Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாடே கொண்டாடிய முதல் சுதந்திர தினம்! ஆனால் காந்தி மட்டும் இல்லை.. அப்போது என்ன நடந்தது தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாம் 1947 ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரம் பெற்றோம் என்பது அனைவருக்கும் தெரியும். அன்றைய தினம் நாடே கொண்டாட்டத்தில் இருந்த போதும், காந்தி மட்டும் எந்தவொரு கொண்டாட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை. இதற்கு என்ன காரணம்? அப்போது காந்தி எங்கே இருந்தார்.. என்ன செய்து கொண்டு இருந்தார் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

இன்று நாம் இந்தியாவின் 78வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகிறோம். 200 ஆண்டுக் கால பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து நாம் போராடிப் பெற்ற சுதந்திரத்தை நினைவு கூறும் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் இதுவாகும்.

independence day 2024 independence day world 2024

சுதந்திர தினம்: சுதந்திரத்திற்காக நாம் நடத்திய நீண்ட, அமைதியான போராட்டங்கள் வரலாற்றில் எப்போதும் நிலைத்து நிற்கக்கூடியது.. நமது நாட்டின் இந்த சுதந்திரப் போராட்டத்தைப் பல தலைவர்கள் முன்னின்று நடத்தினார்கள். சுதந்திரப் போராட்டத்தில் பலரும் தங்கள் இன்னுயிரைக் கூட தியாகம் செய்துள்ளனர். அவர்களின் தியாகங்களை நாம் இன்று நினைவு கூருகிறோம்.

இந்தியா சுதந்திரப் போராட்டம் என்பது காந்தியின் வருகைக்குப் பின்னரே தீவிரமானதாக மாறி இருக்கிறது. அகிம்சையை முதன்மைக் கொள்கையாக வைத்து சத்தியாகிரக போராட்டத்தை முன்னெடுத்தவர் காந்தி. இதன் காரணமாகவே பொதுமக்கள் அவரை தேசத்தின் தந்தை என்று இப்போதும் அன்புடன் அழைக்கிறார்கள்.

காந்தியடிகள்: ஆனால் 1947 ஆகஸ்ட் 15ம் தேதி ​​நாட்டின் முதல் சுதந்திர தினத்தை மகாத்மா காந்தி கொண்டாடவில்லை என்பது பலருக்கும் தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை. நாட்டின் முதல் சுதந்திர தின விழாலில் காந்தியடிகள் இல்லை. வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த நாளில் காந்தி டெல்லியில் இல்லாததே அதற்குக் காரணமாகும். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

எங்கே இருந்தார்: மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தி இது தொடர்பாக விரிவான விளக்கங்களைக் கொடுத்துள்ளார். அதாவது சுதந்திரம் பெற்ற சமயத்தில் காந்தி கல்கத்தாவில் (கொல்கத்தா) இருந்ததாக அவர் குறிப்பிடுகிறார். பிரிவினை காரணமாக அப்போது வங்கத்தில் மிகப் பெரிய வன்முறை வெடித்த நிலையில், அங்கே அமைதியை மீட்டெடுக்கும் முயற்சிகளில் காந்தியடிகள் இருந்தார். அப்போது கொல்கத்தாவில் வன்முறையைக் கட்டுப்படுத்த காந்தியடிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

சுதந்திரம் பெற்ற சில நாட்களுக்கு முன்பு அதாவது 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி மகாத்மா காந்தி கல்கத்தா சென்றதாக துஷார் காந்தி குறிப்பிடுகிறார். அப்போது அங்கே வன்முறை தொடர்ந்த நிலையில், கல்கத்தா முஸ்லிம் லீக்கின் தலைவரான முகமது உஸ்மான் தலைமையிலான முஸ்லிம்கள் குழு காந்தியை சந்தித்தனர். கல்கத்தாவில் முஸ்லீம் சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்யக் காந்தியடிகள் மேலும் சில நாட்கள் அங்கேயே தங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்றுக் காந்தி அங்கேயே தங்கினார்.

ஆகஸ்ட் 14ம் தேதியன்று மகாத்மா காந்தி ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். பொதுமக்கள் வன்முறை பாதைக்குச் செல்லக்கூடாது என்பதை வலியுறுத்தி அவர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதாக துஷார் காந்தி குறிப்பிடுகிறார்.

என்ன செய்து கொண்டு இருந்தார்: மறுநாள் அதாவது சுதந்திரம் பெற்ற ஆகஸ்ட் 15ம் தேதி நாடே கொண்டாட்டத்தில் இருந்தது. ஆனால், கல்கத்தாவில் இருந்த காந்தி தனது நாளை வழக்கம் போல அதிகாலை 3:45 மணிக்குத் தொடங்கினார். அவருக்குப் பல வாழ்த்து செய்திகள் வந்த போதிலும் அவர் கொண்டாட வேண்டாம் என்ற முடிவில் இருந்ததாக கூறப்படுகிறது.

பிரிவினை காரணமாக வன்முறை வெடித்து இருந்த நிலையில், இதனாலேயே காந்தி கொண்டாட வேண்டாம் என்ற முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. அன்றைய நாள் காந்தி வழக்கம் போலப் பிரார்த்தனை, விரதம், காதி ராட்டை சுற்றும் பணிகளில் ஈடுபட்டார். இதன் காரணமாகவே காந்தியடிகள் முதலாம் சுதந்திர தினத்தன்று எந்தவொரு கொண்டாட்டத்திலும் ஈடுபடவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+