Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

4 முத்தான வீரர்களின்.. கெரியரை காலி செய்யும் கேஎல் ராகுல்! இவருக்கு மட்டும் பாரபட்சம்? அந்த காரணமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய அணியில் எந்த பார்மட்டிலும் சரியாக ஆடாத கே. எல் ராகுலை அணியில் இருந்தே நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுவாக வைக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக இன்றைய மேட்சில் அவர் ஆடிய விதம் கடும் விமர்சனங்களை சந்தித்து உள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது. இரண்டாவது போட்டி இன்று டெல்லியில் விறுவிறுப்பாக நடந்தது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் குவாஜா 81 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்தார்.

இதனால் ஆஸ்திரேலிய அணி எப்படியும் 300 ரன்களாவது எடுக்கும். இந்த முறை ஆஸ்திரேலியா இந்தியாவிற்கு டப் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்

ஆனால் ஆஸ்திரேலியாவின் மிடில் ஆர்டர் வீரர்கள் கொஞ்சம் கூட யோசிக்காமல் விக்கெட்டை வாரிக்கொடுத்தனர். அஸ்வின், ஜடேஜா தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். ஷமி பவர் பிளேவிலும், பின்னர் கடைசி கட்டத்திலும் சிறப்பாக பவுலிங் செய்து 4 விக்கெட் எடுத்தார். மிடில் ஆர்டரில் இறங்கிய ஹேண்ட்ஸ்காம்ப் மட்டும் 72 ரன்கள் எடுத்தார். மற்றபடி ஸ்மித், வார்னர் என்று டாப் வீரர்கள் யாரும் சரியாக ஆடவில்லை.இதனால் 263-10 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணி அவுட் ஆனது. இதையடுத்து இந்திய அணியில் கோலி, அக்சர் பட்டேல், அஸ்வின் 3 பேர் மட்டுமே கொஞ்சம் நிதானமாக ஆடினார்கள்.

கோலி

கோலி

கோலி 44 ரன்கள் எடுத்து மிடில் ஓவர்களில் விக்கெட் விழுவதை கட்டுப்படுத்தினார். பின்னர் லோவர் ஆர்டரில் இறங்கிய அக்சர் 74 ரன்கள், அஸ்வின் 34 ரன்கள் எடுத்தனர். இதனால் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டும் 262-10 ரன்கள் எடுத்தது. ஒரு ரன் முன்னிலையோடு இறங்கிய ஆஸ்திரேலிய அணி நேற்று 1 விக்கெட்டை மட்டும் இழந்து 61 ரன்கள் எடுத்து இருந்தது. மூன்றாவது நாளான இன்று ஆஸ்திரேலியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி வெறும் 113 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. ஜடேஜா இன்று 12.1 ஓவர்கள் மட்டும் வீசி 7 விக்கெட் எடுத்தார்.

 இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

115 ரன்கள் வெற்றி இலக்கோடு இறங்கிய இந்திய அணி இன்று 4 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்களை எடுத்து வென்றது. இதன் மூலம் பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி தக்க வைத்துள்ளது. இதில் இரண்டாவது இன்னிங்சில் கே. எல் ராகுல் மீண்டும் சொதப்பி வெறும் 1 ரன் மட்டுமே எடுத்தார் . முதல் இன்னிங்சில் 17 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். நாக்பூர் டெஸ்டில் இவர் முதல் இன்னிங்சில் 20 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்திய அணியில் எந்த பார்மட்டிலும் சரியாக ஆடாத கே. எல் ராகுலை அணியில் இருந்தே நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுவாக வைக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக இன்றைய மேட்சில் அவர் ஆடிய விதம் கடும் விமர்சனங்களை சந்தித்து உள்ளது. கடந்த 2017ல் இருந்து 49 டெஸ்ட் போட்டிகளில் கே. எல் ராகுல் ஆடி இருக்கிறார். இதில் 25 ஆவரேஜ் மட்டுமே வைத்துள்ளார்.

மோசம்

மோசம்


இந்திய அணியில் இவ்வளவு குறைவான ஆவரேஜ் வைத்திருக்கும் டெஸ்ட் வீரர்களுக்கு எல்லாம் வாய்ப்பே கொடுக்கப்படாது. ஆனால் கே. எல் ராகுலுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுகிறது. கடந்த 20 வருடத்தில் இவ்வளவு குறைவான ஆவரேஜ் கொண்ட ஒப்பனர் இந்திய அணியில் இருந்ததே இல்லை. இந்திய அணியில் ஷிகர் தவான் டெஸ்ட் போட்டிகளில் 40+ ஆவரேஜ் வைத்துள்ளார். மயங்க் அகர்வால் 41 + ஆவரேஜ் வைத்துள்ளார். அவர் இரண்டு இரட்டை சதம் வேறு அடித்தார். சுப்மான் கில் சிறப்பான பார்மில் இருக்கிறார். முதல் தர போட்டிகளில், ரஞ்சி போட்டிகளில் சர்ப்ராஸ் கான் மிக சிறப்பாக 100, 200 என்று 40+ ஆவரேஜில் அடித்து வருகிறார். ஆனால் இவர்களுக்கு எல்லாம் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

4 வீரர்கள்

4 வீரர்கள்

இந்த 4 வீரர்களின் இடத்தை தற்போது கே. எல் ராகுல் மிக மோசமான பார்மோடு அடைத்துக்கொண்டு இருக்கிறார். அதிலும் கில் போன்ற வீரர் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான பார்மில் இருக்கையில் இப்படி கே. எல் ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. 2, 10, 23, 22, 10, 12, 8, 10, 2 இதுதான் இந்த தொடருக்கு முன்பாக கடைசியாக 9 டெஸ்ட் போட்டிகளில் கே எல் ராகுல் எடுத்த ரன்கள். இப்படி ஒரு வீரருக்குத்தான் இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. வாய்ப்பு வழங்குவதோடு இல்லாமல் இவருக்கு துணை கேப்டன் பொறுப்பையும் இந்திய அணி வழங்குவதுதான் மிகப்பெரிய காமெடியாக உள்ளது.

அஸ்வின்

அஸ்வின்

அஸ்வின் போன்ற வீரர்கள் இருக்கையில் அவர்களுக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்படாமல் ராகுலுக்கு வழங்கப்படுகிறது. டெயில் என்டர் அஸ்வின் சிறப்பாக ஆடிய அளவிற்கு டாப் ஆர்டர் ஓப்பனர் ராகுல் சிறப்பாக ஆடவில்லை. டெஸ்ட் போட்டிகளில் குறைந்த ஆவரேஜ் வைத்து இருக்கும் தற்கால பேட்ஸ்மேன்களில் இவர்தான் முதலிடத்தில் உள்ளார். அதாவது 45 போட்டிகளுக்கும் மேல் ஆடிய டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் குறைந்த ஆவரேஜ் 30க்கும் கீழ் வைத்து இருக்கும் ஒரே வீரர் இவர்தான்.இவர் கர்நாடகாவை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு அதே மாநிலத்தை சேர்ந்த ராகுல் டிராவிட், பிசிசிஐ சேர்மேன் ரோஜர் பின்னி இருவரும் தொடர் வாய்ப்புகளை வழங்குகிறார்களோ என்ற நெட்டிசன்கள் இடையே கேள்வியும் எழுந்துள்ளது,

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+