"டிசம்பர்" சர்ச்சை.. கொரோனா தோற்றம் முதல் உருமாற்றம் வரை! எல்லாமே இந்த மாதத்தில் மட்டும் நடப்பது ஏன்
டெல்லி: இப்போது புதிதாக ஜேஎன் 1 கொரோனா பரவ தொடங்கியுள்ள நிலையில், ஏன் டிசம்பர் மாதங்களில் புதிய வேரியண்ட் பரவுகிறது என்பது குறித்துப் பார்க்கலாம்.
கடந்த 2019ஆம் ஆண்டில் இதேபோன்ற குளிர் காலத்தில் தான் கொரோனா முதலில் பரவ தொடங்கியது. அப்போது புத்தாண்டு சமயத்தில் தான் இந்த கொரோனா வைரஸ் குறித்த தகவல் கிடைத்தது.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது கொரோனா பாதிப்பு குறைந்துவிட்டது, ஆனால் கொரோனா வைரஸ் தொடர்ச்சியாகப் புதிது புதிதாக உருமாறிக் கொண்டே இருக்கிறது.
ஜே என் 1 கொரோனா: இந்தாண்டு டிசம்பர் மாதம் புதிதாக ஜே என் 1 என்ற வகை கொரோனா கண்டறியப்பட்டது. இது தீவிர பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்ற போதிலும், இதனால் கொரோனா கேஸ்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு இந்த புது ஜேஎன் 1 கொரோனாவை உலக சுகாதார அமைப்பு கண்காணிக்க வேண்டிய கொரோனாவாக பட்டியலிட்டுள்ளது.
இந்தாண்டு என்று இல்லை கடந்த காலங்களில் டிசம்பர் மாதங்களில் தான் புது வகை கொரோனா தோன்றி இருக்கிறது. 2020 டிசம்பர் மாதம் மூன்று பெரிய திரிபுகள் ஏற்பட்டது. ஆல்பா (பி.1.1.7), பீட்டா (பி.1.351) மற்றும் காமா (பி.1) ஆகிய வேரியண்ட்கள் பரவின. ஓராண்டுக்குப் பிறகு டிசம்பர் 2021இல் புதிதாகப் பரவிய ஓமிக்ரான் கொரோனா மீண்டும் பல நாடுகளில் ஓமிக்ரான் பாதிப்பை ஏற்படுத்தியது.
நாட்டில் திடீரென எகிறும் கொரோனா.. 4000ஐ தொட்ட ஆக்டிவ் கேஸ்கள்.. தென் மாநிலங்களில் தான் நிலைமை மோசம்
வேரியண்ட்கள்: அதற்கு அடுத்த ஆண்டு, 2022 டிசம்பரில் புதிய வேரியண்ட் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், பிஏ 2, பிஏ 5 என்ற துணை வேரியண்ட்கள் ஏற்பட்டது. இவை புது கொரோனா வேரியண்ட்கள் ஆகும். கொரோனா வைரஸ் தோன்றியது முதல் அதன் பெரும்பாலான திரிபுகள் டிசம்பர் மாதம் தான் ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் குறித்து நாம் பார்க்கலாம்.
இதற்கு முக்கிய காரணமே டிசம்பரில் இருக்கும் குளிர் காலம் தான். டிசம்பர் மாதம் இருக்கும் குளிரான வானிலை கொரோனா கேஸ்கள் அதிகரிக்கக் காரணமாக இருப்பதைப் பல ஆய்வுகள் சுட்டுக் காட்டுகின்றன. நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், டெல்டா கொரோனா பரவல் குறித்து ஆய்வு நடத்தினர். அதில் கொரோனா பரவ வானிலை ஒரு முக்கிய காரணமாக இருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
என்ன காரணம்: கோடைக் காலத்தில் இருந்து குளிர்காலத்திற்கு வரும் போது, வெப்பநிலை குறைகிறது. மேலும், வறண்ட காற்று, குளிரான வெப்பம் இணைந்து கொரோனா வேகமாகப் பரவும் சூழலை ஏற்படுத்துகிறது. சீன ஆய்வாளர்களும் இதை உறுதி செய்துள்ளனர்.. வெயில் காலத்தில் கொரோனா பரவல் குறைவாக உள்ளதாகத் தெரிவித்துள்ள ஆய்வாளர்கள், குளிர் காலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து மருத்துவர் திபு கூறுகையில், "மற்ற சுவாச வைரஸ்களைப் போலவே கொரோனாவும் பருவத்தின் அடிப்படையில் பரவும்.. இதில் இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று கொரோனா.. மற்றொன்று நமது உடல்கள். வைரஸ்கள் பரவும் போது அது புதிதாக மாறுகிறது. இப்படி வைரஸ் மாறிக் கொண்டே இருப்பதால் நமது உடல் அதைச் சமாளிக்கக் கூடுதலாக வேலை செய்யும். இது நமது உடலைப் பலவீனப்படுத்துகிறது" என்றார்.
காரணங்கள்: மேலும், டிசம்பர் மாதம் தான் பொதுவாகப் பயணங்கள் அதிகமாக இருக்கும். கிறிஸ்துமஸ், புத்தாண்டு என விடுமுறை நாட்களில் அதிகப்படியான மக்கள் பயணம் செய்வார்கள். இதுவும் கொரோனா பரவ காரணமாக இருக்கிறது. கொரோனா பரவ பரவ அது புதிதாக உருமாற்றம் அடையவும் வாய்ப்புள் அதிகம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications