நள்ளிரவில் அப்தாப் வீட்டிற்கு வந்த பெண் டாக்டர்! சாரதா உடல் இருக்கும் போதே நடந்த பரபர சம்பவம்! பகீர்
டெல்லி: இந்தியாவையே அதிர வைத்த சாரதா படுகொலை தொடர்பாக வெளியாகும் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் 26 வயதே ஆன சாரதா என்ற பெண் அவரது காதலனாலேயே படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் அவரது காதலன் அப்தாப் அமீன் என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு நாளும் வெளியாகும் தகவல்கள் சினிமாவையே மிஞ்சும் அளவுக்கு உள்ளது.

என்ன நடந்தது
மகாராஷ்டிராவைச் சேர்ந்த சாரதாவுக்கு ஆன்லைன் டேட்டிங் செயலி மூலம் அப்தாப் உடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. பெற்றோரின் எதிர்ப்பை மீறி, அப்தாப் உடன் லிவ்-இன் உறவுக்கு அந்த பெண் சென்றுள்ளார். இதனால் கோபமடைந்த சாரதாவின் தந்தை அவருடன் ஓராண்டுக்கும் மேலாகப் பேசுவதில்லை.. இதற்கிடையே அவர் சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் எந்தவொரு போஸ்டும் போடாமல் இருக்கவே, அது தொடர்பாக விசாரிக்கும் போதுதான் மகள் மாயமானது தந்தைக்குத் தெரிய வந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து அவர் போலீசாரிடம் புகார் அளித்த நிலையில், தான் இந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.

35 பீஸ்
இந்த விவகாரத்தில் அப்தாப் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே இருவரும் சந்தித்த பம்பிள் டேட்டிங் செயலியிடம் இருந்தும் போலீசார் தரவுகளைப் பெற்றுள்ளனர். சாதராவை கழுத்தை நெறித்து கொலை செய்த பின், அவரது உடலை மொத்தம் 35 பீஸாக அந்த கொடூரன் வெட்டியுள்ளான். அதன் பிறகு, மெல்ல சில நாட்களில் அதை டெல்லியில் பல்வேறு பகுதிகளில் வீசியுள்ளான். இதனிடையே சாரதாவின் உடல் வீட்டில் இருக்கும் போதே, அப்தாப் வேறு ஒரு பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்ததாகக் கூறப்பட்டது.

டாக்டர்
இந்தக் கொலைக்கு அந்த பெண் காரணமாக என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்தனர். இதற்கிடையே சாரதாவின் உடல் வீட்டில் இருந்த போதே, அவர் அழைத்து வந்த பெண் மருத்துவர் என்பது தெரிய வந்து உள்ளது. இந்த பெண்ணையும் சாரதாவை போலவே மொபைல் டேட்டிங் தளமான பம்பிள் மூலமே சந்தித்து உள்ளார். உளவியல் நிபுணரான அந்த பெண்ணை டெல்லி போலீசார் தொடர்பு கொண்டு விசாரித்து உள்ளனர். இவரை மட்டுமின்றி, அப்தாப் பல பெண்களை பம்பிள் தளத்தில் சந்தித்து உள்ளதாகவும் போலீசார் கூறுகின்றனர்.

முக்கியம்
சாரதாவின் மரணத்திற்கு வேறு ஒரு பெண் காரணமாக இருக்கலாம் என்று கோணத்திலும் போலீசார் விசாரிக்கும் நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. முன்னதாக அப்தாப்பிற்கு பாலிகிராஃப் சோதனையும் சமீபத்தில் நடத்தப்பட்டது. சுமார் இரண்டு மணி நேரம் அவரிடம் இந்த உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. இதில் கொலை நடந்தது எப்படி, கொலை செய்தது ஏன், சாரதாவுக்கும் அவருக்கும் இடையே இருந்த உறவு என பல்வேறு விஷயங்கள் குறித்தும் கேள்விகளை எழுப்பினர். மேலும், உடல் பாகங்களை எங்கு எப்படித் தூக்கி எறிந்தான் என்பது குறித்தும் கேட்டறிந்தனர்.

சோதனை
இப்போது அனைத்து உண்மை கண்டறியும் சோதனைகளும் முடிந்துள்ளதாகத் தெரிவித்துள்ள போலீசார், தேவைப்பட்டால் அவர் மீண்டும் கூட சோதனைக்கு அழைக்கப்படலாம் என்றும் தெரிவித்தனர். அடுத்து இன்னும் சில நாட்களில் இதன் முடிவுகள் போலீசாரிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து அவர் எதாவது போதைப்பொருளை எடுத்துக் கொண்டாரா என்ற ரீதியிலும் போலீசார் மருத்துவ பரிசோதனையைச் செய்யவும் முடிவு செய்துள்ளனர்.

கஞ்சா போதை
சாரதாவை கொலை செய்த போது, அப்தாப் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. கொலை செய்த பின்னர், உடலை எப்படி வெட்ட வேண்டும் என்பை கூகுளில் படித்துத் தெரிந்து கொண்டுள்ளான். உடலைத் துண்டுகளாக வெட்ட சுமார் 10 மணி நேரம் வரை ஆனதாகவும் இடையில் டயர்ட் ஆன போதெல்லாம் பீரை குடித்து ஓய்வெடுத்ததாகவும் அவன் போலீசாரிடம் தெரிவித்துள்ளான். மேலும், இதனால் ஏற்பட்ட ரத்த கறையை முழுமையாகத் துடைக்கப் பல மணி நேரம் ஆனதாகவும் தெரிவித்து உள்ளான்.












Click it and Unblock the Notifications