இவங்க சொன்னாலும்.. அவங்க சொல்லணுமே.. பொதுக்குழு வழக்கில் வென்றாலும்.. எடப்பாடிக்கு உள்ள ஒரு சிக்கல்!
எடப்பாடியை இன்னும் நாங்கள் பொதுச்செயலாளராக அங்கீகரிக்கவில்லை என்றது தேர்தல் ஆணையம்.
டெல்லி: அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி இருந்தாலும், இதில் தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவே இறுதியானது ஆகும். தேர்தல் ஆணையம் சுதந்திரமாக என்ன மாதிரியான முடிவை வேண்டுமானாலும் எடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுக்குழு கடந்த வருடம் ஜூலை 11ம் தேதி கூடியது. ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டன.
அதோடு இந்த பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்தே நீக்கப்பட்டார். இந்த பொதுக்குழு செல்லாது என்று ஓ பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

வழக்கு
இதை எதிர்த்து அதிமுக சார்பாக அவைத்தலைவர் தமிழ் மகன், தனியாக எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் வழக்கு தொடுத்தனர். உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்து வந்தது. இந்த வழக்கில்தான் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. அதில் அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடந்தது செல்லும். அதிமுக பொதுக் குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்கிறோம். அதிமுக பொதுக் குழு வழக்கில் உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை ஏற்கிறோம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதோடு பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. ஆனால் அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தாலும் தேர்தல் ஆணையம் கையிலேயே இறுதி முடிவு உள்ளது.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம் இதில் என்ன முடிவை வேண்டுமானாலும் எடுக்கலாம். இப்போது உச்ச நீதிமன்றம் பொதுக்குழு நடந்தது செல்லும் என்று அறிவிக்கிறது. அதை தேர்தல் ஆணையம் இப்போது ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கலாம். தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது. தேர்தல் ஆணைய முடிவுகள் தன்னிச்சையானது. உச்ச நீதிமன்ற முடிவிற்கு எதிராக தேர்தல் ஆணையம் முடிவு எடுத்தாலும், அதை எதிர்த்து வழக்கு போடுவது பெரிதாக பலன் அளிக்காது. இதற்கு முன்பே தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக செயல்பட்ட வரலாறுகள் உள்ளன. எனவே இன்று வந்த தீர்ப்பு என்பது எடப்பாடி ஒரு ப்ளஸ் பாயிண்ட். அதாவது பாருங்க உச்ச நீதிமன்றம் எங்க வாதத்தை ஏற்றுக்கொண்டது.. நீங்களும் ஏற்றுக்கொள்ளுங்கள் என்று வெற்றிபெறும் தரப்பு தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி கோரிக்கை வைக்க முடியும்.

தேர்தல் ஆணைய நிலைப்பாடு
ஆனால் தேர்தல் ஆணையம் இதை ஏற்றுக்கொள்ளுமா என்பது சந்தேகம்தான். ஏனென்றால் சமீபத்தில் புலம் பெயர்ந்தோருக்கு அந்தந்தப் பகுதிகளில் வாக்களிக்க வசதி செய்யும் ரிமோட் வாக்குப்பதிவு முறை குறித்து விளக்கம் கேட்க அதிமுகவிற்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியது. ஜனவரி 16ம் தேதி நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள அதிமுகவிற்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதிமுகவுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்த கடிதத்தை எடப்பாடி தரப்பினர் திருப்பி அனுப்பி உள்ளனர். இதற்கு தற்போது தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு பதில் அளித்துள்ளார். அதில், தேர்தல் ஆணையத்திடம் இந்த தகவல்தான் உள்ளது. இந்திய தேர்தல் ஆணைய ஆவணத்தில் அப்படித்தான் இருக்கிறது. அதில், அதிமுகவில் இன்றைய தேதி வரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள்தான் உள்ளது, என்று குறிப்பிட்டுள்ளார்.

கட்சி
அதன்பின் ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் வழக்கு நடைபெற்றது. அந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி மனுவிற்கு எதிராக வாதம் வைத்த தேர்தல் ஆணையம், எடப்பாடியை இன்னும் நாங்கள் பொதுச்செயலாளராக அங்கீகரிக்கவில்லை. பொதுக்குழு கூடிய விதத்தில் சில கேள்விகள் உள்ளன. பொதுக்குழு முறையாக கூடியதா என்ற கேள்விகள் உள்ளன. இன்னும் நாங்கள் இதில் முடிவும் எடுக்கவில்லை. அதனால் இப்போது வரை எங்கள் ஆவணங்களில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற விவரங்கள் மட்டுமே உள்ளன என்று வாதம் வைத்து. இந்த நிலையில்தான் இன்று தீர்ப்பு எடப்பாடிக்கு ஆதரவாக வந்தாலும் தேர்தல் ஆணையத்தின் முடிவு எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது கன்னித்தீவு கதை போல முடியும் என்று நினைத்தாலும் முடியாமல் இந்த கதை தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications