்தும் காலம் தாண்டி தங்கி இருப்பவர்கள்.
5. கடல் வழியாக அமெரிக்காவிற்கும் முறைகேடாக குடியேறியவர்கள்.
6. கனடா போன்ற அண்டை நாடுகளுக்கு முறையாக சென்று அங்கிருந்து அமெரிக்கா உள்ளே பொய்யான ஆவணங்களை பயன்படுத்தி உள்ளே நுழைந்தவர்கள்.
இவர்கள் உள்ளே விமானம் முதல் கட்டமாக நாளை டெல்லிக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் அத்துமீறி குடியேறி உள்ள வெளிநாட்டினரை வெளியேற்ற அந்நாட்டு அதிபர் முடிவு செய்துள்ளார். இதற்கான கணக்கெடுப்பு பணிகள் மற்றும் ரெய்டுகள் தொடங்கிவிட்டன. இதனால் இந்தியர்கள் பலரும் வெளியேற்றப்பட வாய்ப்புகள் உள்ளன. ஆனால் முறையாக விசா பெற்று அங்கே வசிக்கும் இந்தியர்களுக்கு இதனால் பிரச்சனை இல்லை.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் இந்தியர்களை நாடுகடத்த இந்தியா திட்டம் போட்டுள்ளது. சுமார் 18 ஆயிரம் பேர் முதல் கட்டமாக இந்தியா கொண்டு வரப்படலாம். அமெரிக்காவின் வரி விதிப்பை தடுக்க இந்தியா இந்த முடிவை எடுக்கலாம் என்கிறார்கள். அமெரிக்காவில் குடியேறி இருக்கும் பலரை இந்தியா நாடு கடத்த திட்டமிட்டு உள்ளதாம். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரலாம் என்கிறார்கள்.
ஆனால் அமெரிக்க வட்டார தகவலின்படி அந்த நாட்டு அரசின் கணக்குப்படி அங்கே 7 லட்சம் இந்தியர்கள் சட்டவிரோதமாக குடியேறி உள்ளனர். இதில் கணிசமானோர் குஜராத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் எல்லோரும் மெக்சிகோ வழியாக அமெரிக்கா சென்று அங்கே தஞ்சம் அடைந்து வசித்து வருகின்றனர். இவர்கள்தான் அதிக அளவில் இந்த சட்டத்தால் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
நாடு முழுவதும் தங்கி உள்ள சட்டவிரோத அகதிகளை வெளியேற்ற டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். தாமஸ் டி. ஹோமனை நாட்டின் எல்லைகள் கடல் மற்றும் வான்வெளி எல்லை பாதுகாப்புக்கு பொறுப்பான border czar துறைக்கு தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். அதாவது அமெரிக்காவில் அத்துமீறி.. அனுமதியின்றி குடியேறி உள்ளவர்களை வெளியேற்றுவதற்க்கும்.. புதிதாக மக்கள் ஊடுருவதை தடுக்கவும் தாமஸ் டி. ஹோமனை டிரம்ப் உள்ளே கொண்டு வந்து உள்ளார். அவரின் உத்தரவின் கீழ் இந்த ரெய்டு தொடங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications