பொருளாதாரம் பற்றி எதாவது புரிகிறதா? மோடி தொடர்ந்து அமைதி காப்பது ஏன்? ப. சிதம்பரம் அதிரடி கேள்வி!
பொருளாதார சீர் கேட்டை பற்றி பேசாமல் மௌனியாக இருக்கிறார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார்.
Recommended Video
டெல்லி: பொருளாதார சீர் கேட்டை எப்படி எதிர்கொள்வது என்று பிரதமர் மோடிக்கு தெரியவில்லை, அதனால் அவர் தொடர்ந்து அதை பற்றி பேசாமல் மௌனியாக இருக்கிறார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் நேற்று இரவுதான் திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்த நிலையில் இன்று அவர் ராஜ்யசபாவில் கலந்து கொண்டார். அதன்பின் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
இந்தியாவில் மிக மோசமான பொருளாதார மந்த நிலை குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கடுமையான பேசினார். பிரதமர் மோடியை அவர் மிக கடுமையாக இதில் விமர்சனம் செய்தார்.

என்ன பேட்டி
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தனது பேட்டியில், பிரதமர் மோடி தொடர்ந்து பொருளாதார சரிவு குறித்து அமைதி காத்து வருகிறார்.தன்னுடைய அமைச்சர்கள் எல்லோரிடமும் அவர் இது தொடர்பாக பதில் அளிக்க சொல்லிவிட்டார்.அவர்களும் பொருளாதார சீர் குலைவு குறித்து ஏதாவது புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள். மோடிக்கு என்ன நடக்கிறது என்று கூட புரியவில்லை.

பொருளாதாரம்
இதனால் நாம் நினைத்ததை விட பொருளாதாரம் மிக மோசமாக சரிந்து இருக்கிறது. இந்த அரசுக்கு நாட்டை நிர்வகிக்கும் திறமை இல்லை. மோடி திறமை இல்லாத நிர்வாகியாக இருக்கிறார்.

காங்கிரஸ் எப்படி
காங்கிரஸ் கூட்டணிக்கு என்று ஒரு வரலாறு இருக்கிறது, பெருமை இருக்கிறது.2016ல் நாங்கள் பல லட்சம் மக்களை வறுமையில் இருந்து வெளியே கொண்டு வந்தோம். உலகம் முழுக்க அப்போது பொருளாதார மந்த நிலை நிலவியது. ஆனால் இந்தியா அதை சரியாக எதிர்கொண்டு வெற்றிபெற்றது.

சரிவு
ஆனால் பாஜகவால் மிக சாதாரண சரிவை கூட சமாளிக்க முடியவில்லை. உங்களுக்கு எல்லாம் அந்த வரலாறு கிடையாது. உங்கள் வரலாறு எல்லாம் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்த நாடு என்பதாக மட்டுமே இருக்கும்.

என்ன பிரச்சனை
எளிதாக எதிர்கொள்ள வேண்டிய பிரச்னையை அவர்கள் மிக மோசமாக மாற்றிவிட்டனர். இவர் ஜிடிபி தொடர்பாக மிக மோசமான திட்டங்களை கொண்டு வந்துள்ளனர். நானே உங்களிடம் ஜிடிபியை வாசிக்கிறேன். கடந்த 6 ஜிடிபி விவரங்கள் 8, 7, 6.6, 5.8, 5 மற்றும் 4.5 இதுதான்.

மோசம்
இதுவே இந்த அரசின் மோசமான நிலையை உங்களுக்கு உணர்த்திவிடும். மோடி அரசுக்கு இங்கு என்ன நடக்கிறது என்று கூட தெரியவில்லை. அதுதான் அவர்களின் பெரிய பிரச்சனை. அதனால் மோடியும் பேசாமல் அமைதி காத்து வருகிறார், என்று ப. சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications