Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'கோட்டா'.. இந்த பெயரை கேட்டாலே மொத்த இந்தியாவும் அதிரும்.. நீட், ஜேஇஇ தேர்வர்களின் சொர்க்க பூமி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மும்பை டூ டெல்லி ரயிலில் போனவர்கள் என்றால் நிச்சயம் கோட்டா நகரை கடக்காமல் போக மாட்டீர்கள். இந்த நகரம் தான் நீட் தேர்வு, ஜேஇஇ நுழைவு தேர்வு, ஐஐடி, ஐஐஎம் போன்ற மத்திய அரசின் நுழைவு தேர்வில் வெற்றி பெற விரும்புவோருக்கு சொர்க்க பூமி. எங்கும் பயிற்சி மையங்களும், விடுதிகளுமே நிறைந்த ராஜஸ்தானின் கோட்டா நகரத்தில் பல ஆயிரம் கோடி புழங்குகிறது.

எம்பிபிஎஸ் படிக்க முன்பு பிளஸ் 2 படித்த மதிப்பெண் இருந்தால் போதும். இப்போது அப்படி அல்ல நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அரசு கல்லூரிகளில் சேர வேண்டும் என்றால், 750க்கும் 550க்கும் மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இந்தாண்டு நிலவரம் இது. இன்னும் கூடலாம், குறையலாம். இதனால் பிளஸ் 2 முடித்துவிட்டு ஓராண்டு இங்கு வந்து தங்கி பயிற்சி எடுப்பவர்கள் அதிகமாக உள்ளார்கள்.

Why is Kota the preferred destination for NEET JEE entrance exam takers?

வெறும் நீட் தேர்வுக்காக இங்கு பலரும் வரவில்லை, ஜேஇஇ நுழைவு தேர்வு, ஐஐடி, ஐஐஎம் போன்ற மத்திய அரசின் நுழைவு தேர்வில் வெற்றி பெறவும் இங்கு தான் பலரும் வருகிறார்கள். நாட்டில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று வெற்றிகரமாக கல்லூரிகளில் சேரும் 10 சதவீதம் பேர் இங்கு படித்தவர்கள் என்கிறார்கள்.

நீட் , ஜேஇஇ போன்ற தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றால், இந்தியாவின் புகழ் பெற்ற கல்லூரிகளில் மருத்துவம், பொறியியல் படிப்பில் சேர முடியும். அரசு மருத்துவக்கல்லூரிகளில் சேர வேண்டும் என்றால் நீட் தேர்வில் உச்சபட்ச மதிப்பெண் பெற வேண்டும். இதேபோல் ஜேஇஇ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றால் தான் நம்மூரில் உள்ள மெட்ராஸ் ஐஐடி, மும்பை ஐஐடி , கான்பூர் ஐஐடி, அகமதாபாத்தில் உள்ள ஐஐஎம், பெங்களூரு ஐஐஎம் என புகழ் பெற்ற ஐஐடி, ஐஐஎம்களில் சேர முடியும். இதெல்லாம் எளிதானது அல்ல. கண்டிப்பாக மிகப்பெரிய பயிற்சியும் முயற்சியும் தேவை.

Why is Kota the preferred destination for NEET JEE entrance exam takers?

நீட் மற்றும் ஜேஇஇ நுழைவுத்தேர்வு இந்தியாவில் தேசிய அளவில் நடத்தப்படுவதால் பல லட்சம் பேர் மருத்துவ கனவுடனும், பொறியியல் கனவுடனும் எழுதுகிறார்கள். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் தலைச்சிறந்த கோச்சிங் இன்ஸ்டிடியூட்டில் படித்தவர்களே வெற்றி பெறுகிறார்கள். சாமானியர்களால் வெற்றி பெற முடியாத அளவிற்கு பாடத்திட்டம் இருப்பது தான் இதற்கு காரணம். நீட் தேர்வு மற்றும் ஜேஇஇ தேர்வுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் படி கேள்விகள் தயாரிக்கப்படுகின்றன. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கே சவாலாக இருக்கும் வகையில் தான் தேர்வு இருக்கும் . அந்த தேர்வுகளை எதிர்கொள்ள பயிற்சி மையங்களுக்கு சென்றால் தான் சாத்தியம் என்ற நிலை இந்தியா முழுவதுமே உள்ளது. ஆனால் கோட்டா நகரம் புகழ் பெறக்காரணம். இங்குதான் இந்தியாவின் தலை சிறந்த கோச்சிங் நிறுவனங்கள் இருக்கின்றன. அதுவும் பயிற்சிக்கான கட்டணமும் குறைவாக உள்ளது. மற்ற பகுதியில் 2 லட்சம் அல்லது 3 லட்சம் என்று வசூலிக்கப்பட்டால் ராஜஸ்தானின் கோட்டா நகரில் ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் தான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.இங்கு ஹாஸ்டலில் அறை எடுத்து தங்கி படித்தால் இன்னும் கட்டணம் குறைவு.

எனவே தான் இந்தியாவின் பல்வேறு நகரங்களில இருந்து மக்கள் ராஜஸ்தானின் கோட்டா நகருக்கு பயிற்சிக்காக வருகிறார்கள். கோச்சிங் சென்டர்கள் நிறைந்து வழியும் கோட்டா நகரில் ஆண்டுக்கு ஐந்தாயிரம் முதல் 7 ஆயிரம் கோடிக்கு மேல் பணம் புழங்குகிறது. கோட்டா நகருக்கு வந்து ஓராண்டு கோச்சிங் எடுத்தால் மத்திய அரசு நடத்தும் எந்த நுழைவு தேர்விலும் வெற்றி உறுதி என்று பலரும் நம்புகிறார்கள். இதற்கு சான்றாக ஒவ்வொரு பயிற்சி மையத்திலும் இவர்கள் எல்லாம் இங்கு படித்துதான் டாக்டர் ஆனார்கள் என்றும், ஐஐடியில் சேர்ந்துள்ளார்கள் என்றும் போர்டுகள் தொடங்கும்.

எங்கிருக்கிறது இந்த நகரம்? ராஜஸ்தானின் கோட்டா நகரம் ஜெய்ப்பூரில் இருந்து சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து சுமார் 300 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நகரமாகும். இந்த கோட்டா நகரம் மும்பை டெல்லியை இணைக்கும் முக்கிய ரயில் பாதையில் உள்ளது.

Why is Kota the preferred destination for NEET JEE entrance exam takers?

இங்கு ஆண்டு தோறும் 1,50,000த்துக்கும் அதிகமான மாணவ மாணவியர் ஹாஸ்டல் எடுத்து தங்கி ஓராண்டு பயிற்சியை முடித்து நீட், ஜேஇஇ உள்ளிட்ட தேர்வுகளை எழுதி வருகிறார்கள். கோட்டா நகரில் ஏராளமான கோச்சிங் சென்டர்கள் விடுதி வசதியுடனும் , விடுதி வசதி இல்லாமலும் செயல்படுகின்றன. இங்குதான் நீட் தேர்வில் இந்தியாவிலேயே அதிகம் பேர் வெற்றி பெறும் தலைச்சிறந்த பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. இதேபோல் ஜேஇஇ நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி மையங்களும் உள்ளன. ஜேஇஇ மற்றும் நீட் பயிற்சி மையங்களில் சேர விரும்பும் மாணவர்களுக்கு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பயிற்சி அளிக்கிறார்.

பயிற்சி மையத்தில் கட்டணம் எவ்வளவு: இங்கு பயிற்சி மையங்களில் சேரும் மாணவர்களுக்கு இரண்டு தவணையாக கட்டணம் வசூலிக்கிறார்கள் . 4 விதமாக கோர்ஸ்கள் உள்ளன. இதற்கு 1.19 லட்சம் முதல் 1.30 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கிறார்கள் தங்கும் விடுதி வசதியும் உள்ளது பிஜி ஹாஸ்டல் வசதியும் இருக்கிறது. 3 ஆயிரத்தில் இருந்து 4 ஆயிரம் வரை பிஜி ஹாஸ்டல் கட்டணம் இருக்கும். இது தவிர, சாப்பாடு கட்டணம் தனி. அதிக வசதி உள்ளவர்கள் 15 ஆயிரம் முதல் 20 வரை கூட மாதத்திற்கு பணம் கொடுத்து பிஜி ஹாஸ்டலில் தங்குகிறார்கள்.

அப்படி என்னதான் பயிற்சி கிடைக்கிறது: நீட் தேர்வுக்கான இயற்பியல் வேதியியல், உயிரியல் பாடங்களை மாதிரி தேர்வுகள் மூலம் கரைத்துக் குடிக்க வைப்பார்கள். எப்படியெல்லாம் கேள்வி வரும் என்று முடிவு செய்து அதற்கு தகுந்தாற் போல் ஒவ்வொரு மாதமும் தயார் படுத்துவார்கள். மாணவர்கள் தேறுவார்களா இல்லையா என்பதை சேர்ந்த சில நாட்களில் நடத்தும் பயிற்சியிலேயே கோச்சிங் சென்டர் வைத்துள்ளவர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள். நீட் தேர்வுக்கு தினமும் மணிக்கணக்கில் படிக்க வேண்டியது வரும். ஏனெனில் பிளஸ் 2 வரை வேறு பாடத்திட்டத்தை படித்துவிட்டு, முற்றிலும் புதிய பாடத்திட்டமாக நீட் தேர்வு இருப்பதால் கடினமாகவும் இருக்க வாய்ப்பு உள்ளது.

மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஓராண்டை நீட் தேர்வுக்கு என்றே அர்ப்பணிக்க வேண்டும். அப்படி லட்சங்களை செலவு செய்து படித்தால் நீட் தேர்வு வெற்றி சாத்தியமாகும். சில நேரங்களில் இரண்டாவது முறை அல்லது 3வது முறை படித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்கிற அளவிற்கு நிலைமையும் இருக்கும். இதனால் லட்சங்களை செலவு செய்யும் பெற்றோரால் மட்டுமே தங்கள் பிள்ளைகளை டாக்டர் ஆக்க முடியும் என்கிற நிலை உள்ளது.

அதேபோல் ஐஐடி, ஐஐஎம்களில் சேர்க்கவும் லட்சங்களை கொட்டும் பெற்றோர்களால் தான் முடியும் என்கிற நிலை உள்ளது. அதேநேரம் நீட் அல்லது ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்காக இவ்வளவு செலவு செய்து படித்து தேர்ச்சி பெற முடியாமல் போனாலோ அல்லது அரசு கல்லூரிகளில் சேர முடியாமல் போனாலோ நடுத்தர மக்கள் தாங்க முடியாத துயரத்திற்கு ஆளாகும் நிலையே உள்ளது.

சிம்பிளாக சொல்வது என்றால் நம்மூரில் முன்பு லட்சக்கணக்கில் செலவு செய்து நாமக்கல்லில படிப்பவர்களே தமிழகத்தில் பிளஸ் 2, 10ம் வகுப்பில் முதலிடம் பிடிப்பார்கள். அதற்கு காரணம் அங்குள்ள பள்ளிகளின் கோச்சிங் காரணம். அதைத்தான் கோட்டா நகரம் செய்கிறது. இந்தியாவின் பல மக்கள் நீட் , ஜேஇஇ தேர்வுக்காக அங்குதான் செல்கிறார்கள். லட்சங்களை செலவு செய்து ஓராண்டை தியாகம் செய்தால் எம்பிபிஎஸ் கனவு சாத்தியம் என்கிற நிலை ஏற்பட்டுள்ளதை கோட்டா நகரில் உள்ள பயிற்சி மையங்கள் பயன்படுத்தி கொண்டுள்ளன. மொத்தத்தில் நீட், ஜேஇஇ தேர்வை வைத்து மிகப்பெரிய பிசினஸ் கோட்டாவில் நடக்கிறது. கோட்டா அவர்கள் உற்பத்தி செய்யும் மாணவர்களே வெற்றியாளர்கள் என்கிற அளவுக்கு மாறி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+