எங்காகினும் பார்த்தது உண்டோ.. கோலி இன்று செஞ்ச அந்த செயல்.. கிரிக்கெட் உலகை புரட்டிய 2 சம்பவங்கள்!
சென்னை: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் கோலி நடந்து கொண்ட விதம் கவனம் பெற்றுள்ளது.
பொதுவாக கோலி என்றால் கோபம் அடைவார்... ஆக்ரோஷமாக பேசுவார்.. கடுமையாக நடந்து கொள்வார்.. எதிரணி வீரர்களை வெறுப்பேற்றுவார் என்றெல்லாம் பெயர் இருக்கிறது. முக்கியமாக் ஆஸ்திரேலியா போன்ற ஸ்லெட்ஜிங் செய்யும் அணிகளை அவ்வளவு எளிதில் கோலி விட மாட்டார்.
அவரும் பதிலுக்கு அதிரடியாக ஸ்லெட்ஜிங் செய்வதில் வல்லவர். அப்படிப்பட்ட கோலிக்கு இன்னொரு முகமும் இருக்கிறது. அது மிகவும் சாந்தமான அன்பான முகம். கிரிக்கெட் மைதானத்திலேயே குறும்பு செய்யும் முகம். சமயங்களில் எதிரணி வீரர்களுடன் மிக அன்பாக இருப்பார் இந்திய அணியே பாகிஸ்தான் வீரர்களுடன் மோதினால் கூட கோலி மட்டும் சதாப் கான் உள்ளிட்ட வீரர்களுடன் மிக அன்பாக நட்பாக பழகுவார். அதேபோல் மைதானத்திலேயே டான்ஸ் ஆடுவது, ஜாலியாக காமெடி செய்வது, இங்கும் அங்கும் ஆட்டம் போடுவது என்று குஷியாகி இருப்பார்.

கோலிக்கு இந்த இரண்டு குணங்களும் இருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான் கோலி இதற்கு முன்பும் , இன்றும் மைதானத்தில் செய்த சம்பவம் ஒன்று கவனம் பெற்றுள்ளது. 2019 உலகக் கோப்பையில் ஸ்மித் ஆடிய போது அவரை இந்திய ரசிகர்கள் கிண்டல் செய்தனர். உப்பு தாள் விவகாரத்தில் தடை பெற்றுவிட்டு வெளியே வந்தவருக்கு இப்படி கிண்டல் கேலி பெரிய அழுத்தத்தை கொடுத்தது அப்போது கோலிதான் இதை நிறுத்துங்கள் என்று ரசிகர்களிடம் சொல்லி கைத்தட்டு கொடுக்க சொன்னார். தனக்கு ரைவலாக, போட்டியாக பார்க்கப்பட்ட நபருக்கு கூட இப்படி நடக்க கூடாது என்பதில் கோலி தெளிவாக இருந்தார். இந்த நிலையில் இன்று அவர் நடந்து கொண்ட விதமும் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
( ஒரு நொடி ஜடேஜா சட்டென கோபப்பட.. அப்படியே திரும்பி.. ஏ ஏய் நிறுத்து.. ஆப்கானிஸ்தான் மேட்சில் பரபரப்பு)
இன்று கோலி - ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக்கிடம் நட்பாக நடந்து கொண்டு கட்டிபிடித்தார். ஐபிஎல் சீசனில் கடந்த முறை இவர்கள் கடுமையாக சண்டை போட்டனர். அதன்பின் சமூக வலைத்தளங்களில் கூட நவீன் உல் ஹக் கோலியை கிண்டல் செய்யும் விதமாக போஸ்ட் செய்து இருந்தார். இதில் கம்பீர் கூட கோலிக்கு எதிராக பேசி நவீன் உல் ஹக்கை ஆதரித்து பேசி இருந்தார்.இதையும் கூட நவீன் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து இருந்தார். ஆனால் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் இன்று மேட்சில் ஆட வந்த நவீன் உல் ஹக்கை கட்டியணைத்து கோலி இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். கோலியின் இந்த செயல் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த இரண்டு சம்பவங்கள் கோலி யார் என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டி உள்ளது.

இந்தியா வெற்றி; இதில் முதலில் பேட்டிங் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி தொடக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்தது. டெல்லி பிட்ச் ஸ்பின் பவுலிங்கிற்கு வசதியாக இருக்காது என்பதால் அஸ்வினுக்கு பதிலாக ஷரத்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டு உள்ளார். தொடக்கத்தில் வரிசையாக விக்கெட் விழுந்தது. ஆனால் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி மற்றும் அஸ்மத்துல்லா உமர்சாய் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினர்.
இரண்டு பேருமே மிடில் ஓவர்களில் அதிரடியாக ஆடி ஆப்கானிஸ்தான் அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 80 ரன்கள், அஸ்மத்துல்லா உமர்சாய் 62 ரன்கள் எடுத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஆனால் இரண்டு பேரும் அவுட்டான பின் ஆப்கானிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். இதனால் 272-8 ரன்கள் எடுத்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணி இன்னிங்ஸ் முடிந்தது.இதையடுத்து இறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா 131, இஷான் 47, கோலி 55 ரன்கள் எடுக்க இந்திய அணி வெற்றிபெற்றது.












Click it and Unblock the Notifications